ஹஜ் செய்தித் தொகுப்பு – 2019

0 724
  • இவ் வருடம் ஹஜ் கட­மை­யினை நிறை­வேற்­று­வ­தற்கு நேற்று முன்­தினம் வரை 1.7 மில்­லியன் யாத்­தி­ரி­கர்கள் மக்­கா­வுக்கு வருகை தந்­துள்­ளனர். கடந்த திங்­கட்­கி­ழமை வரை விமானம் மூலம் 1,664,974 பேரும், தரை மார்க்­க­மாக 92,844 பேரும் கடல் மார்க்­க­மாக 17,249 பேரு­மாக 1,775,067 யாத்­தி­ரி­கர்கள் வருகை தந்­துள்­ள­தாக சவூதி அரே­பிய உத்­தி­யோ­க­பூர்வ செய்தித் தாப­ன­மான சவூதி ஊடக முகவரகம் தெரிவித்துள்ளது.
  • சவூதி அரே­பிய சிவில் விமான அதி­கார சபை இம்­முறை நடை­மு­றைப்­ப­டுத்­திய உயர்­த­ர­மான நிய­மங்கள் கார­ண­மாக ஜித்­தா­விலும் மதீ­னா­விலும் யாத்­தி­ரி­கர்கள் விமான நிலை­யங்­களில் சிறந்த சேவை­களைப் பெற்றுக் கொண்­டனர். குறிப்­பாக ஜித்­தா­வி­லுள்ள மன்னர் அப்துல் அஸீஸ் விமான நிலையம் ஊடாக 805,290 பேர் வருகை தந்­துள்­ளனர். விமான நிலை­யங்கள் ஊடாக மாத்­திரம் இம்­முறை வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து ஹஜ்­ஜுக்கு வந்­த­வர்­களின் எண்­ணிக்கை 1,755,768 ஆகும். சவூதி விமான நிலை­யங்­களில் யாத்­தி­ரி­கர்கள் அதிக நேரத்தைச் செல­விட அவ­சி­ய­மேற்­ப­டாத வகையில் துரித சேவையை வழங்கும் வகையில் அனைத்தும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.
  • ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்குப் பய­ன­ளிக்கும் வகையில் சவூதி ஹஜ் அதி­கா­ரிகள் இரு வேறு அப்­ளிக்­கே­ஷன்­களை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளனர். 9 மொழி­களில் இயங்கக் கூடிய இந்த அப்­ளிக்­கே­ஷன்­களை ஹாஜிகள் தமது கைய­டக்கத் தொலை­பே­சியில் நிறுவிக் கொள்­வதன் மூலம் அவ­சர உத­விகள், புனித தலங்கள் ,நாண­ய­மாற்­றுகள், உண­வ­கங்கள் மற்றும் தங்­கு­மி­டங்கள் போன்­ற­வற்றை இல­குவில் கண்­ட­றியக் கூடி­ய­தா­க­வி­ருக்கும். இணை­யத்­தள இணைப்பு இன்­றியே இயங்கக் கூடிய வகையில் இந்த அப்­ளிக்­கே­ஷன்கள் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளன. இது­வரை இந்த அப்­ளி­கே­ஷன்கள் 10 ஆயிரம் தட­வைக்கும் மேல் தர­வி­றக்கம் செய்­யப்­பட்­டுள்­ளன. இத­னுடன் இணைக்­கப்­பட்­டுள்ள வழி­காட்டி மூலம் கிப்லா, தொழுகை நேரம், காலநிலை போன்றவற்றையும் அறிந்து கொள்ள முடியும்.
  • சவூதி இஸ்­லா­மிய விவ­கார அமைச்சர் ஷெய்க் அப்துல் லதீப் அஷ் ஷெய்க் இவ்­வ­ருட ஹஜ் கண்­காட்­சியை ஆரம்­பித்து வைத்தார். இந்தக் கண்­காட்­சியில் மக்­காவின் வர­லாறும் குடி­யேற்­றமும் ஸம்ஸம் நீரூற்றின் கதை மற்றும் கஃப­துல்லா கட்­டப்­பட்ட முறை போன்­ற­வற்றை விளக்கும் அம்­சங்கள் உள்­ள­டங்­கி­யுள்­ளன. மேலும் ஹஜ்ஜின் வர­லாற்றைக் கூறும் அம்­சங்கள் மற்­றொரு மண்­ட­பத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

 

மக்கவிலிருந்து எஸ்.என்.எம். ஸுஹைல்

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.