அரசாங்கம் மீதான அழுத்தம் தொடரட்டும்

0 649

சமூ­கத்தின் பாது­காப்­புக்­கா­கவும் சமூக நலன் கரு­தியும் தங்கள் அமைச்­சுப்­ப­த­வி­களைத் துறந்த முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தங்கள் நிலைப்­பாட்டில் உறு­தி­யாக இருக்­கின்­றனர்.

நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை ஒன்று கூடிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் அர­சியல் உயர்­பீடக் கூட்­டத்தில் மீண்டும் அமைச்சுப் பொறுப்­புக்­களைப் பெற்றுக் கொள்­வ­தில்லை என தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.
கிழக்கில் முஸ்­லிம்­க­ளுக்கும் தமிழ் தரப்­பி­ன­ருக்கும் இடையில் பூதா­க­ர­மா­கி­யுள்ள பிர­தேச செய­லக பிரச்­சி­னை­களில் முஸ்­லிம்­க­ளுக்கு நியா­ய­மான தீர்வு கிடைக்க வேண்டும். முஸ்­லிம்கள் எதிர்­கொண்டு வரும் பிரச்­சி­னை­க­ளுக்கு அர­சாங்கம் உரிய தீர்­வினை வழங்கும் வரையில் எந்­த­வொரு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் அமைச்சுப் பத­வி­களை மீள கையேற்கப் போவ­தில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்­துள்ளார்.

அர­சியல் உயர்­பீடக் கூட்­டத்தில் முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­யதன் பின்பே அவர் இந்தத் தீர்­மா­னத்தை வெளி­யிட்டார்.
முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கடந்த ஜூன் மாதம் 3 ஆம் திகதி ஒரு நெருக்­க­டி­யான நிலையில் தங்கள் அமைச்­சுப்­ப­த­வி­களைத் துறந்­தனர். 4 அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­சர்­களும், 4 இரா­ஜாங்க அமைச்­சர்­களும், ஒரு பிர­தி­ய­மைச்­சரும் கூட்­டாக ஒரு­மித்து தங்கள் அமைச்சுப் பத­வி­களைத் துறந்­தது ஒரு வர­லாற்றுச் சம்­ப­வ­மாகும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கி­யுள்ள பிரச்­சி­னை­களை ஊட­கங்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்­தி­யுள்ளார்.
‘முஸ்­லிம்­க­ளுக்கு புதிய பிரச்­சி­னைகள் பல எழ ஆரம்­பித்­துள்­ளன. நீண்­ட­கா­ல­மாக வராத பிரச்­சி­னைகள் பல இன்று புதி­தாக உரு­வெ­டுக்­கின்­றன. எமது தரப்­புக்கு பாதிப்­பான விட­யங்கள் முன்­னெ­டுக்­கப்­படும் என்றால் நாம் அர­சாங்­கத்தின் பிர­தி­நி­தி­க­ளாக தொடர்ந்தும் இருப்­பதால் பிரச்­சி­னைகள் உரு­வாகும். முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நாம் ஒரே நிலைப்­பாட்டில் இருக்­கிறோம். தனித்­த­னி­யாக எந்த முஸ்லிம் உறுப்­பி­னர்­களும் அமைச்­சுக்­களை பெற்­றுக்­கொள்ள மாட்­டார்கள்’ என ரவூப் ஹக்கீம் உறு­தி­யாகக் கூறி­யுள்ளார்.

கிழக்கில் முஸ்லிம் அர­சியல் தலை­மை­க­ளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் இடையில் நிர்­வாக ரீதியில் பிரச்­சி­னைகள் எழுந்­துள்­ளன. வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கும் சொத்­து­க­ளுக்கும் நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கப்­ப­ட­வில்லை.. தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்­களின் பின்பு சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டுள்ள அப்­பா­விகள் பலர் தொடர்ந்தும் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். இவ்­வா­றான பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு வழங்­கப்­பட வேண்­டு­மென்றே முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கோரி­யி­ருக்­கின்­றனர்.

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முன்­வைத்­துள்ள பிரச்­சி­னை­க­ளுக்கு அர­சாங்கம் என்ன பதில் கூறப்­போ­கி­றது. கல்­முனை வடக்கு பிர­தேச செய­லக விவ­கா­ரத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சில உறு­தி­மொ­ழி­களை வழங்­கி­யுள்ளார். இந்­நி­லையில் முஸ்லிம் தரப்­பி­ன­ருக்கு அவர் என்ன பதில் கூறப்­போ­கிறார் என்று பொறுத்­தி­ருந்து பார்க்க வேண்டும்.

ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் கூட்­டணி குறித்தும் தற்­போது கலந்­து­ரை­யா­டப்­பட்டு வரு­கி­றது. அர­சாங்கம் முஸ்லிம் தரப்­புக்கு வழங்கும் தீர்­வு­க­ளுக்கு அமை­யவே கூட்­டணி குறித்து தீர்­மானம் எடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

அர­சாங்கம் தற்­போ­தைய கள­நி­லை­மையை ஆழ்ந்து அவ­தா­னித்து தீர்­மா­னங்­களை மேற்­கொள்ள வேண்டும். சட்டம் மற்றும் நீதியை நாச­மாக்க ஒரு சிலர் முயற்­சித்து வரு­கி­றார்கள். அவர்கள் இனங்­கா­ணப்­பட்­டாலும் அவர்­க­ளுக்கு எதி­ராக சட்­டத்தை அமுல்­ப­டுத்த முடி­யாத நிலை உரு­வா­கி­யி­ருக்­கி­றது. இவ்­வா­றான நிலையில் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

அமைச்சுப் பதவிகளைத் துறந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட இருவரைத் தவிர ஏனைய ஏழு பேரும் தங்கள் தீர்மானத்தில் உறுதியாக இருக்கின்றமை வரவேற்கத்தக்கது.

ஒன்றாக இருந்து அரசுக்கு அழுத்தங்களைப் பிரயோகிப்பதன் மூலமே தங்கள் இலக்குகளை எய்து கொள்ளமுடியும். அதன் மூலம் சமூகத்தைப் பாதுகாக்க முடியும்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.