ஹக்கீம், ரிஷாட் உட்பட நால்வர் பதவியேற்பு

ஹரீஸ், பைசல் காசிம், அலிஸாஹிர் பதவியேற்பதில் தாமதம்

0 657

ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்­பெற்ற தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கிய நெருக்­கடி நிலைக்குத் தீர்­வாகத் தங்­க­ளது அமைச்சுப் பத­வி­களை கூட்­டாக இரா­ஜி­னாமா செய்து கொண்ட முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் மேலும் நால்வர் மாத்­திரம் நேற்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னி­லையில் தங்­க­ளது முன்­னைய அமைச்சுப் பத­வி­களை பொறுப்­பேற்­றுக்­கொண்­டனர். அமைச்சுப் பத­வி­யேற்கும் நிகழ்வு நேற்று இரவு 7.30 மணி­ய­ளவில் ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்தில் இடம்­பெற்­றது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் , அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் ரிசாத் பதி­யுதீன், அக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான அமீர் அலி, அப்­துல்லாஹ் மஹ்ரூப் ஆகி­யோரே நேற்று மாலை பத­வி­களை மீளப் பொறுப்­பேற்­ற­வர்­க­ளாவர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சார்பில் முன்னர் இரா­ஜாங்க அமைச்சு பத­வி­களை வகித்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எச். எம். எம். ஹரீஸ், பைசால் காசிம் மற்றும் அலி சாஹிர் மௌலானா ஆகியோர் நேற்­றைய தினம் பத­வி­களை ஏற்­க­வில்லை. இம் மூவரும் பிறி­தொரு தினத்தில் தமது முன்­னைய அமைச்சுப் பத­வி­களை பொறுப்­பேற்பர் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ரவூப் ஹக்­கீமும், ரிசாத் பதி­யு­தீனும் அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள முன்­னைய அமைச்சுப் பத­வி­க­ளையும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எம்.எஸ்.எஸ்.அமீர்­அலி இரா­ஜாங்க அமைச்சுப் பத­வி­யையும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அப்­துல்லாஹ் மஹ்ரூப் பிர­தி­ய­மைச்சர் பத­வி­யையும் பொறுப்­பேற்­றுக்­கொண்­டனர்.

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் 9 பேர் கூட்­டாகத் தங்­க­ளது அமைச்சுப் பத­வி­களை இரா­ஜி­னாமா செய்­தி­ருந்­தனர். இவர்­களில் ஐக்­கிய தேசியக் கட்­சியைச் சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கபீர் ஹாசிமும், எம்.எச்.ஏ.ஹலீமும் ஏற்­க­னவே தங்கள் அமைச்சுப் பத­வி­களைப் பொறுப்­பேற்­றுக்­கொண்­டமை குறிப்­பி­டத்­தக்க தாகும்.

அமைச்சுப் பத­வி­களை மீளப்­பொ­றுப்­பேற்­பது தொடர்பில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முஸ்லிம் பாரா­ளு­மன்ற ஒன்­றி­யத்தின் தலைவர் ஏ.எச்.எம்.பௌசி தலை­மையில் ஜனா­தி­ப­தி­யு­டனும், பிர­த­ம­ரு­டனும் பல கட்ட பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தினர். பல கோரிக்­கை­க­ளையும் முன்­வைத்­தனர்.
இறு­திக்­கட்ட பேச்­சு­வார்த்தை நேற்று முன்­தினம் மாலை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வு­டனும் அதை­ய­டுத்து நேற்­றுக்­காலை அமைச்சர் வஜிர அபே­வர்­த­ன­வு­டனும் நடை­பெற்­றது. அமைச்சர் வஜிர அபே­வர்த்­த­ன­வுடன் கல்­முனை வடக்கு உப பிர­தேச செய­லக விவ­காரம் மற்றும் தோப்பூர், வாழைச்­சேனை பிர­தேச செய­லக விவ­கா­ரங்கள் கலந்­து­ரை­யா­டப்­பட்­டன.

பிர­த­ம­ரு­ட­னான பேச்­சு­வார்த்­தை­யின்­போது வன்­செ­யல்­க­ளுக்­கான நஷ்­ட­ஈ­டுகள், அம்­பாறை பள்­ளி­வா­ச­லுக்­கான நஷ்­ட­ஈ­டுகள், கல்­முனை உப பிர­தேச செய­லக விவ­காரம் என்­ப­ன­வற்­றுக்­கு­ரிய தீர்­வு­க­ளுக்­கான உறு­தி­மொ­ழிகள் வழங்­கப்­பட்­டன. அமைச்சர் வஜிர அபே­வர்­த­ன­வு­ட­னான பேச்­சு­வார்த்­தை­யின்­போது சுமுக தீர்­வு­க­ளுக்கு உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டது.

அம்­பாறை ஜும்ஆ பள்­ளி­வா­ச­லுக்­கான நஷ்­ட­ஈடு 27 மில்­லியன் ரூபா அடுத்த வாரம் வழங்­கு­வ­தற்கு ்­ப­ன­வற்­றுக்­கு­ரிய தீர்­வு­க­ளுக்­கான உறு­தி­மொ­ழிகள் வழங்­கப்­பட்­டன. அமைச்சர் வஜிர அபே­வர்­த­ன­வு­ட­னான பேச்­சு­வார்த்­தை­யின்­போது சுமுக தீர்­வு­க­ளுக்கு உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டது.

அம்­பாறை ஜும்ஆ பள்­ளி­வா­ச­லுக்­கான நஷ்­ட­ஈடு 27 மில்­லியன் ரூபா அடுத்த வாரம் வழங்­கு­வ­தற்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

ஏ.ஆர்.ஏ.பரீல்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.