2014 இல் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத குழுக்கள் தொடர்பில் அறிய முடிந்­தது

ஸஹ்ரான் 2015 லேயே பயங்கரவாதியாக உருவானார் என்கிறார் என்.கே.இலங்ககோன்

0 545

2014 ஆம் ஆண்­டு­களில் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதக் குழுக்கள் குறித்து அறி­ய­மு­டிந்­தது. 2014 ஆம் ஆண்டு மற்றும் 2015 ஆரம்ப கட்­டங்­களில் வந்த புல­னாய்வுத் தக­வல்­களில் இலங்­கைக்குள் அடிப்­ப­டை­வாத குழுக்கள் குறித்து தக­வல்கள் கிடைக்­க­வில்லை. அப்­போ­தெல்லாம் ஐ.எஸ். பயங்­க­ர­வாதம் மற்றும் அந்த அமைப்பில் இணைந்­து­கொள்ள இலங்­கை­யி­லி­ருந்து சிரி­யா­வுக்கு சென்ற நபர்கள் குறித்தே அதி­க­மாக புல­னாய்­வுத் தக­வல்கள் கிடைத்­தன என முன்னாள் பொலிஸ்மா அதி­பரும் ஈஸ்டர் தாக்­குதல் குறித்து ஆராய ஜனா­தி­பதி நிய­மித்த ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ரு­மான என்.கே.இலங்­ககோன் பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு முன்­னி­லையில் தெரி­வித்தார். 

ஈஸ்டர் தாக்­குதல் குறித்து விசா­ர­ணை­களை நடத்தி பாரா­ளு­மன்­றத்­திற்கு அறிக்கை வழங்க நிய­மிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு முன்­னி­லையில் நேற்று சாட்­சி­ய­ம­ளிக்க வர­வ­ழைக்­கப்­பட்ட முன்னாள் பொலிஸ்மா அதி­பரும் ஈஸ்டர் தாக்­குதல் குறித்து ஆராய ஜனா­தி­பதி நிய­மித்த ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ரு­மான என்.கே.இலங்­ககோன் வாக்­கு­மூலம் வழங்­கு­கையில்,
இவ்­வா­றான தாக்­குதல் நடத்­தப்­போ­வ­தாக புல­னாய்வு தகவல் கிடைத்த முதல் தடவை இது­வாகவே இருந்­தி­ருக்கும். எனக்கு தெரிய வேறு ஒரு சந்­தர்ப்­பத்தில இவ்­வா­றான புல­னாய்வுத் தகவல் வந்­த­தில்லை. ஆகவே இதனை அதி­கா­ரிகள் கருத்தில் கொண்­டி­ருக்க வேண்டும். அத்­துடன் இது உட­னடித் தாக்­குதல் என்று குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. ஆகவே அதற்­கான கவ­னத்தை செலுத்­தி­யி­ருக்க வேண்டும். இவ்­வா­றான கார­ணி­களை பார்க்­கையில் இந்த தகவல் குறித்து அதிக கவனம் செலுத்தி நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்க வேண்டும். அதேபோல் எங்கு தாக்­குதல் நடத்­தப்­படும் என உறு­தியாக் கூறப்­ப­டாத நிலையில் சகல அதி­கா­ரி­களும் கவ­ன­மாக செயற்­பட்­டி­ருக்க வேண்டும்,

முஸ்லிம் அடிப்­ப­டை­வாத செயற்­பா­டுகள் குறித்து…

நான் 2016 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றேன். 2014 ஆம் ஆண்­டு­களில் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத குழுக்கள் குறித்து அறிய முடிந்­தது. 2014 ஆண்டு மற்றும் 2015 ஆரம்ப கட்­டங்­களில் வந்த புல­னாய்வுத் தக­வல்­களில் இலங்­கைக்குள் அடிப்­ப­டை­வாத குழுக்கள் குறித்து தக­வல்கள் கிடைக்­க­வில்லை. அப்­போ­தெல்லாம் ஐ.எஸ். பயங்­க­ர­வாதம் மற்றும் அந்த அமைப்பில் இணைந்­து­கொள்ள இலங்­கை­யி­லி­ருந்து சிரி­யா­வுக்கு சென்ற நபர்கள் குறித்தே அதி­க­மாக புல­னாய்வு தக­வல்கள் கிடைத்­தன. ஆகவே ஐ.எஸ். அமைப்­பிற்கு இணைய இங்­கி­ருந்து செல்லும் நபர்கள் அவர்­களின் குடும்­பங்கள் குறித்து ஆராய்ந்து அவர்­களை கண்­கா­ணிக்­கவே நாம் கவனம் செலுத்­தினோம்.

அதற்­கப்பால் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத செயற்­பா­டுகள் அல்­லது குழுக்கள் குறித்து எதுவும் அறிய முடி­ய­வில்லை. உரு­வா­கவும் இல்லை என்றே நினை­கின்றேன். எவ்­வாறு இருப்­பினும் இந்தப் பிரச்­சினை 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐ.எஸ். அமைப்பில் இணைந்த இலங்­கையர் ஒருவர் இறந்­த­தாக தகவல் கிடைத்­தது. இந்த தக­வ­லுடன் அடிப்­ப­டை­வாத செயற்­பா­டுகள் பல­ம­டை­கின்­றன, பார­தூ­ர­மாக உரு­வா­கின்­றன என்­பதை நாம் உணர்ந்தோம். அந்த ஆண்டில் மேலும் 5 பேர் அவர்­களின் குடும்­பத்­துடன் சிரியா சென்று ஐ.எஸ். அமைப்பில் இணைய சென்­றுள்­ளனர் என்­பதை அறிய முடிந்­தது. இந்த தக­வல்கள் தொடர்ச்­சி­யாக பாது­காப்பு சபைக் கூட்­டங்­களில் பேசப்­பட்­டன. என்ன செய்­வது எனவும் ஆரா­யப்­பட்­டது. நிலை­மைகள் மோச­ம­டைந்து வந்த நேரத்தில் நான் பொலிஸ்மா அதி­ப­ராக பல வேலைத்­திட்­டங்­களை கையாண்டேன்.

குறிப்­பாக அரச புல­னாய்வு அதி­கா­ரி­களை அழைத்து இந்த விட­யத்தில் அதிக கவனம் செலுத்த வேண்­டு­மெனக் கூறினேன். இது சர்­வ­தேச வலை­ய­மைப்­பாக செயற்­பட்டு வரு­கின்­றது. ஆகவே ஏனைய நாடு­களின் புல­னாய்­வுத்­து­றை­யுடன் நெருக்­க­மான தொடர்பை கொண்டு இதனை கண்­கா­ணிக்க வேண்டும் எனவும் கூறினேன். அதேபோல் பொலிஸ் அதி­கா­ரி­க­ளுக்கும் விசேட பிரி­வுக்கு வலி­யு­றுத்­தி­யி­ருந்தேன். அதற்கும் மேலாக குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு, பயங்­க­ர­வாத தடுப்பு பிரிவு, அரச பு­ல­னாய்வு துறையை இணைத்து விசேட குழு­வொன்றை நிய­மித்தேன். இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத செயற்­பா­டுகள் குறித்து ஆராய குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது. தலைமை பொறுப்பை பிரதி பொலிஸ்மா அதிபர் ஒரு­வ­ருக்கு வ-ழங்கினேன். இரண்டு வாரங்­க­ளுக்கு ஒரு­முறை கூடி இது குறித்து ஆராய்ந்தோம். மேலும் ஒவ்­வொரு மாதமும் தனிப்­பட்ட முறையில் இந்தக் குழுவை சந்­தித்து மேல­திக நட­வ­டிக்­களை முன்­னெ­டுத்தேன்.

இதே­வேளை, 34பேர் ஐ.எஸ்.இல் இணை­ய­வில்லை, 5 பேர்தான் இணைந்­தனர். ஆனால் அவர்கள் குடும்­பத்­துடன் சென்­றி­ருந்­தனர். அதன் மூல­மாக 34 பேர் என்ற எண்­ணிக்கை கூறப்­பட்­டது. இதில் ஒருவர் கலே­வல பிர­த­சத்தை சேர்ந்­தவர் என்­பது தெரிய வந்­தது.

மேலும், எனது பத­விக்­கா­லத்தில் இஸ்­லா­மிய பயங்­க­ர­வாதம் குறித்து செயற்­பட வாய்ப்புகள் இருக்கவில்லை. சஹ்ரான் என்ற நபர் 2015ஆம் ஆண்டுகளில் உருவாகினார். முகப்புத்தகம் மூலமாக. இவர் மட்டுமல்ல, மேலும் சிலர் இணையங்கள் மூலமாக இவ்வாறான இறுக்கமாக, மோசமான கருத்துக்களை பரிமாற்றிக்கொள்வதற்கு அப்பால் ஒரு குழுவாக உருவாவதாக தகவல் இருக்கவில்லை. ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் இருந்த காரணத்தினால் அவர்களை கண்காணித்து தகவல்களை பெற்றுக்கொள்ளவே நாம் முயன்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.

(ஆர்.யசி )

vidivelli

Leave A Reply

Your email address will not be published.