கத்திகள், கோடரிகளை பள்ளிவாசலுக்கு மீளவும் கையளிக்க முற்பட்ட விவகாரம்

பதில் பொறுப்பதிகாரி இடைநிறுத்தம்

0 643

பள்­ளி­வாசல் ஒன்­றி­லி­ருந்து மீட்­கப்­பட்ட கத்தி மற்றும் கைக் கோட­ரி­களை அனு­ம­தி­யின்றி மீண்டும் பள்­ளி­வா­ச­லுக்கு வழங்க முற்­பட்ட வெலம்­பொட பொலிஸ் நிலை­யத்தின் பதில் பொறுப்­ப­தி­கா­ரியை பணி­யி­லி­ருந்து இடை நிறுத்­தி­யுள்­ள­தாக தெரி­வித்த பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர, சம்­பவம் தொடர்பில் கண்டி பிரதி பொலிஸ் மா அதி­பரின் கீழ் விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­வ­தா­கவும் குறிப்­பிட்டார்.

வெலம்­பொடை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிறி­தொரு விசேட பணியில் ஈடு­பட்­டி­ருந்­த­தனால், குறித்த பொலிஸ் நிலை­யத்­திற்கு பதில் பொறுப்­ப­தி­கா­ரி­யாக பொலிஸ் பரி­சோ­தகர் பந்­துல பண்­டார பணியில் அமர்த்­தப்­பட்­டி­ருந்தார்.

இந்­நி­லையில் கடந்த ஏப்ரல் 21 சம்­ப­வத்­திற்குப் பின்னர் கண்டி – வெலம்­பொடை பகு­தியின் பள்­ளி­வா­ச­லி­ருந்து 76 கத்­தி­களும் , 13 கைக் கோட­ரி­களும் மீட்­கப்­பட்டு வெலம்­பொடை பொலிஸ் நிலை­யத்தில் வைக்­கப்­பட்­டி­ருந்­தன. இவ்­வாறு வைக்­கப்­பட்­டி­ருந்த வழக்கு பொருட்­களை நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை பொலிஸ் நிலைய பதில் பொறுப்­ப­தி­கா­ரி­யாக கட­மை­யி­லி­ருந்த பொலிஸ் பரி­சோ­தகர், எந்த உய­ர­தி­கா­ரி­க­ளி­னதும் அனு­ம­தி­யின்றி மீண்டும் பள்­ளி­வா­ச­லுக்கு கைள­ளிக்க முயற்­சிப்­ப­தாக தகவல் கிடைத்­துள்­ளது. இதனை தொடர்ந்து விரைந்து செயற்­பட்ட பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி இவ்­வாறு வழக்கு பொருட்­களை கைய­ளிப்­பதை தடுத்­துள்ளார்.

மேற்­படி விடயம் தொடர்பில் கவனம் செலுத்­திய பொலிஸ் தலை­மை­யகம் சம்­பவம் தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளு­மாறு கண்டி பிரதி பொலிஸ் மா அதி­ப­ருக்கு அறி­வு­றுத்­தி­யுள்­ளது. .

இதற்­க­மைய கண்டி பிரதி பொலிஸ் மா அதிபர் வெலம்­பொடை பொலிஸ் நிலை­யத்­திற்கு சென்று சம்­பவம் தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்றார். அத்­துடன் வெலம்­பொட பொலிஸ் நிலைய பதில் பொறுப்­ப­தி­காரி தற்­கா­லி­க­மாக பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார்.
அதேவேளை இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பிரதி பொலிஸ்மாதிபரின் தலைமையில் விஷேட பொலிஸ் குழு முன்னெடுத்து வருகின்றது.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.