பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க மத்ரஸாக்கள் முனைப்புடன் செயற்படும்

அரபுக் கல்லூரி அதிபர்கள், நிர்வாகிகள் 950 பேர் பங்கேற்ற மாநாட்டில் தீர்மானம்

0 693

மத்­ர­ஸாக்­களில் உள்ள பாடத்­திட்­டங்கள் அனைத்தும் இந்­நாட்டின் சட்­ட­திட்­டங்­க­ளுக்கு உட்­பட்­டவை. அவற்றில் பயங்­க­ர­வா­தத்தைத் தூண்டும் அல்­லது போதிக்கும் எத்­த­கைய விட­யங்­களும் இல்லை என்­பதை உறு­தி­யா­கவும் பொறுப்­பு­டனும் கூறிக்­கொள்­கிறோம். இலங்­கையில் பயங்­க­ர­வா­தத்­தையும் அதன் சிந்­த­னை­யையும் வேரோடு இல்­லா­தொ­ழிக்க மத்­ர­ஸாக்கள் முனைப்­புடன் செயற்­படும் என உறு­தி­ய­ளிக்­கிறோம் என அரபுக் கல்­லூ­ரி­களின் அதி­பர்கள் மற்றும் நிர்­வா­கி­களின் மாநாட்டில் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை, முஸ்லிம் பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் மற்றும் அகில இலங்கை அரபுக் கல்­லூ­ரிகள் ஒன்­றியம் என்­பன இணைந்து நேற்று முன்­தினம் தெஹி­வளை முஹியதீன் ஜும்ஆ பள்­ளி­வா­சலில் அரபுக் கல்­லூ­ரி­களின் அதி­பர்கள், நிர்­வா­கி­க­ளுக்­கான மாநாடு நடை­பெற்­றது. சுமார் 950 பேருக்கு மேற்­பட்டோர் கலந்து கொண்ட இம்­மா­நாட்­டிலே மேற்­கு­றிப்­பிட்ட தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது. மாநாட்டில் மேலும் பல தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டன. அத்­தீர்­மா­னங்­க­ளா­வன,

  • 2019 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடை­பெற்ற பயங்­க­ர­வாத தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களை இம்­மா­நாடு வன்­மை­யாகக் கண்­டிக்­கி­றது.
  • இத்­தாக்­கு­தல்­களில் உயி­ரி­ழந்­த­வர்­களின் குடும்­பங்­க­ளுக்கு ஆறுதல் கூறு­வ­துடன் காய­முற்­ற­வர்கள் விரைவில் குண­ம­டைய பிரார்த்­திக்­கிறோம்.
  • சாந்தி, சமா­தானம், சக­வாழ்வு ஆகிய உயர் குணங்­களை ஊக்­கு­விக்கும் இஸ்­லாத்­துக்கும் பயங்­க­ர­வா­தத்­துக்கும் எவ்­வித தொடர்பும் இல்லை என்­பதை இம்­மா­நாடு உறு­தி­யாகக் கூறிக் கொள்­கி­றது.
  • இந்த தாக்­கு­தல்­க­ளுக்கு நேர­டி­யாக மற்றும் மறை­மு­க­மாக கார­ண­மாக இருந்­த­வர்கள் அனை­வ­ருக்கும் உயர்ந்த பட்ச தண்­ட­னையை வழங்க வேண்டும்.
  • குரு­நாகல், புத்­தளம், கம்­பஹா ஆகிய மாவட்­டங்­களில் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட இன­வாதத் தாக்­கு­தல்­க­ளையும் இம்­மா­நாடு வன்­மை­யாகக் கண்­டிக்­கி­றது. அதே­வேளை அதில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு உரிய தண்­ட­னை­களை வழங்க வேண்டும் என சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளிடம் வேண்­டு­கிறோம்.
  • பயங்­க­ர­வாத தாக்­கு­த­லுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களைக் குறு­கிய காலத்தில் கைது செய்து நாட்டின் பாது­காப்பை உறுதி செய்ய உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்ட நாட்டின் ஜனா­தி­பதி, பிர­தமர், அர­சாங்கம், பாது­காப்பு தரப்­பி­னர்­க­ளுக்கு இம்­மா­நாடு நன்­றி­களைத் தெரி­வித்துக் கொள்­கி­றது. மேலும் பயங்­க­ர­வாதத் தாக்­கு­தலை அடுத்து கைது செய்­யப்­பட்­டுள்ள அப்­பா­வி­களை அவ­ச­ர­மாக விடு­விக்க அர­சாங்கம் ஆவணம் செய்ய வேண்டும்.
  • மத்­ர­ஸாக்­களில் உள்ள பாடத்­திட்­டங்கள் அனைத்தும் இந்­நாட்டின் சட்­ட­திட்­டங்­க­ளுக்கு உட்­பட்­டவை என்­ப­தையும் அவற்றில் பயங்­க­ர­வா­தத்தைத் தூண்டும் அல்­லது போதிக்கும் எத்­த­கைய விட­யங்­களும் இல்லை என்­பதை உறு­தி­யா­கவும், பொறுப்­பு­டனும் கூறிக் கொள்­கிறோம்.
  • இலங்­கையில் பயங்­க­ர­வா­தத்­தையும் அதன் சிந்­த­னை­யையும் வேரோடு இல்­லா­தொ­ழிக்க மத்­ர­ஸாக்கள் முனைப்­புடன் செயற்­படும் என்­ப­தற்கு இம்­மா­நாடு பொறுப்­புடன் உறு­தி­மொ­ழி­ய­ளிக்­கி­றது.
  • இந்­நாட்டில் மத்­ர­ஸாக்கள் தொடர்பில் நிலவும் தப்­ப­பிப்­பி­ரா­யங்­களைக் களைந்து இனங்­க­ளுக்கு மத்­தியில் புரிந்­து­ணர்­வையும் சக வாழ்­வையும் ஏற்­ப­டுத்த மத்­ர­ஸாக்கள் முன்­நின்று செயற்­படும்.
  • ஆயிரம் வரு­ட­கால வர­லாற்றில் முஸ்­லிம்கள் இந்­நாட்டின் நலன் விரும்­பி­க­ளா­கவும் சமா­தா­னத்தைப் பேணு­ப­வர்­க­ளா­கவும் ஐக்­கி­யத்­தோடு வாழ விரும்­பு­ப­வர்­க­ளா­கவும் இருந்து வந்­துள்­ளார்கள் என்­ப­தையும் இவ்­வா­றான தீவி­ர­வாத செயற்­பா­டு­க­ளுக்கு துணை போக­வில்லை என்­ப­தையும் கூறிக் கொள்­கிறோம். அத்­தோடு எதிர்­கா­லத்­திலும் இவ்­வாறே முஸ்­லிம்கள் இருப்போம் என்பதை உறுதியாகக் கூறிக் கொள்கிறோம்.
  • நாட்டின் ஊடகங்கள் செய்திகளை வழங்குவதில் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வதுடன் ஊடக தர்மத்தை பேண வேண்டும் என இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது.
  • இன ஐக்கியத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் தொடர்ந்தும் இந்நாட்டில் பேணுவதற்கு அரசாங்கம், பாராளுமன்ற உறுப்பினர்கள், மதத்தலைவர்கள், சிவில் சமூகம், இன, மத, மொழி வேறுபாடின்றி தொடர்ந்தும் அயராது உழைக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறோம்.
    -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.