சஹ்ரானுக்கு எதிரான விசாரணை உளவுத்துறையின் கடிதத்தால் ஒரு வருடத்துக்கு முன் நிறுத்தம்

0 497

21/4 தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களின் சூத்­தி­ர­தா­ரி­யாகக் கரு­த­ப்படும் பயங்­க­ர­வாதி சஹ்ரான் தொடர்பில் ரி.ஐ.டி. என­ப்படும் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் விசா­ர­ணைகள், தேசிய உள­வுத்­து­றையின் கடி­தத்தின் பிர­காரம் ஒரு வரு­டத்­துக்கு முன்னர் நிறுத்­தப்­பட்­டுள்­ள­தாக கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்றில் நேற்று வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது.

2018 ஏப்ரல் 2 ஆம் திகதி தேசிய உள­வுத்­துறை பொலிஸ்மா அதி­ப­ருக்கு கடி­த­மொன்றை அனுப்­பி­ய­தா­கவும், அதில் சஹ்ரான் தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­படும் உள­வுத்­துறை நட­வ­டிக்­கை­க­ளுக்கு, பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் பகி­ரங்க விசா­ர­ணைகள் பாதிப்பை ஏற்­ப­டுத்­து­மெ­னக்­கூறி அதனை நிறுத்தக் கோரி­யுள்­ள­தா­கவும் அத­னை­ய­டுத்தே அந்த விசா­ர­ணைகள் நிறுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனுஜ பிரே­ம­ரத்ன குறித்த கடி­தத்தின் பிர­தியை சமர்ப்­பித்து மன்­றுக்கு அறி­வித்தார்.

அது தொடர்பில் அதே மாதம் 10 ஆம் திகதி, அப்­போது சட்டம் ஒழுங்கு அமைச்சின் செய­ல­ராக இருந்த பத்­ம­சிறி ஜய­மான்­ன­வுக்கு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர கடிதம் ஊடாகத் தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும், சஹ்­ரா­னுக்கு எதி­ராக 2016 முதல் கிடைக்­கப்­பெற்­றி­ருந்த தக­வல்­களை மைய­ப்­படுத்­திய விசா­ர­ணைகள் அத­னா­லேயே தடைப்­பட்­ட­தா­கவும் அவர் சுட்­டிக்­க­ாட்­டினார்.

இந்­நி­லையில் சஹ்ரான் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­க­வில்­லை­யென தற்­போது கைது செய்­யப்­பட்­டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மீது குற்றம் சுமத்துவது நியாயமல்ல எனவும் அவர் நீதிவானிடம் சுட்டிக்காட்டியதுடன், குறித்த கடிதங்களின் பிரதிகளையும் மன்றுக்கு சமர்ப்பித்தார்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.