உழ்ஹிய்யா நடைமுறை : சில ஆலோசனைகள்

0 682

ஒவ்­வொரு வருடம் துல்ஹஜ் மாதம் முஸ்­லிம்கள் உழ்­ஹிய்யா எனும் கிரி­யையை செய்து வரு­கின்­றனர். இதன் மூலம் குறிப்­பாக வறிய குடும்­பங்­களும், பொது­வாக அனை­வரும் பய­ன­டை­கின்­றனர்.

உழ்­ஹிய்யா கொடுக்­கு­மாறு இஸ்லாம் எம்மைத் தூண்­டி­யுள்­ளது. நபி (ஸல்) அவர்கள் கூறி­ய­தாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறி­விக்­கின்­றார்கள் “யார் வச­தி­யி­ருந்தும் அறுத்துப் பலி­யி­ட­வில்­லையோ அவர் நமது தொழுகை நடை­பெறும் இடத்தை நெருங்­கவும் வேண்டாம்” (அஹ்மத், இப்னு மாஜா).

பர்ரா இப்னு ஆஸிப் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறி­ய­தாக அறி­விக்­கின்­றார்கள். “எமது இந்த நாளை (துல்ஹஜ் பத்­தா­வது நாள்) நாம் தொழு­கை­யுடன் ஆரம்­பிப்போம். பின்னர் அறுத்துப் பலி­யி­டுவோம். யார் இவ்­வாறு செய்­கின்­றாரோ அவர் எமது வழி­மு­றையை பின்­பற்றி செய்­த­வ­ராவார். (தொழு­கைக்கு முன்னர்) யார் முன்­ன­தா­கவே அறுத்துப் பலி­யிட்­டாரோ அவர் தனது குடும்­பத்­துக்கு வழங்­கிய இறைச்­சி­யா­கவே கரு­தப்­படும். அதனை (உழ்­ஹிய்யா எனும்) கிரி­யை­யாக கருத முடி­யாது.” (புஹாரி).

உழ்­ஹிய்யா பற்­றிய சட்ட நிலைப்­பாட்டில் அது வாஜி­பா­னதா அல்­லது சுன்­னத்­தா­னதா என்­பது தொடர்பில் கருத்து வேறு­பாடு உள்­ளது. அது ஒரு கண்­டிப்­பான கட­மை­யல்ல. ஒரு சுன்­னத்­தான வணக்கம் என்­பதே அதி­க­மான அறி­ஞர்­களின் கருத்­தாகும். ஸஈத் இப்னுல் முஸய்யப், அதா இப்னு அபீ ரபாஹ், அல்­கமா, இமாம் ஷாபியி, அபூ ஸவ்ர் (ரஹ்) போன்­ற­வர்கள் இக்­க­ருத்தில் உள்­ளனர். இதனால் தான் சில ஸஹா­பாக்கள் ஒரு சில சந்­தர்ப்­பங்­களில் உழ்­ஹிய்யா கொடுக்­காது இருந்­துள்­ளார்கள்.

இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் தமக்கு வசதி இருந்தும் மக்கள் உழ்­ஹிய்யா ஒரு கட­மை­யான அம்சம் எனப் புரிந்து கொள்­ளாமல் இருப்­ப­தற்­காக சில சந்­தர்ப்­பங்­களில் தவிர்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். இதேபோல் அபூபக்ர் (ரழி), உமர் (ரழி) அவர்­களும் சில சந்­தர்ப்­பங்­களில் உழ்­ஹிய்யா கொடுக்­காது இருந்­துள்­ளார்கள்.

கால, இட, சூழல் மாற்­றங்­க­ளுக்­கேற்ப பத்­வாக்­களும் மாற்­ற­ம­டையும் என்­பது சட்ட அறி­ஞர்­க­ளுக்கு இடையில் ஏற்றுக் கொள்­ளப்­பட்ட ஒரு சட்­ட­வி­தி­யாகும். இது இஸ்லாம் அனைத்துக் காலங்கள், இடங்­க­ளுக்கும் நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யு­மான மார்க்கம் என்­பதை நிரூ­பிக்கும் ஒரு முக்­கிய சட்ட அடிப்­படை. இந்த அடிப்­ப­டையில் இவ்­வ­ருடம் உழ்­ஹிய்யா கொடுப்­பது தொடர்பில் மீள்­ப­ரி­சீ­லனை தேவைப்­ப­டு­கின்­றது.

இது பற்றி பின்­வரும் ஆலோ­ச­னை­களை முன்­வைக்க விரும்­பு­கின்றேன்.

1. ஒவ்­வொரு ஊரின் பொது ஒழுங்­குக்கு ஏற்ப இக்­கி­ரி­யையை நிறை­வேற்றல். அதா­வது ஒவ்­வொரு ஊரும் இவ்­வ­ருடம் உழ்­ஹிய்­யாவை நிறை­வேற்­று­வது தொடர்பில் ஒரு பொது நிலைப்­பாட்­டிற்கு வர­வேண்­டிய தேவை­யுள்­ளது. ஒரு ஊருக்குப் பொருத்­த­மான ஒழுங்கு சில­போது அடுத்த ஊருக்கு பொருத்­த­மற்றுக் காணப்­பட முடியும். எனவே ஊர் தலைமை, ஊரின் பல­த­ரப்­பி­ன­ருடன் கலந்­தா­லோ­சனை செய்து ஒரு பொது முடி­வுக்கு வர­வேண்டும். அந்த நிலைப்­பாட்­டிற்­கேற்ப ஊர்­மக்கள் தம்மை ஒழுங்­கு­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும்.

2. இவ்­வ­ருடம் உழ்­ஹிய்­யாவை நிறை­வேற்­றாது தவிர்ந்து கொள்ளல் சிறந்­தது. சமூக மட்­டத்தில் நடை­பெற வேண்­டிய எத்­த­னையோ கட­மைகள் உள்­ளன. அது தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும். குறிப்­பாக வறு­மையில் அல்­லற்­படும் எத்­த­னையோ குடும்­பங்கள் ஒவ்­வொரு ஊரிலும் இருக்­கின்­றன. வாழ்க்­கையின் அடிப்­படைத் தேவைகள் நிறை­வேற்­றப்­ப­டாது பலர் வாழ்ந்து வரு­கின்­றனர். உணவு, மருத்­துவம், கல்வி போன்ற அடிப்­படைத் தேவை­க­ளுக்­கான பண­மில்­லாது பல உள்­ளங்கள் ஏங்கிக் கொண்டு காலத்தை கழிக்­கின்­றன.

இத்­த­கைய நிலை­யுடன், நாட்டில் ஏற்­பட்ட அசா­தா­ரண சூழ­லினால் குறிப்­பாக முஸ்லிம் சமூ­கத்தின் வியா­பா­ரிகள் பல சவால்­களை எதிர்­கொண்டு வரு­கின்­றனர். முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான பல கடைகள், வியா­பா­ரங்கள் அழிக்­கப்­பட்­டுள்­ளன. இதனால் பல குடும்­பங்கள் கஷ்­டங்­களை எதிர்­கொண்டு வரு­கின்­றன. பலர் தொழில் இழந்த நிலையில் வாழ்­கின்­றனர்.

இவர்­க­ளுக்கு உத­வு­வது சமூ­கத்தின் கடமை. குறிப்­பாக வச­தி­யுள்­ள­வர்­களின் பொறுப்பு. விஷே­ட­மாக அவர்­க­ளது குடும்­பத்­தி­லுள்ள வச­தி­ப­டைத்­த­வர்­களின் நேரடிக் கடமை.

இவ்­வி­டத்தில் இம்­முறை உழ்­ஹிய்யா கிரி­யையை நிறை­வேற்­றாது தவிர்ந்து கொள்­வது பொருத்­த­மா­னது. உழ்­ஹிய்­யா­வுக்­காக ஒதுக்க நாடிய பணத்­தொ­கையை மேலே குறிப்­பிட்ட தேவை­யு­டை­வர்­க­ளுக்கு கொடுத்து அவர்­களைப் பலப்­ப­டுத்த முடியும். இதன் மூலம் அவர்­க­ளது நாளாந்த சில அடிப்­படைத் தேவை­களை நிவர்த்தி செய்­வ­தற்­கான வழி பிறக்­கின்­றது.

தொழில் பாதிக்­கப்­பட்ட வர்­க­ளுக்கு தொழிலை செய்­த­வற்­காக உத­வி­செய்ய முடியும். இதன் மூலம் அவர்கள் நாளாந்த வாழ்க்­கையை நடாத்­து­வ­தற்­கான வழியைக் கண்டு கொள்­வார்கள். இதனால் கையேந்தும் நிலை இல்­லாது போய், சமூ­கத்­துக்கு மத்­தியில் நம்­பிக்­கையை கட்டியெழுப்பலாம்.

இது ஒருவகையில் சமூகக் கூட்டுப் பொறுப்பாகும். அதாவது இத்தகைய தேவையுள்ள நபர்கள், குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது சமூகத்தின் மீதான கடமையாகும். இதில் சமூகம் குறைவிடக் கூடாது. இதற்காக பொது வழிகாட்டல்கள் ஊர் மட்டத்தில் இருப்பது பொருத்தமானது.

3. உழ்ஹிய்யாவை எளிமையாக நிறைவேற்றல். உழ்ஹிய்யாவை நிறைவேற்றித்தானாக வேண்டும் என்ற நிய்யத்தில் உள்ளவர்கள் அதனை எளிமையாக நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். நாட்டின் சட்டங்களை மதித்து அதனை செய்ய வேண்டும். சகோதர சமூகங்களின் கவனத்தை ஈர்க்காத வகையில் அதனை செய்வதற்கு முன்னேற்பாடுகளை செய்து கொள்வது முக்கியமானது. மாடுகளை அறுப்பதைத் தவிர்த்து ஆடுகளை அதற்குப் பகரமான கொடுக்கவும் முடியும்.

ஷெய்க் ஆஸாத்
அப்துல் முஈத்

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.