இலங்கை யாத்திரிகர்களுக்கான சேவைகள் தயார் நிலையில்

0 718

இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் எவ்­வித உடல்­நல பாதிப்­பு­க­ளு­மின்றி மக்­காவில் தங்­க­ளது ஹஜ் கட­மை­களை மேற்­கொண்டு வரு­வ­தா­கவும் அவர்­க­ளுக்குத் தேவை­யான வைத்­திய சேவை­களை வழங்­கு­வ­தற்கு மக்­கா­விலும் மதீ­னா­விலும் இலங்­கையின் வைத்­திய முகாம்கள் நிறு­வப்­பட்­டுள்­ள­தா­கவும் இலங்கை அரச ஹஜ் குழு தெரி­வித்­துள்­ளது. இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் நலன்­களைக் கவ­னிப்­ப­தற்­கா­கவும் தேவை­யான உத­வி­களை வழங்­கு­வ­தற்­கா­கவும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் அதி­கா­ரிகள் குழு­வொன்றும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக அரச ஹஜ் குழுவின் கலா­நிதி தலைவர் எம்.ரி. சியாத் தெரி­வித்தார். 

இதே­வேளை இலங்­கை­யி­லி­ருந்து இறுதி ஹஜ் விமானம் எதிர்­வரும் 7 ஆம் திகதி மக்கா நோக்கி பய­ணிக்­க­வுள்­ளது.

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் எதிர்­வரும் 27 ஆம் திக­தியும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் எதிர்­வரும் ஆகஸ்ட் 6 ஆம் திக­தியும் ஹஜ் கட­மைக்­காக சவூதி அரே­பி­யா­வுக்குப் பய­ணிக்­க­வுள்­ளனர்.

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லுல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பா­ளரும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்­சரும் மக்கா மற்றும் மதீ­னாவில் இலங்கை ஹஜ் யாத்­தி­ரிகள் மற்றும் ஹஜ் முக­வர்­களைச் சந்­தித்து குறை­நி­றை­களைக் கேட்­ட­றிந்­துள்­ளார்கள்.

ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு ஹஜ் முக­வர்கள் மூலம் பாதிப்­புகள் ஏதும் ஏற்­பட்டால் உறு­தி­ய­ளித்­த­படி சவூதி அரே­பி­யாவில் சேவைகள் வழங்­கப்­ப­டா­விட்டால் அது தொடர்பான முறைப்பாடுகளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு சமர்ப்பிக்கலாம் எனவும் அரச ஹஜ் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

ஏ.ஆர்.ஏ.பரீல்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.