4/21 தாக்­கு­தல்கள், முஸ்­லிம்கள் மீதான வன்­மு­றைகள்: 2289 சந்­தே­க­ந­பர்கள் கைது 211 பேர் தடுப்புக் காவலில்

423 பேருக்கு விளக்­க­ம­றியல்; 1655 பேருக்கு பிணை

0 580

4/21 உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள், அதனை தொடர்ந்து நாட­ளா­விய ரீதியில்  நடாத்­தப்­பட்ட சோத­னைகள் மற்றும் அண்­மையில் வடமேல் மாகாண முஸ்லிம் கிரா­மங்­களை மையப்­ப­டுத்­தியும் அதனை ஒத்­த­வி­தத்தில் மேலும் சில இடங்­க­ளிலும் இடம்­பெற்ற வன்­மு­றைகள் தொடர்பில் இது­வரை 2289 பேர் பொலி­ஸாரால் கைது செய்­யப்பட்­டுள்­ளனர். 330 சிங்­க­ள­வர்கள், 139 தமி­ழர்கள், 1820 முஸ்­லிம்கள் இவ்­வாறு பயங்­க­ர­வாத தடை சட்டம், அவ­ச­ர­கால சட்ட விதிகள், சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்டம் மற்றும் தண்­டனை சட்டக் கோவை உள்­ளிட்ட சாதா­ரண சட்­டங்­களின் கீழ் இவர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர கூறினார்.

இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் 1655 பேர் நீதி­மன்­றங்­களில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்டும் பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கு உள்ள அதி­கா­ரத்தின் கீழும் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­துடன்,. 423 பேர் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். ஏனைய 211 பேர் தற்­போதும் சி.ஐ.டி., ரி.ஐ.டி. மற்றும் ஏனைய பொலிஸ் நிலை­யங்­களில் தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ரிக்­கப்­பட்டு வரு­வ­தாக பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர மேலும் கூறினார்.

சட்ட திட்­டங்கள் அடிப்­ப­டை­யி­லான கைதுகள்:

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்­கொலைத் தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து நாட­ளா­விய ரீதியில் சிறப்பு கைது நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்­றன. தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­டையோர், பின்னர் முன்­னெ­டுக்­கப்­பட்ட சோதனை நட­வ­டிக்­கை­களில் சிக்­கியோர் மற்றும் அதன் பின்­ன­ரான வடமேல் மாகாணம் உள்­ளிட்ட சில பகு­தி­களில் ஏற்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் தொடர்பில் என அந்த கைது பட்­டியல் நீடித்­தன.

பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழான கைதுகள்:

இதில் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் கடந்த ஏப்ரல் 21 முதல் நேற்று வரை 575 கைதுகள் இடம்­பெற்­றுள்­ளன. 25 சிங்­க­ள­வர்கள், 13 தமி­ழர்கள், 537 முஸ்­லிம்கள் இவ்­வாறு இச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் உள்­ள­டங்­கு­கின்­றனர். தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­க­ளுடன் நேரி­டை­யாகத் தொடர்­பு­பட்­ட­வர்கள் என சி.ஐ.டி. மற்றும் சி.ரி.ஐ.டி. ஆகிய விசா­ரணைப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்ட அனை­வ­ருமே இந்த சட்­டத்தின் கீழேயே தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றனர்.

அவ­ச­ர­கால சட்­ட­வி­தி­களின் கீழான கைதுகள்:

தொடர் தற்­கொலை தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து அவ­ச­ர­கால சட்­ட­மா­னது நாட்டில் அமுல் செய்­யப்­பட்­டது. இந்த சட்ட விதி­களின் கீழ் நேற்று வரை 213 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். 66 சிங்­க­ள­வர்கள், 6 தமி­ழர்கள் மற்றும் 141 முஸ்­லிம்கள் அவ­சர கால சட்ட விதி­களின் கீழ் கைதா­னோரில் உள்­ள­டங்­கு­கின்­றனர்.

ஐ.சி.சி.பி.ஆர்.இன் கீழான கைதுகள்:

இதே­வேளை, ஐ.சி.சி.பி.ஆர். எனப்­படும் அர­சியல் மற்றும் சிவில் உரி­மைகள் தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் கீழ் கடந்த ஏப்ரல் 21 முதல் நேற்று வரை­யி­லான காலப்­ப­கு­தியில் 72 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்­களில் அதி­க­மானோர் சிங்­க­ள­வர்­க­ளாவர். 45 சிங்­க­ள­வர்கள் இவ்­வாறு இச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­டுள்ள நிலையில், ஏனை­யோரில் 26 முஸ்­லிம்­களும் ஒரு தமி­ழரும் உள்­ள­டங்­கு­கின்­றனர்.

தண்­டனை சட்டக் கோவையின் கீழான கைதுகள்:

இத­னை­விட ஏனைய கைதுகள் தண்­டனை சட்டக் கோவையின் கீழும் ஏனைய சாதா­ரண சட்ட விதி­களின் கீழும் இடம்­பெற்­றுள்­ளன. அவ்­வாறு சாதா­ரண சட்­டங்­களின் கீழ் மட்டும் ஏப்ரல் 21 முதல் நேற்று வரை 1429 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். அவர்­களில் 188 சிங்­க­ள­வர்­களும் 120 தமி­ழர்­களும் 1121 முஸ்­லிம்­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர்.

பிணை விபரம்:

இந்­நி­லையில் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களின் பின்னர் அந்த தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள், அதனைத் தொடர்ந்து நாட­ளா­விய ரீதியில் நடாத்­தப்­பட்ட சோத­னைகள் மற்றும் அண்­மையில் வடமேல் மாகாண முஸ்லிம் கிரா­மங்­களை மையப்­ப­டுத்­தியும் அதனை ஒத்த விதத்தில் மேலும் சில இடங்­க­ளிலும் இடம்­பெற்ற வன்­மு­றைகள் தொடர்பில் கைதான 2289 பேரில் 1655 பேர் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர். நீதி­மன்­றங்­க­ளி­னாலும் பொலிஸ் நிலை­யங்­க­ளி­னாலும் கைதின் பின்னர் அவர்கள் இவ்­வாறு விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர்.

இவ்­வாறு பிணையில் விடு­விக்­கப்­பட்­டோரில் 1261 பேர் முஸ்­லிம்­க­ளாவர். பிணையில் விடு­விக்­கப்பட்ட ஏனையோரில் 269 சிங்­க­ள­வர்­களும் 125 தமி­ழர்­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர்.

தடுப்புக் காவல் விபரம்:

இதே­வேளை, கைது செய்­யப்­பட்ட 2289 பேரில் 211 பேர் தொடர்ந்தும் பொலிஸ் காவலில் தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ர­ணை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். அவர்­களில், உயிர்த்த ஞாயிறு தற்­கொலை தாக்­கு­தல்கள் தொடர்பில் சி.ஐ.டி.யால் கைது செய்­யப்­பட்ட 68 பேரும் சி.ரி.ஐ.டி.யால் கைது செய்­யப்­பட்ட 26 பேரும் உள்­ள­டங்­கு­கின்­றனர்.

இவ்­வாறு தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ரிக்­கப்­ப­டு­வோரில் 9 சிங்­க­ள­வர்­களும் ஒரு தமி­ழரும் 201 முஸ்­லிம்­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர்.

விளக்­க­ம­றி­யலில் உள்ளோர்:

இத­னி­டையே உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களின் பின்னர்  நேற்று வரை கைது செய்­யப்­பட்ட 2289 பேரில் 423 பேர் மட்­டுமே விளக்­க­ம­றி­யல்­களில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். 358 முஸ்­லிம்­களும், 13 தமி­ழர்­களும், 52 சிங்­க­ள­வர்­களும் விளக்­க­ம­றி­யலில் உள்­ளோரில் உள்­ள­டங்­கு­கின்­றனர்.

இந்­நி­லையில் ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள், அதனை தொடர்ந்து நாட­ளா­விய ரீதியில் நடாத்­தப்­பட்ட சோத­னைகள் மற்றும் அண்­மையில் வடமேல் மாகாண முஸ்லிம் கிரா­மங்­களை மையப்­ப­டுத்­தியும் அதனை ஒத்த விதத்தில் மேலும் சில இடங்­க­ளிலும் இடம்­பெற்ற வன்­மு­றைகள் தொடர்பில் 330 சிங்­க­ளவர்கள் கைது செய்­யப்­பட்ட நிலையில் அவர்­களில் 61 பேர் விளக்­க­ம­றி­யல்­க­ளிலும் பொலிஸ் தடுப்­பிலும் உள்­ளனர்.

269 பேருக்கு பிணை வழங்­கப்­பட்­டுள்­ளது

இவ்­வாறு கைது செய்­யப்­பட்ட 139 தமி­ழர்­களில் 125 பேர் பிணையில் உள்ள நிலையில் 14 பேர் விளக்­க­ம­றி­யல்­க­ளிலும் பொலிஸ் தடுப்­பிலும் உள்­ளனர். கைதான 1820 முஸ்­லிம்­களில் 1261 பேர் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் மேலும் 559 பேர் பொலிஸ் தடுப்­பிலும் விளக்­க­ம­றி­யல்­க­ளிலும் ளக்கமறியல்களிலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.