வட மேல், மினுவாங்கொடை வன்முறைகள்: தகவல் வழங்கப்பட்டும் தடுப்பதற்கு தவறியுள்ளனர்

பொலிஸார், முப்படையினரை சாடி மனித உரிமைகள் ஆணைக்குழு பதில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்

0 634

வட மேல் மாகாணத்தில் முஸ்லிம் கிராமங்களை இலக்கு வைத்தும் மினுவாங்கொடை பகுதியிலும் வன்முறையாளர்களால் நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில், அவை இடம்பெற  சில மணி நேரத்துக்கு முன்பாக பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தும் அவற்றை தடுக்க எந்த நடவடிக்கைகளும் அவர்களால் எடுக்கப்படவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.  இந்­நி­லையில் அந்த வன்­மு­றைகள் தொடர்பில் அவற்றை சீர்­செய்ய இன்­று­வரை உருப்­ப­டி­யான எந்த நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்­லை­யென மனித உரி­மைகள் ஆணைக்குழுவின் தலைவர் கலா­நிதி  தீபிகா உடு­கம பதில் பொலிஸ்மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்­ன­வுக்கு கடிதம் ஒன்­றினை அனுப்பி வைத்­துள்ளார்.

தாமும் தமது குழு­வி­னரும் வன்­மு­றைகள் நடந்த இடங்­க­ளுக்கு நேரில் சென்று தகவல் திரட்­டி­ய­தா­கவும், இதன்­போது பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு மேல­தி­க­மாக அந்தக் கிரா­மங்­களைச் சேர்ந்­த­வர்கள், கிராமத் தலை­வர்கள், பொலிஸார் மற்றும் இரா­ணுவ வீரர்கள் எனப் பல­ரிடம் தாம் கருத்து பதிவு செய்­த­தா­கவும் அதி­லி­ருந்தே இந்த விட­யங்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் கலா­நிதி தீபிகா உடு­கம தனது கடி­தத்தில் பதில் பொலிஸ்மா அதி­ப­ருக்கு சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

23.05.2019 என்ற திக­தி­யி­டப்­பட்ட குறித்த கடி­தத்தில்,  வடமேல் மாகா­ணத்தில் பதி­வான வன்­மு­றைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் வன்­மு­றை­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க  சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் 3 ஆம் அத்­தி­யா­யத்தின் கீழ் நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் கோரி­யுள்ளார்.

அதே­நேரம் தமது குழு­வினர் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில், குளி­யாப்­பிட்டி -– கரந்­தி­பொல பகு­தியில் முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் மீது தாக்­குதல் நடாத்­திய சந்­தேக நபர்கள் சிலரும், பிங்­கி­ரிய பொலி­சாரால் கைது செய்­யப்­பட்ட பிங்­கி­ரிய பொலிஸ் பிரிவின்  வன்­மு­றை­க­ளுடன் தொடர்­பு­டைய சிலரும் அவ்­வந்த பொலிஸ் நிலை­யங்­களால் பொலிஸ் பிணையில் விடு­விக்­கப்­பட்­டது எப்­ப­டி­யென மனித உரி­மைகள் ஆணைக்­குழுத் தலைவர் கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

இது தொடர்பில் தான் ஆராய்ந்து பார்த்­த­தா­கவும், அந்த விடு­விப்­புக்­களும் கடந்த 13 ஆம் திகதி இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் கொஸ்­வத்த பொலிஸ் நிலை­யத்தில் கைது செய்­யப்­பட்ட சில சந்­தேக நபர்கள் மே 15 ஆம் திகதி விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ள மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் தலைவர், கொஸ்­வத்த பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி, பதில் பொலிஸ்மா அதி­பரின் உத்­த­ர­வுக்­க­மைய விடு­வித்­த­தாக பதி­விட்­டுள்­ள­தா­கவும் குற்றம் சுமத்­தி­யுள்ளார்.

இன ரீதி­யி­லான வன்­மு­றைகள் என இதனை அடை­யா­ளப்­ப­டுத்­தி­யுள்ள மனித உரி­மைகள் ஆணைக்­குழு, அது தொடர்பில் வன்­மு­றை­யா­ளர்­களை  மேல் நீதிமன்றால் மட்டும் பிணை வழங்க முடியுமான சிவில், அரசியல் உரிமைகள் குறித்த சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்துக்கு முரணாக பொலிஸார் நடந்துகொண்டுள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.