அரசாங்க உத்தியோகத்தர்களின் ஆடை தொடர்பிலான சுற்றுநிருபத்தில் திருத்தம்

0 657

பொது நிர்­வாகம் மற்றும் அனர்த்த முகா­மைத்­துவ அமைச்­சினால் கடந்த மாதம் 31 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட அர­சாங்க உத்­தி­யோ­கத்­தர்­களின் ஆடை தொடர்­பான சுற்று நிரு­பத்தில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை, இந்தச் சுற்­று­நி­ரு­பத்தில் திருத்­தங்­களைச் செய்­யு­மாறு பொது நிர்­வாகம் மற்றும் அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சர் ரஞ்சித் மத்­து­ம­பண்­டார உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ள­தாக பிர­தமர் அலு­வ­லகம் தெரி­வித்­துள்­ளது.

அரச நிறு­வ­னங்கள், வங்­கிகள் மற்றும் பாட­சா­லை­களில் பாது­காப்­பினை உறுதி செய்­வ­தற்­காக அரச உத்­தி­யோ­கத்­தர்­களின் ஆடை தொடர்பில் பொது நிர்­வாகம் மற்றும் அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சு சுற்று நிரு­ப­மொன்­றினை வெளி­யிட்­டது. அச்­சுற்று நிரு­பத்­தின்­படி அரச பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் சாரி அல்­லது ஒஸ­ரியும் ஆண் உத்­தி­யோ­கத்­தர்கள் காற்­சட்டை, மேற்­சட்டை அல்­லது தேசிய உடை அணிய வேண்டும்.

இச்­சுற்று நிருபம் வெளி­யி­டப்­பட்­டதும் அரச அலு­வ­ல­கங்கள், பாட­சா­லை­களில் கட­மை­யாற்றும் முஸ்லிம் பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் பல அசௌ­க­ரி­யங்­களுக் குள்­ளா­கினர். அபாயா அணிந்து கட­மைக்கு வர­வேண்டாம் என தடை விதிக்கப்பட்டது.

இச்சுற்று நிருபத்துக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டதையடுத்தே திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.