பொதுபலசேனாவின் கண்டி மாநாடு குறித்து முஸ்லிம்கள் அச்சத்தில் : ஜனாதிபதி, பிரதமரிடம் நேரில் முறையீடு

0 536

பொது­ப­ல­சேனா அமைப்பு பல தேசிய அமைப்­பு­க­ளுடன் இணைந்து கண்­டியில் எதிர்­வரும் 7 ஆம் திகதி ஏற்­பாடு செய்­துள்ள மாநாடு தொடர்பில் கண்டி மற்றும் அயல் பிர­தே­சங்­களைச் சேர்ந்த முஸ்­லிம்கள் பெரும் அச்­ச­முற்­றுள்­ள­தா­கவும் இது தொடர்பில் ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­ச­ருடன் கலந்­து­ரை­யா­டி­யுள்­ள­தா­கவும் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்தார்.

கண்­டியில் பொது­ப­ல­சேனா ஏற்­பாடு செய்­துள்ள மாநாடு தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்; ‘கண்டி பகு­தியைச் சேர்ந்த முஸ்­லிம்­களும் மற்றும் சிவில் சமூக அமைப்­பு­களும் குறிப்­பிட்ட மாநாட்­டுக்கு நீதி­மன்ற தடை­யுத்­த­ர­வினைப் பெற்று தடை செய்ய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு என்­னிடம் கோரிக்கை விடுத்­துள்­ளனர். இது தொடர்பில் ஜனா­தி­ப­தி­யையும், பிர­த­ம­ரையும், பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­ச­ரையும் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினேன். கண்டி மற்றும் அயல்­ப­குதி மக்கள் அச்­ச­முற்­றி­ருப்­ப­தையும் எடுத்து விளக்­கினேன். மாநாடு இடம்­பெ­று­வ­தற்கு இட­ம­ளிப்­பதா? இல்­லையேல் தடை­யுத்­த­ரவு பெற்றுக் கொள்­வதா? என்­பது பற்றி சிந்­தித்து தீர்­மானம் மேற்­கொள்­வ­தாகத் தெரி­வித்­தி­ருக்­கி­றார்கள்.

இது தொடர்பில் ஏனைய முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­டமும் கதைத்­தி­ருக்­கிறேன். கண்டிப் பிர­தேச முஸ்­லிம்­களின் பாது­காப்புக் கருதி இம்­மா­நாட்­டுக்கு நீதி­மன்ற தடை­யுத்­த­ரவு பெற்­றுக்­கொள்­வ­தற்­காக அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்­கு­மாறு கோரி­யி­ருக்­கிறேன்.

மாநாடு எதிர்­வரும் 7 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்­ளதால் நாளை சனிக்­கி­ழமை இறுதித் தீர்மானம் எட்டப்படும் என நினைக்கிறேன். கண்டி மற்றும் அயல் பிரதேசங்களுக்கு பாதுகாப்பினைப் பலப்படுத்துமாறு பதில் பொலிஸ்மா அதிபரைக் கோரியிருக்கிறேன்’ என்றார்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.