முஸ்லிம்களுக்கு எதிரான பொய் பிரசாரங்களை முன்னெடுக்கும் இவர்களுக்கு என்ன தண்டனை

பதில் பொலிஸ்மா அதிபருக்கு அசாத் சாலி விரிவான ஆதாரங்களுடன் கடிதம்

0 1,594

டாக்டர் ஷாபிக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுகள் அடிப்­ப­டை­யற்­ற­வை­யாகும். அவர் தனது தொழி­லிலும் வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளிலும் சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­ப­ட­வில்லை என சி.ஐ.டி. யினரின் அறிக்கை தெரி­வித்­துள்­ளது. எனவே டாக்டர் ஷாபிக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள பொய்க் குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் விசா­ரணை நடத்தி சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்­ளு­மாறு வேண்­டு­கிறேன் என தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வரும் முன்னாள் மேல் மாகாண ஆளு­ந­ரு­மான அசாத் சாலி பதில் பொலிஸ் மா அதி­ப­ரிடம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

இது தொடர்பில் அசாத் சாலி பதில் பொலிஸ் மா அதி­ப­ருக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்­துடன் டாக்டர் ஷாபிக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கைகள், பிர­சா­ரங்கள், சாட்­சி­யங்கள் தொடர்­பான ஆவ­ணங்­களின் பிர­தி­க­ளையும், பதி­வு­க­ளையும் இணைத்­துள்ளார்.

அவ­ரது கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;
டாக்டர் ஷாபிக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுகள் அடிப்­ப­டை­யற்­ற­வை­யாகும். இவை கவலை தரு­ப­வை­யாகும். இக் குற்­றச்­சாட்­டுகள் மக்­க­ளி­டையே முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்தி இன முறு­கல்­களை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சி­க­ளாகும்.

டாக்டர் ஷாபி தனது தொழிலில் சட்­ட­வி­ரோ­த­மான செயற்­பா­டு­களில் ஈடு­ப­ட­வில்லை. அவ­ரது வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளிலும் சட்­ட­வி­ரோ­த­மாகச் செயற்­ப­ட­வில்லை என்­பதை சி.ஐ. டி. யினரின் அண்­மைய அறிக்கை தெரி­விக்­கி­றது. எனவே டாக்டர் ஷாபி மீதான இக்­குற்­றச்­சாட்­டுகள் ஏன் முன்­வைக்­கப்­பட்­டன என்­பதன் உண்மை நிலையைக் கண்­ட­றிய வேண்டும்.

நாட்டில் இன, மத ரீதி­யி­லான பிரச்­சி­னை­களை உரு­வாக்கி தங்­க­ளது அர­சியல் மற்றும் நிதி ரீதி­யான சுய­லா­பத்தைப் பெற்றுக் கொள்­வதற்­கா­கவே இந்­நி­கழ்ச்சி நிரல் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளது.

ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களை யடுத்து அதனைக் கார­ண­மாகக் கொண்டு வெறுப்­பு­ணர்­வு­களை ஏற்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­யா­கவே நான் இதனைக் காண்­கிறேன், நம்­பு­கிறேன் என்று தெரி­வித்­துள்ளார்.

அசாத் சாலி இது தொடர்­பான வீடியோ பதி­வு­களை இறு­வட்டு மூலம் பதில் பொலிஸ் மா அதி­ப­ருக்குக் கைய­ளித்­துள்ளார்.

டாக்டர் சன்ன ஜய­சு­மான

டாக்டர் சன்ன ஜய­சு­மான டாக்டர் மொஹமட் ஷாபி சிஹாப்தீன் தாய்­மார்­களின் பளோ­பியன் குழாய்­களில் தடை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்ளார். சட்­ட­வி­ரோ­த­மான முறையில் பெரு­ம­ள­வி­லான சொத்­து­களைச் சேர்த்­துள்ளார். அல்­லது பயங்­க­ர­வாத அமைப்­பு­க­ளுடன் தொடர்­பு­களைப் பேணி வந்­தி­ருக்­கிறார் என பொய்­யான தக­வல்­களைத் தெரி­வித்­தி­ருக்­கி­றார்.

திவயின சிங்­கள பத்­தி­ரிகை

திவயின பத்­தி­ரிகை, டாக்டர் ஷாபி சிங்­கள பெண்­களின் பிர­ச­வத்­தின்­போது 8000 பெண்­க­ளுக்கு எல்.ஆர்.டி. கருத்­தடை சத்­திர சிகிச்­சை­களை மேற்­கொண்­டுள்ளார். இந்த கருத்­தடை சத்­திர சிகிச்சை பெண்­க­ளுக்கு அறி­யா­மலே மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது என்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் டாக்டர் ஷாபி அவ­ரது பதவிக் காலத்தில் 4400 க்கும் குறை­வான மகப்பேற்று சத்­திர சிகிச்­சை­களே மேற்­கொண்­டுள்­ள­தாக ஆவ­ணங்கள் தெரி­விக்­கின்­றன.

குரு­ணாகல் பிரதி பொலிஸ் மா அதிபர் கித்­சிரி ஜயலத் எவ்­வித ஆதா­ரங்­க­ளு­மின்றி டாக்டர் ஷாபி மீது குற்றம் சுமத்தி திவயின பத்­தி­ரி­கையில் வெளி­யி­டப்­பட்ட செய்தி பிரதி பொலிஸ் மா அதிபர் கித்­சிரி ஜய­லத்­தி­னாலே பத்­தி­ரி­கைக்குக் கூறப்­பட்­டுள்­ளது என சந்­தே­கிக்­கப்­ப­டு­கி­றது.

டாக்டர் ஷாபி சட்­ட­வி­ரோ­த­மாக பெரு­ம­ளவு சொத்து சேர்த்­தி­ருக்­கிறார் என்று குற்றம் சுமத்­தியே அவரைக் கைது செய்­வ­தற்­கான பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. (நிதி தொடர்­பான முரண்­பா­டுகள் உள்­நாட்டு இறை­வரித் திணைக்­களம் அல்­லது எப்.சி.ஐ.டி. மூலமே கையா­ளப்­பட வேண்டும்)
டாக்டர் ஷாபி கட­மை­யாற்­றிய அதே வைத்­தி­ய­சா­லையில் டாக்­ட­ராகக் கட­மை­யாற்றும் அவ­ரது மனைவி மீதான தனிப்­பட்ட பிரச்­சினை கார­ண­மா­கவே அவ­ரது கைது ஏற்­பாடு செய்­யப்­பட்­ட­தாக அறிய முடி­கி­றது.

அவ­ரது கைது இடம்­பெற்­ற­போதும் அதற்குப் பின்­னரும் சரி­யான சட்ட நடை­மு­றைகள் இடம்­பெற்­றதா என்­பது கேள்­விக்­கு­றி­யாக உள்­ளது.

குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர் வீர பண்­டார
குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர் வீர பண்­டார சி.ஐ.டி. யின் விசா­ர­ணை­க­ளுக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்த முயற்­சித்தார்.

சந்­தேக நபர் ஒருவர் கைது செய்­யப்­பட்டால் அவர் அல்­லது அவள் நீதி­மன்ற வைத்­திய அதி­காரி (JMO) முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­பட வேண்டும். நீதி­மன்ற வைத்­திய அதி­காரி பொலி­ஸாரால் அழைக்­கப்­பட்­டதும் அவர் சமு­க­ம­ளிக்க வேண்டும். ஆனால் டாக்டர் ஷாபியின் விட­யத்தில் பொலிஸார் நீதி­மன்ற வைத்­திய அதி­கா­ரிக்கு அழைப்பு விடுக்­க­வில்லை. மே 24 ஆம் திகதி இரவு இரண்டு நீதி­மன்ற வைத்­திய அதி­கா­ரிகள் இருந்­தி­ருக்­கி­றார்கள் என்­றாலும் வைத்­தி­ய­சாலைப் பணிப்­பாளர் மற்­றுமோர் நீதி­மன்ற வைத்­திய அதி­கா­ரி­யையே அழைத்­துள்ளார்.

பணிப்­பாளர் டாக்டர் வீர பண்­டார டெய்லி மிரர் பத்­தி­ரி­கைக்கு நேர்­கா­ண­லொன்­றினை வழங்­கி­யுள்ளார். நேர்­கா­ண­லின்­போது டாக்டர் ஷாபி 2017 ஆம் ஆண்டு கருத்­தடை சத்­திர சிகிச்­சை­களை மேற்­கொண்­ட­தாக தனக்கு தெரி­விக்­கப்­பட்­ட­தாகக் கூறி­யுள்ளார்.

அவ்­வா­றெனில் பணிப்­பாளர் இது தொடர்பில் ஏன் விசா­ர­ணை­களை மேற்­கொள்­ள­வில்லை? பணிப்­பாளர் இது­வரை உரிய நட­வ­டிக்கை எதுவும் எடுக்­க­வில்லை?

பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  அத்­து­ர­லிய ரதன தேரர்

பதற்­ற­மான சூழ்­நி­லை­யொன்று குரு­ணாகல் பகு­தியில் உரு­வா­கி­யி­ருந்­தது. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லிய ரதன தேரர் ஜூன் மாதம் 27 ஆம் திகதி குரு­ணாகல் நீதிவான் நீதி­மன்­றுக்கு வருகை தந்­தி­ருந்தார். அன்­றைய தினம் டாக்டர் ஷாபிக்கு எதி­ரான வழக்கு விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்­டி­ருந்­தது. அன்று ரதன தேரர் ஏனைய வெளி­யா­ருடன் சேர்ந்து இனக்­க­ல­வ­ரத்தை உரு­வாக்க முயற்­சித்தார்.

அத்­து­ர­லிய ரதன தேரர் நீதி­மன்ற அமர்வு இடை­நே­ரத்­தின்­போது உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் திசே­ராவை அச்­சு­றுத்­தினார். உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் திசேரா டாக்டர் ஷாபிக்கு சார்­பாக செயற்­ப­டு­வ­தாகக் குற்றம் சுமத்­தினார்.

அர­சாங்­கமும், உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் திசே­ராவும் டாக்டர் சாபிக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கா­விட்டால் அவரும் அவ­ரது பிள்­ளை­களும் கவ­ன­மாக இருக்க வேண்­டி­யேற்­படும் எனவும் அச்­சு­றுத்­தி­யுள்ளார். அர­சாங்­கமும் கவ­ன­மாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் திசேரா டாக்டர் ஷாபியைப் பாது­காப்­ப­தற்கு முயற்­சிப்­ப­தா­கவும் திசேரா மீது விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டு­மெ­னவும் கோரினார். அத்­தோடு திசே­ராவும் சி.ஐ.டி. யினரும் டாக்­டரைப் பாது­காப்­ப­தற்கு முயற்­சிப்­ப­தா­கவும் குற்றம் சாட்­டினார்.

அத்­து­ர­லிய ரதன தேரர் நீதி­மன்­றத்­துக்கு வெளியே பகி­ரங்­க­மாக சி.ஐ.டி. யினரை ஊட­கங்கள் முன்­னி­லையில் விமர்­சித்தார். தங்களது கட­மை­களை எவ்­வாறு நிறை­வேற்­று­வது என்று சி.ஐ.டி. க்குத் தெரி­யாது என்று விமர்­சித்தார்.
அத்­து­ர­லிய ரதன தேரர் யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்டார். அங்கு அப்­ப­கு­தி­யி­லுள்ள முஸ்­லிம்­க­ளுக்கும் தமி­ழர்­க­ளுக்கும் இடையில் இன மோதல்­களை உரு­வாக்கும் வகையில் கருத்­து­களை வெளி­யிட்டார்.

அவர் கிழக்கு மாகா­ணத்­துக்கும் விஜயம் செய்தார். அங்கும் பல்­வேறு கருத்­து­களை வெளி­யிட்டார். எங்­க­ளுக்கு மத்­திய கிழக்­கி­லி­ருந்து எண்ணெய் தேவை­யில்லை எனவும் நாங்கள் சூரிய சக்­தியை உப­யோ­கிப்போம் என்றும் கூறினார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்ச

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்ச குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லைக்கு விஜயம் செய்தார். அவர் அங்கு டாக்டர் ஷாபிக்கு எதி­ராக அடிப்­ப­டை­யற்ற குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்தார். இன­வாதக் கருத்­து­க­ளையும், டாக்டர் ஷாபியின் பெய­ருக்குக் களங்கம் ஏற்­ப­டுத்தும் வகை­யான நேர்­மை­யற்ற விமர்­ச­னங்­க­ளையும் முன்­வைத்தார். சி.ஐ.டி. டாக்டர் ஷாபியை பாது­காப்­ப­தா­கவும் குற்றம் சுமத்­தினார்.

டாக்டர் ஷாபி தொடர்­பான செய்­தியை எழு­திய திவ­யின பத்­தி­ரி­கையின் நிருபர் ஹேமந்த ரன்­து­னுவைக் கைது செய்­வ­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக பொய் தக­வல்­களை வெளி­யிட்டார்.

டாக்டர் ஷாபிக்­கெ­தி­ரான வழக்கு விசா­ரணை நடை­பெ­று­வ­தற்கு ஒரு தினத்­துக்கு முன்பு விமல் வீர­வன்ச ஊடக மாநா­டொன்­றினை நடாத்­தினார். சி.ஐ.டி டாக்டர் ஷாபியின் பாவங்­களை கழு­வி­விடும் என அம்­மா­நாட்டில் கருத்து தெரி­வித்தார். இவ்­வா­றான அவ­ரது கருத்­துகள் பொது­மக்கள் மத்­தியில் சி.ஐ.டியின் விசா­ரணை தொடர்பில் சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தாக அமைந்­தன.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில

டாக்டர் ஷாபிக்கு எதி­ரான விசா­ர­ணைகள் தொடர்பில் இலங்கை வைத்­திய சபை மீது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­துள்ளார். இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்­கத்தை சீர்­கு­லைக்கும் வகையில் இன­வாத கருத்­து­களை வெளி­யிட்­டுள்ளார்.

இந்த உரைகள் அனைத்­தையும் நீங்கள் கவ­னத்தில் கொண்டால் இங்கு குறிப்­பிட்­ட­வர்கள் பிடிவாத குணமுள்ளவர்கள் என்பதையும் மக்கள் மத்தியில் ஒற்றுமையின்மையை உருவாக்குபவர்கள் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

இவர்களுக்கு எதிராக விசாரணைகளை நடாத்தி ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும், குற்றவியல் வழக்குகளைத் தொடரும்படியும், வேண்டிக் கொள்கிறேன், இவர்களும் இவர்களது ஆதரவாளர்களும் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை உருவாக்க காரணமாக இருப்பதால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.

மெதகொட அபயதிஸ்ஸ தேரர்

கலாநிதி. மெதகொட அபயதிஸ்ஸ தேரர் நுகேகொடையில் நடைபெற்ற கூட்டமொன்றில் முஸ்லிம்கள் ஷரீஆ சட்டத்தின் கீழ் 20 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் இராணுவத்திற்கு இரகசிய தகவல்களை வழங்கியவர்களும், விப சாரத்தில் ஈடுபட்டவர்களும் அடங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பான தகவல்களை பாதுகாப்பு பிரிவினருக்கு வழங்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தண்டிக்கப்பட வேண்டும்

பொய் பிரசாரங்களை மேற்கொள்பவர்கள், இனவாதத்தை தூண்டுபவர்கள், வெறுப்புணர்வு பேச்சு பேசுபவர்கள், நல்லிணக்கத்தை சிதைப்பவர்கள் அவர்கள் எவராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அக்கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ஏ.பரீல்

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.