கொழும்பு பள்­ளி­வா­சல்­களில் அநா­வ­சிய பாது­காப்பு கெடு­பி­டி

உடன் நிறுத்துமாறு மக்கள் கோரிக்கை

0 683

ஏப்ரல் 21 குண்டுத் தாக்­கு­தல்­களின் பின்னர் தலை­நகர் கொழும்­பி­லுள்ள பள்­ளி­வா­சல்­களில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட தீவிர பாது­காப்புக் கெடு­பி­டிகள் இன்­று­வரை தொடர்­வ­தா­கவும் இதன் கார­ண­மாக பள்­ளி­வா­சல்­க­ளுக்குச் செல்­வதில் பலரும் அசௌ­க­ரி­யங்­களைச் சந்­திப்­ப­தா­கவும் விசனம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

குறிப்­பாக பயணப் பைக­ளையோ அல்­லது ஏனைய பைக­ளையோ எடுத்துச் செல்­வோரை பள்­ளி­வா­சல்­க­ளுக்குள் நுழை­ய­வி­டாது வாயிற் காவ­லர்கள் தடுத்து வரு­கின்­றனர். இதன் கார­ண­மாக வெளி­யூர்­க­ளி­லி­ருந்து தற்­கா­லிக தேவை­க­ளுக்­காக கொழும்­புக்கு வருகை தருவோர் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு சென்று தொழு­கையில் ஈடு­பட முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.

ஏப்ரல் குண்டுத் தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து நாட்டில் மத தலங்­களின் பாது­காப்பு அதி­க­ரிக்­கப்­பட்­டது. இதன்­போது கொழும்­பி­லுள்ள சகல பள்­ளி­வா­சல்­க­ளிலும் பொலி­சாரும் இரா­ணு­வத்­தி­னரும் தொண்­டர்­களும் பாது­காப்புக் கட­மையில் ஈடு­பட்­டனர். ஆரம்ப நாட்­களில் பள்­ளி­வா­சல்­க­ளுக்குள் நுழையும் சக­லரும் உடற்­ப­ரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்டே அனு­ம­திக்­கப்­பட்­டனர். அத்­துடன் பள்­ளி­வா­சல்­க­ளுக்குள் எந்­த­வி­த­மான பைக­ளையும் எடுத்துச் செல்­வது முற்­றாகத் தடை செய்­யப்­பட்­டது.

எனினும், நாட்டில் மீண்டும் சுமுக நிலை ஏற்­பட்ட பிற்­பாடு பள்­ளி­வா­சல்­களில் உடற்­ப­ரி­சோ­த­னைகள் நிறுத்­தப்­பட்­டன. அத்­துடன் பாது­காப்புக் கட­மையில் ஈடு­பட்டு வந்த பொலி­சாரும் இரா­ணு­வத்­தி­னரும் விலக்கிக் கொள்­ளப்­பட்­டனர். இருப்­பினும் பள்­ளி­வா­சலால் நிய­மிக்­கப்­பட்­ட­வர்கள் வாயிற் காவ­லர்கள் தொடர்ந்தும் காவலில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். இவர்கள் பைக­ளுடன் பள்­ளி­வா­சல்­க­ளுக்குள் நுழைய முற்­ப­டு­வோரை வழி­யி­லேயே திருப்பி அனுப்­பு­வ­துடன் மனதை நோக­டிக்கும் மோச­மான வார்த்தைப் பிர­யோ­கங்­க­ளையும் மேற்­கொள்­வ­தாக பலரும் முறைப்­பா­டு­களை முன்­வைத்து வரு­கின்­றனர். இது குறித்து சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் பலர் தமது அதி­ருப்­தியை வெளி­யிட்­டுள்­ளனர்.

நாட்டின் பல்­வேறு பொது மற்றும் தனியார் கட்­டி­டங்­க­ளுக்கு பைக­ளுடன் வரு­வோரை உரிய முறையில் சோத­னை­யிட்டு உள்ளே அனு­ம­திக்­கின்ற நிலையில் பள்­ளி­வா­சல்­களில் மாத்­திரம் இந்த இறுக்­க­மான நடை­முறை பின்­பற்­றப்­ப­டு­வது ஏன் என்றும் மக்கள் கேள்வி எழுப்­பு­கின்­றனர்.

அநா­வ­சி­ய­மான இந்தக் கெடு­பிடி கார­ண­மாக பலர் உரிய நேரத்­திற்கு பள்­ளி­வா­சல்­களில் தொழு­கை­களில் ஈடு­பட முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் ஒரு பள்­ளி­வா­சலில் அனு­மதி மறுக்க மறு பள்ளிவாசலுக்குச் சென்றால் அங்கும் அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, இது தொடர்பில் கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் உடனடிக் கவனம் செலுத்துவதுடன் இந்த கெடுபிடிகளை தவிர்ப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ளுமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.