குழப்பம் ஏற்­படும் வித­மான முகநூல் பதிவு சிலாபம் வர்த்­த­க­ருக்கு 21 வரை விளக்­க­ம­றியல்

0 584

குழப்பம் ஏற்­படும் வித­மாக முக­நூலில் கருத்து வெளி­யிட்­ட­தாக குற்றம் சுமத்­தப்­பட்டு கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள சிலாபம் வர்த்­த­கரை தொடர்ந்தும் இம்­மாதம் 21 ஆம் திகதி வரையில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு சிலாபம் மாவட்ட நீதி­ப­தியும்,  நீதி­வா­னு­மா­கிய மஞ்­சுள ரத்­நா­யக்கா உத்­த­ர­விட்டார். 

சிலாபம் தேக்­க­வத்தை பிர­தே­சத்தைச் சேர்ந்த சிலாபம் நகரில் ஆடை வர்த்­தக நிலை­யத்தை நடாத்திச் சென்ற 35 வய­து­டைய நப­ருக்கே இவ்­வாறு விளக்­க­ம­றியல் நீடிக்­கப்­பட்­டுள்­ளது.

குறித்த இளம் வர்த்­தகர் தனது முகப் புத்­த­கத்தில் பதிவு செய்த பின்­னூட்டம் ஒன்­றை­ய­டுத்து ஆக்­ரோ­ச­ம­டைந்த சிலர் சிலாபம் நகரில் குழப்­பங்­களில் ஈடு­பட்­டதைத் தொடர்ந்து குறித்த வர்த்­தகர் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்தார்.  சிலாபம் நகரில் ஏற்­பட்ட கல­வரம் உரு­வா­வ­தற்கு சந்­தேக நபர் தனது முகப்­புத்­த­கத்தில் பதிவு செய்த பின்னூட்டமே காரணமாக அமைந்ததாகவும் அதனடிப்படையில் அவரைக் கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.