நல்லடக்கஞ் செய்யப்பட்டு 28 ஆவது தினம் மாயமான ஜனாஸா

அசச்சுறுத்தலா? நாச வேலையா?

0 989

மொற­க­ஹ­கந்த மற்றும் வேமெ­டில்ல நீர்த்­தேக்­கங்­களின் நீர் ‘வயம்ப எல’ எனும் வாய்க்­காலை ஊட­றுத்துச் செல்லும் எழில்­மிகு வயல் வெளிகள் நிறைந்த பல்­லே­வெல கிரா­மத்தில் 24ஆம் திகதி திங்­கட்­கி­ழமை காலை 6.00 மணி­ய­ளவில் காதும் காதும் வைத்தாற் போன்று பேசப்­பட்ட செய்­தி­யொன்று சற்று நேரத்தில் காட்டுத் தீயை­விட மிக வேக­மாக அடுத்­த­டுத்த கிரா­மங்­க­ளுக்கும் பரவ ஆரம்­பிக்­கவே மக்கள் செய்­வ­த­றி­யாது அதிர்ச்­சியில் உறைந்து போயி­ருந்­தனர்.

கலே­வெல பிர­தேச செய­லகப் பிரி­வி­லுள்ள பல்­லே­வெல கிரா­மத்தின் முஸ்லிம் பொது மைய­வா­டியில் 28 நாட்­க­ளுக்கு முன்னர் அடக்கம் செய்­யப்­பட்­டி­ருந்த கப்­ருகள் இரண்டு மீண்டும் தோண்­டப்­பட்டு அவற்றில் ஒன்­றி­லி­ருந்த நப­ரொ­ரு­வரின் ஜனாஸா இர­வோ­டி­ர­வாக மாய­மாகி விட்­டது என்ற செய்­தியே இவ்­வாறு பிர­தேச மக்­க­ளையும் அயல் பிர­தே­ச­வா­சி­க­ளையும் கதி கலங்கச் செய்­தி­ருந்­தது.

பல்­லே­வெல ஜும்ஆ பள்­ளியின் நிர்­வாக சபைத் தலைவர் செய்­னு­லாப்தீன் முஹம்­மது ரம்ஸீன் மற்றும் பல்­லே­வெல விவ­சாய அமைப்பின் தலைவர் இப்­ராஹிம் ஹாஜி ஆகியோர் தமக்குக் கிடைக்­கப்­பெற்ற தக­வலை காலை 6.15 மணி­ய­ளவில் பல்­லே­வெல கிராம சேவை அதி­காரி பி.ஏ.ஜயலத் ஜய­ரத்­ன­வுக்கு தெரி­வித்தனர்.

காலை 6.45 மணி­ய­ளவில் கலே­வெல பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி ஜானக்க வீர­ரத்ன, பிரதிப் பொறுப்­ப­தி­கா­ரி­க­ளான ஹரிஸ்­சந்ர மற்றும் சார்ஜன்ட் வீர­ரத்ன உள்­ளிட்ட பொலிஸ் குழு­வினர் பல்­லே­வெல கிராம சேவை அதி­கா­ரி­யுடன் ஸ்தலத்­திற்கு வரு­கை­தந்து விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர்.
முஸ்­லிம்­களின் புனித நோன்பு மாதத்தில் அதா­வது, மே மாதம் 27 ஆம் திகதி நல்­ல­டக்கம் செய்­யப்­பட்ட தமது தாய் மாம­னா­ரான ஹபீப் லெப்பை என்­பரின் ஜனா­ஸாவே இவ்­வாறு காணாமற் போயி­ருப்­ப­தாக ஏ.ஆர்.எம். மிஹ்ழார் என­பவர் இதன்­போது தமது வாக்­கு­மூ­லத்தில் தெரி­வித்தார். நீண்­ட­கா­ல­மாக நீரி­ழிவு நோயி­னாலும், சிறு­நீ­ரக நோயி­னாலும் பாதிக்­கப்­பட்டு தம்­புள்ள ஹெக்டர் கொப்­பே­க­டுவ வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சை­பெற்று வந்த நிலையில் கடந்த மாதம் 27 ஆம் திகதி தமது மாமனார் உயி­ரி­ழந்­த­தா­கவும், அன்­றைய தினமே குறித்த மைய­வா­டியில் மீள தோண்­டப்­பட்ட குறித்த இடத்தில் ஜனாஸா நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­ட­தா­கவும் தமது வாக்­கு­மூ­லத்தில் அவர் மேலும் தெரி­வித்தார்.

பின்னர் மைய­வாடி மற்றும் அதன் சுற்று வட்­டா­ரங்­களை ஆய்­வு­செய்த பொலிஸார் மைய­வாடி பிர­தான நுழை­வாயில் பூட்­டி­டப்­பட்டு மூடப்­பட்­டி­ருப்­ப­தையும், மைய­வாடி வடக்கு வலது மூலையில் பாது­காப்பு முட்­கம்பி வேலியின் இரண்டு பட்­டுக்கள் துண்­டிக்­கப்­பட்டு அத­னூ­டாக சடலம் இழுத்துச் செல்­லப்­பட்­டி­ருந்­த­மைக்­கான தட­யங்கள் இருந்­த­தையும் அடக்கம் செய்­வ­தற்கு முன்னர் ஜனா­ஸா­விற்கு அணி­விக்­கப்­படும் வெள்ளைத் துணியின் (கபன்) சிதை­வுகள் முட் கம்­பியில் சிக்­கி­யி­ருந்­த­துடன் ஏனைய வெள்ளைத் துணிகள் யாவும் துண்டு களாக அரு­கி­லி­ருந்த சிற்­றோ­டையில் மிதந்து கொண்­டி­ருந்­த­தையும் அவ­தா­னித்­தனர்.

பிர­தே­ச­வா­சி­க­ளுடன் தேடுதல் நட­வ­டிக்­கை­களை தொடர்ந்து மேற்­கொண்ட பொலிஸார் மைய­வா­டிக்கு கிழக்குப் புற­மாக சிற்­றோ­டையின் கரை­யோ­ர­மாக ஜனா­ஸாவை இழுத்துச் சென்று சுமார் 200 மீற்றர் தொலை­வி­லுள்ள முருங்கைத் தோட்டம் ஒன்றின் மூலையில் அரை குறை­யாகப் புதைத்து அதன்­மீது சரு­கு­களை குவித்­தி­ருந்­ததைக் கண்­டனர்.

25 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை காலை 8.00 மணிக்கு விசா­ர­ணையின் பொருட்டு நீதிவான் ஸ்தலத்­திற்கு வருகை தந்த பின்னர் ஜனாஸா நீதி­வானின் எதிரில் மீண்டும் தோண்­டி­யெ­டுக்­கப்­பட்டு விசா­ர­ணைகள் தொடரும் என அறி­விக்­கப்­பட்­ட­துடன் அன்­றி­ரவு முழுதும் பிர­தேச மக்­க­ளுடன் பொலிஸார் பாது­காப்புக் கட­மை­களில் தொடர்ந்து ஈடு­பட வேண்­டி­ய­தா­யிற்று.

மாத்­தளை மாவட்­டத்தில் பர­ப­ரப்­பையும் முஸ்லிம் மக்­க­ளி­டையே பேர­திர்ச்­சி­யையும் ஏற்­ப­டுத்­திய இச்­சம்­ப­வத்­திற்­கான காரணம் என்ன? மன்சூர் அல்­லது அவ­ரது குடும்­பத்­தா­ருடன் எவ­ருக்கும் இருந்த தனிப்­பட்ட கோபமா? அல்­லது முருங்கைத் தோட்ட உரி­மை­யா­ள­ருடன் எவ­ருக்கும் ஏற்­பட்­டி­ருந்த குரோ­தமா? திட்­ட­மிட்ட நாச­கார செயலா? இனங்­க­ளி­டையே முறு­கலை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான புதி­யதோர் உபா­யமா என்று பல­வி­த­மாக சந்­தே­கங்கள் எழுந்­தன.

அத்­துடன் பல்­வேறு வதந்­தி­களும் பரப்­பப்­பட்டு வந்­தன. இதனால் குடும்­பத்­தி­ன­ரது கவ­லைகள் மேலும் அதி­க­ரித்து அவர்கள் ஊண் உறக்­க­மின்றி அழுது புலம்பி பிர­லா­பிக்கத் தொடங்­கி­யி­ருந்­த­தையும் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது.
இத்­த­கைய வீணான வதந்­திகள் சுமார் பதி­னெட்டு (18) மாதங்­க­ளுக்கு முன்னர் பணிப்­பெண்­ணாக தொழில் புரி­வ­தற்­கனெ சவூதி அரே­பி­யா­விற்கு சென்று கண­வனின் மர­ணத்­திற்­கா­வது தனது தாய்­நாட்­டிற்கு வர­மு­டி­யாத நிலையில் வீட்டு எஜமான் அல்­லது எஜ­மா­னி­யினால் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளதாகக் கூறப்­படும் மன்­சூரின் மனை­வி­யான ஜே. நஸ்­மி­யாவைப் பெரிதும் பாதித்­தி­ருப்­ப­தாக அவ­ரது உற­வி­னர்கள் மிகுந்த கவ­லை­யுடன் தெரி­விக்­கின்­றனர்.
25ஆம் திகதி காலை 8.00 மணி­ய­ளவில் ஜனாஸா நல்­ல­டக்கம் செய்­யப்­பட்ட இடத்­திற்கு தம்­புள்ள நீதி­மன்ற நீதிவான் எஸ்.பீ.இலங்­க­சிங்க, தம்­புள்ளை வைத்­தி­ய­சாலை சட்ட வைத்தியர் மேனகாந்த் ஆகியோர் வருகைதந்து விசாரணைகளை ஆரம்பித்ததுடன், ஜனாஸா புதைக்கப்பட்டு புல் பற்றை மற்றும் சருகுகளால் மூடப்பட்டிருந்த குழி அகழப்பட்டு ஜனாஸா வெளியில் எடுக்கப்பட்டது. மன்சூருடைய மகன் முகம்மத் முபீன் (17வயது) தமது தந்தையை அடையாளம் காட்டினார்.

ஜனாஸாவின் மார்பை சுற்றி புதிய நைலோன் கயிற்றினால் கட்டிய நிலையில் காணப்பட்டது. குழியிலிருந்து இழுத்துவந்து ஒரு அடி ஆழமான குழியில் கிடத்தி மீண்டும் மூடிவிட்டுச் சென்றிருப்பது இதன் போது தெரியவந்தது.

கலேவெல பி.எம்.அன்வர் 

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.