நெருக்­க­டி­க­ளி­லி­ருந்து இலங்கை விரைவில் மீண்டெழுவது உறுதி

பயங்­க­ர­வா­தத்தால் இலங்­கையை தோற்­க­டிக்க முடி­யாது என்­கிறார் மோடி

0 631

நெருக்­க­டி­க­ளி­லி­ருந்து இலங்கை  விரைவில் மீண்­டெ­ழு­மென உறு­தி­யாக நம்­புவ­தா­கவும் பயங்­க­ர­வாத தாக்­கு­தல்கள் மூல­மாக இலங்­கையை ஒரு­போதும் தோற்­க­டிக்க முடி­யாது எனவும் இலங்கை மக்­க­ளுக்­காக இந்­தியா எப்­போதும் உறு­தி­யாக நின்று செயற்­ப­டு­மெனவும் இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி தெரி­வித்­துள்ளார்.

சர்­வ­தேச பயங்­க­ர­வாதம் இரண்டு நாடு­க­ளுக்கும் சவா­லாக உள்­ளதால் இரு நாடு­களும் இணைந்து பயங்­க­ர­வா­தத்தை தோற்­க­டிக்­கலாம் எனவும் இலங்கை அரச தலை­வர்­க­ளுக்கு மோடி அழைப்பு விடுத்தார். மாலை­தீ­வு­க­ளுக்­கான அரச விஜயம் ஒன்­றினை மேற்­கொண்­டி­ருந்த இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி ஜனா­தி­பதி மைத்தி­ரிபால சிறி­சே­னவின் அழைப்­பின்­பேரில் நேற்று இலங்­கைக்­கான விஜ­யத்தை மேற்­கொண்­டி­ருந்தார்.

இலங்­கையில் கடந்த ஈஸ்டர் தினத்­தன்று இடம்­பெற்ற பயங்­க­ர­வாத தாக்­கு­தலின்  பின்னர் அரச தலைவர் ஒருவர் இலங்­கைக்கு வருகை தரும் முதல் சந்­தர்ப்பம் இது­வாகும்.  நேற்று காலை 11 மணிக்கு  பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தை வந்­த­டைந்த பிர­தமர் நரேந்­திர மோடியை இலங்கை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வர­வேற்­றி­ருந்தார். அதன் பின்னர் நேற்று நண்­பகல் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் அவ­ருக்­கான வர­வேற்பு நிகழ்­வுகள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டன. இதன்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடியை இரா­ணுவ அணி­வ­குப்பு கெள­ர­விப்­புடன்  ஜனா­தி­பதி செய­ல­கத்தில் வர­வேற்­றி­ருந்தார். கௌரவ  நிமித்தம் 19 பீரங்கி  வேட்­டுக்­களும்   இடம்­பெற்­றன. இந்த வர­வேற்பு நிகழ்வில் அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், பாது­காப்பு படை­களின் பிர­தா­னிகள், முப்­படை தள­ப­திகள் மற்றும் இரா­ஜ­தந்­தி­ரிகள் இந்­திய பிர­தி­நி­திகள் என சக­லரும் கலந்­து­கொண்­டனர்.

இதன் பின்னர் ஜனா­தி­பதி மாளி­கையில் விசேட  நிகழ்­வு­களும் மதிய உண­வுக்­கான  ஏற்­பா­டு­களும் செய்­யப்­பட்­டி­ருந்­தன. அத்­தோடு ஜனா­தி­பதி மாளி­கையில் மர நடுகை நிகழ்வும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. இந்த நிகழ்வில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் கலந்­து­கொண்­டி­ருந்தார். அதேபோல் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடியும் ஒரே வாக­னத்தில் விஜயம் செய்து ஜனா­தி­பதி மாளி­கையை வந்­த­டைந்­தனர். இங்கு அமைச்­சர்கள் பலரும் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.  ஜனா­தி­பதி மாளி­கையில் இந்­திய பிர­தமர் அசோக மரக்­கன்று ஒன்­றி­னையும் நட்­டு­வைத்தார்.  இந்த நிகழ்வில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் அமைச்சர் சஜித் பிரே­ம­தா­சவும் கலந்­து­கொண்­டி­ருந்தார். அத்­துடன் இலங்­கை­யி­லுள்ள இந்­திய பிர­தி­நி­தி­களை சந்­தித்து பிர­தமர் மோடி  உரை நிகழ்த்­தி­யி­ருந்தார். இதில் இலங்கை -– இந்­திய உற­வு­முறை மற்றும் பாது­காப்பு நகர்­வுகள் அதில் இந்­தி­யாவின் ஒத்­து­ழைப்­புகள் என்ற கார­ணி­களை சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

ஜனா­தி­பதி – பிர­தமர் மோடி சந்­திப்பு

இதனை தொடர்ந்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கும் பிர­தமர் நரேந்­திர மோடிக்கும் இடையில் விசேட பேச்­சு­வார்த்­தை­களும் இடம்­பெற்­றன. இரு­த­ரப்பு நட்­பு­றவை பலப்­ப­டுத்தும் பல கலந்­து­ரை­யா­டல்கள் இதன்­போது முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. அத்­துடன் பயங்­க­ர­வாத தாக்­கு­தலின் கார­ண­மாக பதற்ற நிலை காணப்­படும் இந்த சூழ்­நி­லையில் தனது நாட்­டுக்கு வருகை தந்து உல­கத்­தி­ன­ருக்கு வழங்­கிய நற்­செய்தி தொடர்பில் ஜனா­தி­பதி  இந்­திய பிர­த­ம­ருக்கு நன்றி தெரி­வித்தார். அயல் நட்பு நாடான இந்­தி­யா­விற்கும் இலங்­கைக்­கு­மி­டை­யி­லான நம்­பிக்கை மற்றும் நட்­பு­றவு இந்­திய பிர­த­மரின் இந்த விஜ­யத்தின் மூலம் மேலும் வலு­வ­டைந்­தி­ருப்­ப­தாக ஜனா­தி­பதி தெரி­வித்தார். அத்­துடன் இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடியின் இந்த விஜ­ய­மா­னது இலங்­கையின் பொரு­ளா­தார, வர்த்­தக, சுற்­றுலா போன்ற துறை­களின் வளர்ச்­சிக்கு சாத­க­மான நிலையை ஏற்­ப­டுத்தும் என்றும் ஜனா­தி­பதி கூறி­ய­துடன்  இக்­கட்­டான சூழ்­நி­லை­களில் அயல் நட்பு நாடு­க­ளுக்கு உறுத்­து­ணை­யாக இருப்­பது தனது கட­மை­யா­கு­மென்று இதன்­போது இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி தெரி­வித்தார். மேலும் இந்­தியா இலங்கை மீது வைத்­துள்ள நம்­பிக்கை எதிர்­கா­லத்­திலும் இவ்­வாறே பாது­காக்­கப்­ப­டு­மென தெரி­வித்த அவர்  அத்­தோடு அனைத்து தரப்­பு­களின் உத­வி­யுடன் சகல இனத்­தோ­ருக்கும் நீதியை நிலை­நாட்டும் வகையில் கட­மை­யாற்­றி­வரும் ஜனா­தி­பதி  மைத்­திரி­பால சிறி­சே­னவின்  வேலைத்­திட்­டங்கள் தொடர்பில் இந்­திய பிர­தமர் தனது மகிழ்ச்­சியை வெளி­யிட்டார்.

மேலும், இரு­நாட்டு உற­வு­களை மேம்­ப­டுத்தல், வல­யத்தின் பாது­காப்பு, சமா­தானம், நிலை­பே­றான தன்மை ஆகி­யன தொடர்பில் இரு­நாட்டு தலை­வர்­களும் கலந்­து­ரை­யா­டினர். பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­க­ளுக்கு இலக்­கா­கிய இரு நாடுகள் என்ற வகையில், பயங்­க­ர­வா­தத்தை கடு­மை­யாக கண்­டிக்க வேண்­டு­மென்றும் பயங்­க­ர­வா­தத்தை இல்­லா­தொ­ழிப்­ப­தற்கு சர்­வ­தேச ஒத்­து­ழைப்பை மேம்­ப­டுத்த வேண்­டு­மென்றும் இரு­நாட்டுத் தலை­வர்­களும் உடன்­பட்­டனர். இரு­நா­டு­க­ளுக்­கி­டையில் நீண்­ட­கால ஆழ­மான நட்­பிற்கு பரஸ்­பர நம்­பிக்கை மற்றும் மரி­யாதை, ஒத்­து­ழைப்பு ஆகி­ய­வற்றை அடிப்­ப­டை­யா­கக்­கொண்ட கொள்­கையே கார­ண­மாக அமைந்­தி­ருப்­ப­தா­கவும் இரு­நா­டு­க­ளுக்­கு­மி­டை­யி­லான உற­வினை மேலும் வலுப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டு­மென்றும் இரு நாட்டுத் தலை­வர்­களும் இணங்­கினர். தனக்கு வழங்­கிய உற்­சா­க­மான வர­வேற்­பிற்கும் உப­ச­ரிப்­பிற்கும் ஜனா­தி­ப­திக்கும்  இலங்கை அர­சாங்­கத்­திற்கும் இலங்கை மக்­க­ளுக்கும் இந்­திய பிர­தமர் தனது நன்­றி­களை தெரி­வித்தார்.

இந்­திய பிர­தமர், – ரணில், மஹிந்த, சம்­பந்தன் இடை­யிலும் சந்­திப்பு

மேலும் இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடிக்கும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கும் இடை­யிலும் முக்­கிய பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்­றன. அதனை தொடர்ந்து எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் ஷ, தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் மற்றும் உறுப்­பி­னர்­களும் பிர­தமர் நரேந்­திர மோடியை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யி­ருந்­தனர்.

பிர­தமர் மோடி – எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் ஷ சந்­திப்பு

எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷவும் பிர­தமர் நரேந்­திர மோடியை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்தார். இந்த சந்­திப்பில் இரு நாட்டு பாது­காப்பு நகர்­வுகள் குறித்து முக்­கிய கார­ணிகள் கலந்­து­ரை­யா­டப்­பட்­டி­ருந்­தன. குறிப்­பாக இலங்­கையின் எல்லை பாது­காப்பு விட­யங்­களில் இந்­தி­யாவின் ஒத்­து­ழைப்­புகள் அவ­சியம் என்­பதை எதிர்க்­கட்சித் தலைவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்த நிலையில் அதனை பிர­தமர் மோடி ஏற்­று­கொண்டார். அத்­துடன் பயங்­க­ர­வா­தத்தை தடுக்கும் நட­வ­டிக்­கை­களில் இரு நாடு­களும் இணைந்து கைகோர்த்து செயற்­பட வேண்டும் என மோடி தெரி­வித்­துள்ளார்.

மோடி -சம்­பந்தன் சந்­திப்பு

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் ஆர்.சம்­பந்தன் மற்றும் பிர­தி­நி­தி­களும் இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடியை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்­தனர். இதில் தமிழர் தரப்பின் நியா­ய­மான அர­சியல் கோரிக்­கை­களை தெளி­வு­ப­டுத்­திய தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு பிர­தி­நி­திகள் இவை குறித்து ஆழ­மான பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுக்க தனிப்­பட்ட சந்­திப்­பொன்­றையும் கோரி­யி­ருந்­தனர். அவை குறித்தும் பிர­தமர் மோடி அக்­கறை செலுத்­தி­யி­ருந்தார்.

இந்­திய பிர­ஜை­களை சந்­தித்தார் மோடி

இலங்­கையில் உள்ள இந்­திய பிர­தி­நி­தி­க­ளையும் இந்­திய வாழ் சமூ­கத்­தி­ன­ரையும் சந்­தித்து உரை­யாற்­றிய பிர­தமர் மோடி, இலங்கை – இந்­திய உற­வுப்­பாலம் பல­ம­டைய வேண்­டிய கட்­டாயம் குறித்து எடுத்­து­ரைத்தார். இலங்­கைக்கும் இந்­தி­யா­விற்கும் இலை­யி­லான நட்­பு­றவு மேலும் மேலும் பல­ம­டையும் வகையில் தாம் செயற்­பட வேண்டும் என்­ப­துடன் இலங்­கையின் நம்­பிக்­கைக்கு பாத்திரமான தலைமைத்துவத்தை நாம் பெற்றுகொடுக்க வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

கொழும்பு புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு மோடி விஜயம்

பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட  க ொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தையும் பிரதமர் மோடி நேரில் சென்று பார்வையிட்டார்.  இதில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பாராளுமன்ற  உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இதன்போது இலங்கை நெருக்கடிகளில் இருந்து விரைவில் மீண்டெழும் எனவும், பயங்கரவாத தாக்குதல்கள் மூலமாக இலங்கையை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது எனவும் இலங்கை மக்களுக்காக இந்தியா எப்போதும் உறுதியாக நின்று செயற்படும் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நேற்று காலை இலங்கைக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நேற்று பிற்பகல் மீண்டும் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.