இரண்டாம் கட்டத் தாக்குதல்களுக்கு 11 குண்டுதாரிகள் தயாராகவிருந்தனர்?

விசாரணைகளில் வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்

0 3,276

காத்­தான்­கு­டியை தள­மாகக் கொண்ட என்.ரி.ஜே என அழைக்­கப்­படும் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு பெரும்­பாலும் ஸஹ்­ரா­னு­டைய குடும்­பத்­தி­ன­ரா­லேயே நிர்­வ­கிக்­கப்­பட்டு வந்­துள்­ளது. தற்­போது தடை செய்­யப்­பட்­டுள்ள இந்த அமைப்பின் முக்­கிய நபர்­க­ளாக ஸஹ்­ரா­னு­டைய சகோ­த­ரர்­க­ளான ஸெய்னி மற்றும் ரிழ்வான் ஆகியோர் செயற்­பட்டு வந்­துள்­ளனர். தேசிய தௌஹீத் ஜமா­அத்தில் இருந்த பெரும்­பான்­மை­யா­ன­வர்கள் இவர்­களின் தலை­மையின் கீழே செயற்­பட்­டுள்­ளனர்.

2018 ஆம் ஆண்டில் இடம்­பெற்ற திகன தாக்­குதல் சம்­ப­வத்தின் பின்னர் மாவ­னெல்­லையைச் சேர்ந்த ஒரு இளைஞர் குழு­வி­னரும் ஸஹ்­ரா­னுடன் இணைந்து கொண்­டனர்.

ஸஹ்­ரா­னு­டைய ஆசி­ரி­யர்­களுள் ஒரு­வ­ரான நௌபர் மௌலவி தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் இரண்­டா­வது தலை­வ­ராக இருந்­துள்ளார். 2019 ஆம் ஆண்டின் பெப்­ர­வரி மாதத்தில் நௌபர் மௌல­விக்கும் ஸஹ்­ரா­னுக்கும் இடையில் கருத்து முரண்­பா­டுகள் ஏற்­பட்­டன. இந்த கருத்து முரண்­பாட்­டினால் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலை­மைத்­துவம் இரண்­டாக பிள­வு­பட்­டது.

இலங்­கையின் 9 மாகா­ணங்­க­ளிலும் ஒரே நேரத்தில் என்.ரி.ஜே அமைப்பைச் சேர்ந்­த­வர்­களால் தற்­கொலை குண்­டுத்­தாக்­குதல் நடத்­தப்­பட வேண்டும் என்­பது தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் இரண்­டா­வது தலை­வ­ரான நௌபர் மௌல­வியின் அபிப்­பி­ரா­ய­மாகும். இந்தத் திட்டம் தொடர்­பி­லேயே ஸஹ்­ரா­னுக்கும் நௌபர் மௌல­விக்கும் இடையில் கருத்து முரண்­பா­டுகள் ஏற்­பட்­டன.

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் ஆயு­தப்­பி­ரி­வுக்கு பொறுப்­பாக இருந்த எச்.எம்.அஹமட் மில்ஹான், நௌபர் மௌல­வி­யுடன் இணைந்து கொண்­டவர் ஆவார். 2018 ஆம் ஆண்டில் வவு­ண­தீவில் இரண்டு பொலிஸ் அதி­கா­ரி­களை மில்ஹான் கொன்­றுள்­ள­தாக பொலிஸார் குற்றம் சாட்­டி­யுள்­ளனர். பின்னர் ஏப்ரல் 21 தாக்­கு­த­லுக்கு முன்னர் சவூ­திக்குச் சென்­று­விட்ட மில்­ஹானை கடந்த ஜூன் 14 ஆம் திகதி சவூதி பொலிஸார் கைது செய்­தனர்.

இரண்டாம் கட்ட தாக்­கு­தல்­களை மேற்­கொள்­வ­தற்­காக ஸஹ்ரான் தனது சகோ­தரன் ரிழ்­வானை பொறுப்­பாக நிய­மித்தார். தனது மற்­று­மொரு சகோ­த­ர­னான ஸெய்னி தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்­பி­ன­ருக்கு விரி­வு­ரை­களை நடாத்­து­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்டார். பாணந்­துறை , நீர்­கொ­ழும்பு, மல்­வானை மற்றும் கல்­முனை ஆகிய பிர­தே­சங்­களில் ஸஹ்ரான் மறைந்­தி­ருக்க பாது­காப்­பான வீடுகள் இருந்­துள்­ளன. கொள்­ளுப்­பிட்­டி­யிலும் ஒரு தொடர்­மாடிக் குடி­யி­ருப்பில் வாட­கைக்கு வீடொன்று பெறப்­பட்­டுள்­ளது. இரண்­டா­வது தாக்­கு­த­லுக்­காக வேண்டி வீடு­களை வாங்­குதல் மற்றும் வாட­கைக்கு பெறுதல் போன்ற பொறுப்­புக்கள் மொஹம்­மது நியாஸ் மற்றும் கல்­முனை சியாம் ஆகி­யோ­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டன. ஏப்ரல் மாதத்தின் முதற்­ப­கு­தியில் சாய்ந்­த­ம­ருது , செந்நெல் கிராமம் , அட்­டா­ளைச்­சேனை ஆகிய பிர­தே­சங்­களில் தலா ஒரு வீடும் நிந்­த­வூரில் 2 வீடு­க­ளு­மாக மொத்தம் 5 வீடுகள் கிழக்கில் பாது­காப்­பான முறையில் வாட­கைக்கு பெறப்­பட்­டி­ருந்­தன. சம்­மாந்­துறை வீடு வெடி­பொ­ருட்­களை களஞ்­சி­யப்­ப­டுத்­து­வ­தற்கு பயன்­ப­டுத்­தப்­பட்­டது.

கிடைக்­கப்­பெற்ற அறிக்­கை­க­ளின்­படி சாய்ந்­த­ம­ரு­துவில் வாட­கைக்கு பெறப்­பட்ட வீட்­டுக்கு ரூபா 40,000 வாட­கை­யாக வழங்­கப்­பட்­டுள்­ளது. சம்­மாந்­து­றையில் உள்ள செந்நெல் கிராமம் வீட்­டுக்கு ரூபா 50,000 ரூபா வாட­கை­யாக வழங்­கப்­பட்­டுள்­ளது. நிந்­த­வூரில் உள்ள ஒரு வீட்­டுக்கு ரூபா 20,000 வாட­கை­யாக வழங்­கப்­பட்­டுள்­ள­துடன் அட்­டா­ளைச்­சேனை வீ்ட்டுக்கு ரூபா 15,000 வாட­கை­யாக வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்தப் பிர­தே­சங்­களில் குறித்த வீடு­க­ளுக்­கான சரா­சரி வாடகை ரூபா 3,000 – 5,000 ஆகும். இருந்த போதிலும் வீடு­களை தக்­க­வைத்துக் கொள்­வ­தற்­காக வேண்டி கூடிய தொகைப் பணத்தை வாட­கை­யாகச் செலுத்­தி­யுள்­ளனர்.

ஏப்ரல் 19 ஆம் திகதி ஸஹ்­ரா­னு­டைய சகோ­த­ரர்­க­ளான ரிழ்வான் மற்றும் ஸெய்னி ஆகியோர் கிரி­உல்ல பிர­தே­சத்தில் உள்ள கடை­யொன்றில் ஒரு சில பெண்­க­ளுடன் வந்து 29,000 ரூபா­வுக்கு வெள்ளை ஆடை­களை வாங்கிச் சென்­றுள்­ளனர். பொலி­ஸாரின் தக­வல்­க­ளுக்­க­மைய இரண்­டா­வது மற்றும் மூன்­றா­வது தாக்­கு­த­லுக்­காக பௌத்த வழி­பாட்டுத் தலங்­களை குறி­வைத்­த­மையே வெள்ளை ஆடைகள் வாங்­கி­ய­தற்­கான இர­க­சி­ய­மாகும். கண்­டி­யி­லுள்ள தலதா மாளி­கைதான் தாக்­கு­தல்­தா­ரி­களின் பிர­தான இலக்கு என சந்­தே­கிக்­கப்­ப­டு­கி­றது. களு­வாஞ்­சிக்­கு­டியில் உள்ள தேவா­லயம் மற்றும் அம்­பா­றையில் உள்ள சில பள்­ளி­வா­சல்­களும் இவர்­க­ளு­டைய இலக்­காக இருக்­கலாம் என நம்­பப்­ப­டு­கி­றது. 11 தற்­கொ­லை­தா­ரிகள் அடுத்த தாக்­கு­த­லுக்கு தம்மை தயார் செய்து வைத்­தி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அரச புல­னாய்வுப் பிரி­வா­னது நீர்­கொ­ழும்பில் உள்ள பாது­காப்பு இல்­லத்தை முதலில் கண்­டு­பி­டித்­தது. அதன் பின்னர் நீண்ட தேடு­தலின் விளை­வா­கவே வெடி­பொருள் களஞ்­சி­ய­சா­லை­யாக பயன்­ப­டுத்­தப்­பட்ட சம்­மாந்­துறை வீட்­டினை ஏப்ரல் 26 ஆம் திகதி கண்­டு­பி­டித்­தனர்.

பல­ரது உயிரைப் பாது­காத்த லொறி சாரதி

ஏப்ரல் 26 ஆம் திகதி பாது­காப்புப் படை­யினர் கிழக்கு மாகா­ணத்தின் சாய்ந்­த­ம­ருதில் உள்ள வீடு ஒன்­றினைச் சுற்­றி­வ­ளைத்­தனர். குறித்த வீட்டில் இருந்த 6 சிறு­வர்கள் உட்­பட 16 பேரை பாது­காப்புப் படை­யினர் கைது செய்­வ­தற்கு சில நிமி­டங்­க­ளுக்கு முன்னர் அவர்கள் அனை­வரும் தற்­கொலைத் தாக்­கு­தலில் உயி­ரி­ழந்­தனர். குறித்த சுற்­றி­வ­ளைப்பு ஊட­கங்கள் மற்றும் புல­னாய்வின் மூலம் கிடைக்­கப்­பெற்ற தக­வல்­களின் அடிப்­ப­டையில் மேற்­கொள்­ளப்­பட்­டது.
என்­ன­வாக இருந்த போதிலும் இரண்­டா­வது தாக்­கு­த­லுக்கு வேண்­டிய வெடி பொருட்கள் மற்றும் வெடி­பொருள் உற்­பத்­திப்­பொ­ருட்­களை நீர்­கொ­ழும்பில் இருந்து கல்­மு­னைக்கு ஏற்­றிச்­செல்­வ­தற்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட சாரதி பற்­றிய தக­வல்கள் பெரி­ய­ளவில் அறிக்­கை­யி­டப்­ப­ட­வில்லை.

பாது­காப்பு கார­ணங்­க­ளினைக் கருத்தில் கொண்டு குறித்த சார­தியின் பெயர் விப­ரங்­களை மாற்றி இந்தக் கட்­டு­ரையில் அவரைப் பற்றி பிர­சு­ரிக்­கின்றோம்.
நீர்­கொ­ழும்பு மற்றும் பாணந்­துறை ஆகிய வீடு­களில் ஈஸ்டர் தாக்­கு­த­லுக்குத் தேவை­யான குண்­டுகள் தயா­ரிக்­கப்­பட்­டதன் பின்னர் குண்­டு­களைத் தயா­ரிப்­ப­தற்­கான மூலப் பொருட்­களை சம்­மாந்­து­றையில் உள்ள வீட்­டுக்கு மாற்ற தாக்­குதல் குழு­வினர் முடிவு செய்­தனர். இந்த விட­யங்­களின் பார­தூரம் தொடர்பில் எதை­யுமே அறிந்­தி­ராத லொறி சாரதி பிர­சன்னா ஏப்ரல் 9 ஆம் திகதி நீர்­கொ­ழும்பில் இருந்து சம்­மாந்­து­றைக்கு பொருட்­களை ஏற்­றிச்­செல்ல ஒப்­புக்­கொண்டார்.

இலங்­கையில் இடம்­பெ­ற­வி­ருந்த இரண்­டா­வது குண்­டு­வெ­டிப்­பினை தடுத்து ஆயி­ரக்­க­ணக்­கான உயிர்­களை காத்­ததன் மூலம் அவர் ஒரு நாய­க­னாக பார்க்­கப்­ப­டு­கிறார். ஏப்ரல் 9 ஆம் திகதி நீர்­கொ­ழும்பில் இருந்து அம்­பா­றையை நோக்கிச் செல்ல அழைப்பு ஒன்று பிர­சன்­னா­வுக்கு கிடைத்­தது. பின்னர் குறித்த இடம் கல்­மு­னைக்கு மாற்­றப்­பட்­டது. கையில் பணம் இல்­லாத தரு­ணத்தில் தூரப்­பி­ர­தேசம் ஒன்­றுக்கு ‘ஹயர்’ கிடைத்­ததால் பிர­சன்னா மகிழ்ந்தார். பிர­சன்­னாவை விசா­ரணை செய்த போது பொலிஸார் அவ­ரிடம் ‘லொறியில் என்ன கொண்டு போனீர்கள்’ என்று கேட்­டார்கள். அதற்கு அவர் தங்­கத்தை சுத்­தி­க­ரிப்­ப­தற்­கான பொருட்­களை கொண்டு போன­தாக தெரி­வித்தார். குறித்த பொருட்கள் அனைத்தும் கல்­மு­னையில் இறக்கி வைத்­ததன் பின்னர் அவர் அங்­கி­ருந்து வெளி­யே­றி­யுள்ளார்.

“ஏப்ரல் 9 ஆம் திகதி நீர்­கொ­ழும்பில் உள்ள கட்­டு­வ­பிட்­டிய தேவா­ல­யத்­துக்கு அண்­மையில் இரவு 10 மணிக்கு வரும்­படி நான் அழைக்­கப்­பட்­டி­ருந்தேன். ஆனால் நான் செல்லும் வழியில் பல்­வேறு நெருக்­க­டி­களை சந்­தித்தேன். எனது போனின் பெற்­றரி செய­லி­ழந்­தது. குறித்த நீர்­கொ­ழும்பு வீட்­டுக்குச் செல்ல முன்­னரே டீசல் தீர்ந்து விட்­டது. நான் பெட்ச் ஆகிய டய­ரில்தான் அன்று லொறி­யினை ஓட்­டினேன். அன்று முழு­வதும் சாப்­பி­டக்­கூட பணம் இருக்­க­வில்லை. நான் நீர்­கொ­ழும்பு வீட்டைச் சென்­ற­டையும் போது மணி 10.30 இருக்கும். சாமான்­களை லொறிக்கு ஏற்றி முடிக்கும் போது 12.30 இருக்கும். அந்த வீட்டில் இருந்த ஒரு­வ­ருடன் நான் பய­ணத்தை தொடங்­கினேன். கல்­மு­னையில் ஒருவர் வந்து எங்­க­ளுடன் இணைந்து கொண்டார். அவர் ஸஹ்­ரானின் சகோ­தரன் ரிழ்வான் ஆவார். சாமான்­களை லொறியில் இருந்து இறக்கி வைக்கும் வரை தூங்­கும்­படி அவர்கள் என்­னிடம் சொன்­னார்கள். நான் தூங்க விரும்­ப­வில்லை. அதனால் பொருட்­களை இறக்­கு­வ­தற்கு உத­வினேன். வாக­னத்­துக்குள் பாரம் கூடிய கேன்கள் நிறை­யவே இருந்­தன.

‘ஏன் இந்தக் கேன்கள் இவ்­வ­ளவு பார­மாக இருக்­கின்­றன’ என்று நான் அவர்­க­ளிடம் கேட்டேன். ‘இதில் தங்க நகைகள் செய்­வ­தற்குப் பயன்­படும் சல்­பூரிக் அமிலம் இருக்­கின்­றது’ என்று அவர்கள் கூறி­னார்கள். எனக்கு சந்­தேகம் ஏற்­ப­டாத வகையில் அவர்கள் நடந்து கொண்­டார்கள். என்­னோடு இருந்த இன்­னொ­ருவர் எங்­க­ளது நட­வ­டிக்­கைகள் ஒவ்­வொன்­றையும் வித்­தி­யா­ச­மான மொழி­யொன்றில் போனில் யாருக்கோ விவ­ரித்துக் கொண்டே இருந்தார். நாங்கள் இரவு 12.30 மணி­ய­ளவில் சம்­மாந்­து­றையை அடைந்தோம்.

ஏப்ரல் 21 தாக்­கு­தலின் பின்னர் நான் அதிர்ச்­சி­ய­டைந்தேன். ஏப்ரல் 9 ஆம் திகதி நான் சென்ற சவா­ரி­யுடன் தீவி­ர­வா­தி­க­ளுக்கு ஏதும் தொடர்பு இருக்­குமா என்ற பல கேள்­விகள் எனது சிந்­த­னையில் வந்து போயின. எனது குடும்­பத்­தா­ருடன் கலந்துரையாடிய பின்னர் எனக்குத் தெரிந்த வர்த்தகர் ஒருவரின் துணையுடன் நான் பொலிஸாருக்குத் தகவல் வழங்க முடிவு செய்தேன். நான் அதை பொலிஸாரிடம் தெரிவித்ததன் மூலம் ஆயிரக்கணக்கான இலங்கையர்களை இன்று பாதுகாத்துள்ளேன். ஆனால் அதற்காக எனக்கு எதுவும் கிடைக்கவில்லை. நான் வெளியில் செல்ல பயப்படுகிறேன். எனது குடும்பத்தின் பாதுகாப்பினை நினைத்து பயமாக இருக்கின்றது. அரசாங்கம் பொருளாதார ரீதியாக எனக்கு உதவினால் அது பெரிய உதவி. அப்படிச் செய்தால் நான் முன்னர் இருந்ததைப் போல பாதுகாப்பை உணர்வேன்.” என்றார்.

ஏப்ரல் 25 ஆம் திகதியன்று நீர்கொழும்பு வீடு தொடர்பாக பிரசன்னா பொலிஸாரிடம் தெரிவிக்கும் போது ஏற்கனவே பொலிஸார் அந்த வீடு தொடர்பான விடயங்களை அறிந்திருந்தனர். பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை பிரசன்னா வழங்கிய மேலதிக தகவல்களுடன் இணைத்து விசாரித்து வருகின்றனர்.

தமிழில் – எம்.ஏ.எம்.அஹ்ஸன்

நன்றி: டெய்லி மிரர்

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.