முஸ்லிம் அரசியல் தலைமைகளின் நல்லதொரு நகர்வு

0 1,419

சுதந்­தி­ரத்­திற்குப் பின் முஸ்­லிம் அரசியல் தலை­மைகள் சமூ­கத்தின் நலன் கருதி பல்­வேறு கண்­ணோக்கில் செயற்­பட்­டார்கள். அவர்கள் எப்­போதும் தேசிய நீரோட்­டத்­துடன் சமாந்­த­ர­மாகச் சென்­றார்கள். குறிப்­பாக சேர் ராசிக் பரீட், பதியுதீன் மஹ்மூத், எம்.எச். முஹம்மத், எம்.ஏ. பாக்கீர் மாக்கார், ஏ.சீ. எஸ். ஹமீட் போன்றோர் பெரும்­பான்மை மக்­களின் மன­தை­வென்று அவர்­க­ளது விருப்­பத்­துடன் முஸ்­லிம்­க­ளுக்­கு­ரிய உரி­மை­க­ளையும் சலு­கை­க­ளையும் பெற்­றனர். குறிப்­பாக முஸ்லிம் தனியார் சட்டம், காதி நீதி­மன்­றங்கள், இலங்கை வானொலி முஸ்லிம் சேவை, முஸ்லிம் பாட­சா­லை­களின் தோற்றம், நோன்பு விடு­முறை, முஸ்லிம் களுக்­கென சமய, கலா­சார அமைச்சு ஒன்று அமைக்­கப்­படல் என பல்­வேறு நட­வ­டிக்­கை­களை இங்கு சுட்­டிக்­காட்ட முடியும்.

சென்ற மூன்று தசாப்­தங்­க­ளுக்கு முன் நடை­பெற்ற வடக்கு– கிழக்கு தமிழ் மக்­களின் உரி­மைப்­போ­ராட்டம் அப்­பி­ர­தே­சங்­களில் வாழ்ந்த முஸ்லிம் மக்­களை பல்­வேறு நெருக்­கு­தல்­க­ளுக்­குள்­ளாக்­கி­யதால் தம்மைப் பலப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­காக எம்.எச்.எம். அஷ்ரப் முஸ்­லிம்­க­ளுக்­கென தனி­யான ஒரு அர­சியல் கட்­சியை ஆரம்­பித்தார். அவர் பேரம் பேசும் அர­சியல் கோட்­பாட்டில் நின்று முஸ்­லிம்­க­ளுக்கு பல்­வேறு சலு­கை­களைப் பெற்­றுக்­கொ­டுத்தார். குறிப்­பாக தென் கிழக்குப் பல்­க­லைக்­க­ழகம், ஒலுவில் துறை­முகம் மற்றும் சில அபி­வி­ருத்தித் திட்­டங்­களைக் குறிப்­பிட முடியும்.

அஷ்ரபின் மறை­வுக்குப் பின் முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியில் ஏற்­பட்ட பிளவு, பல்­வேறு முஸ்லிம் அர­சியல் கட்­சி­களின் தோற்றம், யாப்பு சீர்­தி­ருத்­தங்கள், எல்லை நிர்­ண­யத்தில் ஏற்­பட்ட மாற்­றங்கள், பேரி­ன­வாத கோசங்கள், உல­கிலும் இலங்­கை­யிலும் முஸ்­லிம் சமூ­கத்தைப் பற்றி ஏற்­பட்­டுள்ள தப்­ப­பிப்­பி­ரா­யங்கள், கசப்­பு­ணர்­வுகள் கார­ண­மாக தனித்து இயங்கும் அர­சியல் கோட்­பாட்டின் சாத்­தி­யப்­பாடு பற்றி பல்­வேறு சந்­தே­கங்கள் பிறந்­துள்­ளன. ஆகவே முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் தேசிய கண்­ணோக்கில் செயற்­படும் அவ­சியம் இப்­போது ஏற்­பட்­டுள்­ளது.

அண்­மையில் நடை­பெற்ற குண்டு வெடிப்­புகள் முழு முஸ்லிம் சமூ­கத்தின் மீதும் சந்­தே­கங்­களை ஏற்­ப­டுத்­தி­யது. இது முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராகச் செயற்­படும் சில பேரி­ன­வாத சக்­தி­க­ளுக்கு நல்­ல­தொரு சந்­தர்ப்­ப­மாக மாறி­யது. ஆகவே முஸ்லிம்களுக்கு எதி­ரான பிர­சா­ரங்­களை முடுக்­கி­விட்­டார்கள். ஒரு முஸ்லிம் அமைச்­ச­ரையும் இரு ஆளு­நர்­க­ளையும் இந்­நி­கழ்­வோடு தொடர்­பு­ப­டுத்த முயன்­றனர். முஸ்லிம் சமூகம் இது­வரை அனு­ப­வித்­து­வரும் உரி­மை­க­ளையும் சலு­கை­க­ளையும் இரத்­துச்­செய்ய வேண்டும் என்ற கோசங்கள் முன்­வைக்­கப்­பட்­டன. அமைச்சர் ரிசாட் பதி­யு­தீனும் இரு ஆளு­நர்­களும் பதவி வில­க­வேண்டும் என்று முன்­வைக்­கப்­பட்ட நிபந்­த­னைகள், கண்­டியில் பெரும்­பான்மை மக்கள் மத்­தியில் ஓர் உணர்ச்சிப் பேர­லையைத் தோற்­று­வித்­தது. இது இலங்கை வாழ் முழு முஸ்லிம் சமூ­கத்­தையும் பலி­கொண்டு விடுமோ என்ற ஒரு பதற்ற நிலை ஏற்­பட்­ட­போது நமது முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் ஒன்­று­பட்டு எடுத்த தீர்­மா­னங்கள் பொங்கி எழுந்த உணர்­வுகள் தணி­வ­தற்கு வழி­ய­மைத்­தது. இந்தத் தீர்­மானம் இலங்கை முஸ்­லிம்­களின் அர­சியல் வர­லாற்றில் ஒரு திருப்­ப­மாக அமைந்­தது.

தற்­போது முஸ்லிம் தனியார் சட்­டத்­தையும் விமர்­சிக்கத் துவங்­கி­யுள்­ளனர். முஸ்­லிம்­க­ளுக்கு தனி­யான சட்­டங்கள் அவ­சியம் இல்லை எனவும் வாதி­டு­கின்­றனர். பெரும்­பான்மை மக்­க­ளுக்கு முஸ்லிம் தனியார் சட்­டங்கள் பற்­றிய தெளிவு குறைவு, அண்­மைக்­கா­லத்தில் முஸ்­லிம்­க­ளது கலா­சாரம் நடத்­தைகள் குறித்து ஏற்­பட்­டுள்ள சந்­தே­கங்­களும் இதற்கு முக்­கிய கார­ணங்­க­ளாகும். முஸ்லிம் தனியார் சட்­டத்தில் இலங்கை முஸ்­லிம்­க­ளின் தேவை­களை அனு­ச­ரித்து சில திருத்­தங்­களைச் செய்­வ­தற்கு உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சரின் தலை­மையில் எட்டு வரு­டங்­க­ளுக்கு முன்பே ஒரு குழு நிய­மிக்­கப்­பட்­டது. இக்­குழு ஆரம்­பத்தில் ஒற்­று­மை­யாகச் செயற்­பட்­டது. பின் சிபா­ரி­சு­களைச் சமர்ப்­பிக்கும் இறு­திக்­கட்­டத்தில் அபிப்­பி­ராய பேதங்­களால் பிள­வு­பட்டு இரு வெவ்­வே­றான அறிக்­கை­களை நீதி­ய­மைச்­சுக்குச் சமர்ப்­பித்­தார்கள். அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பிடி­வாதப் போக்கே இச் சட்டச் சீர்­தி­ருத்­தங்கள் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிப்­ப­தற்­கான கால­தா­மதம் ஏற்­பட்­ட­தற்கு முக்­கிய காரணம் என்ற விமர்­ச­னங்­களும் முன்­வைக்கப் படு­கின்­றன. எது எவ்­வா­றி­ருப்­பினும் ஷரீஆ வரம்­பு­க­ளுக்குள் இலங்கை முஸ்­லிம்­களின் சமூகத் தேவை­களைக் கருத்­தில்­கொண்டு பெரும்­பான்மை மக்­களின் அபிப்­பி­ரா­யங்­க­ளையும் உள்­வாங்கி, முஸ்லிம் தனியார் சட்­டத்தை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிப்­பது என மூத்த முஸ்லிம் அர­சி­யல்­வாதி ஏ.எச்.எம். பௌஸியின் தலை­மையில் சகல முஸ்லிம் பாரா­ளு­மன்ற அங்­கத்­த­வர்­களும் ஏக­ம­ன­தாகத் தீர்­மா­னித்­துள்­ளதை மிக முக்­கி­ய­மான ஆக்­க­பூர்­வ­மான இரண்டாம் கட்ட நகர்­வாகக் கரு­த­மு­டியும். அர­சியல் தலை­மைகள் அர­சியல் நோக்­குடன் பிரிந்து செயல்­படும் போது அவர்­க­ளுக்கு சமூ­கத்தின் நலன்­க­ருதி ஆக்­க­பூர்­வ­மான முடி­வுகள் தைரி­யத்­துடன் எடுக்க முடி­யா­தி­ருந்­தது. மாற்­றத்தை விரும்­பாத சக்­திகள் எதிர்ப்­பி­ர­சா­ரங்­களை தனிப்­பட்ட தலை­மை­கள் மீது மேற்­கொள்­ளலாம் என்ற அச்சம் எல்லா முஸ்லிம் அர­சியல் தலை­மை­க­ளி­டமும் காணப்­பட்­டது. தற்­போது முஸ்லிம் தலை­மை­கள் கூட்டு முடி­வு­களின் பெறு­ம­தியை உணர்ந்­துள்­ளனர். இது தொட­ரு­மாயின் சமூ­கத்­துக்கு நல்­ல­தொரு எதிர்­காலம் பிறக்கும்.

ஆனால் இந்தக் கூட்டு முஸ்லிம் அர­சியல் தலை­மை­களை ஒரு தனிக்­கட்­சி­ய­மைக்கும் எல்­லைக்கு எடுத்­துச்­சென்­று­விடக் கூடாது. தனி­யான முஸ்லிம் கட்சி உரு­வா­வது வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பகு­தி­களில் வாழும் முஸ்­லிம்­களை பெரும்­பான்மை மக்­க­ளி­ட­மி­ருந்து தனிமைப்படுத்தி விடும். ஆகவே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பல கட்சிகளில் இருந்துகொண்டு முஸ்லிம் சமூகப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்போது அழுத்தம் கொடுக்கும் குழுவாக (Pressure Group) செயற்படுவதே மேலானது. ஆனால் வடக்கு – கிழக்கில் செயற்படும் எல்லா முஸ்லிம் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு கட்சியை உருவாக்கி வடக்கு –கிழக்கு தமிழ் தலைமைகளுடன் புரிந்துணர்வுடன் செயற்படுவது நல்ல விளைவுகளை ஏற்படுத்தலாம். வடக்கு – கிழக்குக்கு வெளியே வாழும் சிறுபான்மை முஸ்லிம்களும் தமிழர்களும் தமது உரிமைகளைப் பெறுவதற்கு அது வழியமைத்துக் கொடுக்கலாம்.

பேராசிரியர் ஏ.ஜீ. ஹுசைன் இஸ்மாயில்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.