சவூதியில் ரமழானிற்கு பின்னர் மூன்று முன்னணி மிதவாத அறிஞர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது

மனித உரிமை அமைப்புக்கள் கண்டனம்

0 631

பல்­வேறு பயங்­க­ர­வாதக் குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்ட சவூதி அரே­பி­யாவின் முன்­னணி மித­வாத சுன்னி அறி­ஞர்கள் மூவ­ருக்கு மரண தண்­டனை விதிக்­கப்­ப­ட­வுள்­ள­தோடு ரமழான் முடிந்­த­வுடன் தண்­டனை நிறை­வேற்­றப்­ப­ட­வுள்­ள­தாக இரண்டு அர­சாங்க வட்­டா­ரங்­களும் குறித்த அறி­ஞர்­களுள் ஒரு­வரின் உற­வி­னர்­களும் தெரி­வித்­துள்­ளனர்.

இந்த அறி­ஞர்­களுள் மிகவும் முன்­ன­ணியில் இருப்­பவர் ஷெய்க் சல்மான் அல்-­அவ்தாஹ் ஆவார். இவர் ஷரீஆ மற்றும் ஒரு­பா­லு­றவு தொடர்பில் இஸ்­லா­மிய உலகில் ஒப்­பீட்­டு­ரீ­தியில் முன்­னேற்­ற­க­ர­மான கருத்­துக்­களை முன்­வைத்­த­மைக்­காக சர்­வ­தே­ச­ ரீ­தி­யாக அங்­கீ­கா­ரத்தைப் பெற்ற அறி­ஞ­ராவார்.

சவூதி அரே­பி­யா­வுக்கும் அதன் வளை­கு­டாவின் அண்டை நாடான கட்­டா­ருக்கும் இடையே நல்­லி­ணக்கம் ஏற்­படப் பிரார்த்­திப்­ப­தாக டுவிட்டர் பதி­வொன்றை இட்­ட­தை­ய­டுத்து கட்டார் மீது றியாத் தடை­களை விதித்து மூன்று மாதங்­களின் பின்னர் 2017 ஆம் ஆண்டு செப்­டம்பர் மாதம் அவ்தாஹ் கைது செய்­யப்­பட்டார்.

சுன்னி பிர­சா­ர­கரும் கல்­வி­யி­ய­லா­ளரும் எழுத்­தா­ள­ரு­மான அவாட் அல்-­கர்னி மற்றும் பிர­பல ஒளி­ப­ரப்­பா­ள­ரான அலி அல்-­ஒ­மரி ஆகிய இரு­வ­ருமே மரண தண்­ட­னையை எதிர்­நோக்­கி­யுள்ள ஏனைய இரு அறி­ஞர்­க­ளு­மாவர். இவர்­களும் 2017 ஆம் ஆண்டு செப்­டம்பர் மாதத்­தி­லேயே கைது செய்­யப்­பட்­டனர்.
இம் மூவ­ரையும் இணையத் தளங்­களில் ஏரா­ள­மானோர் பின்­பற்­று­கின்­றனர். அல்அவ்­தாஹ்வின் அர­பு­மொழி டுவிட்டர் கணக்­கினைப் பின்­பற்­று­வோரின் எண்­ணிக்கை மாத்­திரம் 13.4 மில்­லி­ய­னாகும். அவ­ரது கைதின் பின்னர் ஹேஷ்டேக் உரு­வாக்­கப்­பட்­டது.

அல்-­ஒ­ம­ரியின் போ யூத் (இளை­ஞர்­க­ளுக்­கான) என்ற தொலைக்­காட்சி அலை­வ­ரிசை ஏரா­ள­மான இர­சி­கர்­களைக் கொண்­டுள்­ளது.

றியாதில் விஷேட குற்­ற­வியல் நீதி­மன்­றத்தில் தற்­போது விசா­ர­ணை­களை எதிர்­கொண்­டுள்ள இம் மூவ­ருக்கும் மரண தண்­டனை வழங்­கு­வது என்ற திட்­ட­முள்­ள­தனை இரண்டு சவூதி அரே­பிய வட்­டா­ரங்கள் சுதந்­தி­ர­மாக உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளன. மே மாதம் 1 ஆம் திகதி என நிர்­ண­யிக்­கப்­பட்­டி­ருந்த விசா­ரணை, தினம் குறிப்­பி­டப்­ப­டாது பிற­்போ­டப்­பட்­டுள்­ளது.

மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டதும், அதனை நிறை­வேற்­று­வ­தற்கு அவர்கள் தாம­திக்க மாட்­டார்கள் என வட்­டா­ர­மொன்று தெரி­வித்­தது.

கடந்த ஏப்ரல் மாதம் 37 சவூதி நாட்­ட­வர்­க­ளுக்கு பயங்­க­ர­வாதக் குற்­றச்­சாட்டின் அடிப்­ப­டையில் மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டது, இவர்­களுள் பெரும்­பா­லா­ன­வர்கள் ஷீஆ செயற்­பாட்­டா­ளர்­க­ளாவர். இதன்­போது சர்­வ­தேச கண்­டனம் எந்த அள­விற்கு உறு­தி­யாக இருக்­கி­றது என்­பதும் அள­வீடு செய்­யப்­பட்­டது.
சர்­வ­தேச ரீதி­யாக மிகச் சிறிய அள­வி­லான பிர­தி­ப­லிப்­புக்­களை அவ­தா­னித்­ததும், குறிப்­பாக அர­சாங்க மற்றும் அரச தலை­வர்கள் மட்­டத்­தி­லான பிர­தி­ப­லிப்­புக்­களை கவ­னத்­திற்­கொண்ட அவர்கள் முன்­னணி நபர்­க­ளுக்கு மரண தண்­டனை வழங்கும் தமது திட்­டத்­தினை முன்­னெ­டுக்கத் தீர்­மா­னித்­தனர் என தன்னை அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கொள்ள விரும்­பாத குறித்த வட்­டாரம் தெரி­வித்­தது.

அமெ­ரிக்­கா­வுக்கும் ஈரா­னுக்கும் இடை­யே­யான பதற்ற­நிலை தற்­போது அதி­க­ரித்­துள்ள நிலையில் மரண தண்­டனை தொடர்­பான தகவல் வெளி­யா­கி­யுள்­ளது.

விஷே­ட­மாக வளை­கு­டாவில் ஏற்­பட்­டுள்ள தற்­போ­தைய பதற்றம் இதனைச் செய்­வ­தற்கு அவர்­க­ளுக்கு உற்­சா­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. தற்­போ­தைய நிலையில் சவூதி அரே­பி­யாவை வொஷிங்டன் மகிழ்ச்­சிப்­ப­டுத்த வேண்­டிய தேவை உள்­ளது. இதனைக் கணக்­கீடு செய்த சவூதி அர­சாங்­கத்­தினால் அதி­லி­ருந்து விடு­ப­டு­வ­தற்கு முடிந்­துள்­ளது என முத­லா­வது வட்­டாரம் தெரி­வித்­தது.
அவர்கள் மரண தண்­ட­னை­யினை நிறை­வேற்­று­வார்­க­ளாயின் அது மிகவும் பார­தூ­ர­மான விட­ய­மாக இருக்கும். அது மிகவும் ஆபத்­த­தான கட்­டத்­திற்கு இட்டுச் செல்லும் என அறி­ஞர்­களின் குடும்­பங்­களின் அங்­கத்­தவர் ஒருவர் தெரி­வித்தார்.

மூன்று அறி­ஞர்­க­ளையும் தடுத்து வைத்­துள்­ள­மை­யினை ஏற்­க­னவே ஐக்­கிய நாடுகள் சபை, அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­களம் அதே­போன்று மனித உரிமைக் குழுக்­க­ளான மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம் மற்றும் சர்­வ­தேச மன்­னிப்புச் சபை என்­பன கண்­டித்­துள்­ளன.

கைது செய்­யப்­பட்டு ஒரு வரு­டத்தின் பின்னர் கடந்த செப்­டம்பர் மாதம் பயங்­க­ர­வாதம் தொடர்­பான வழக்­கு­களை விசா­ரிப்­ப­தற்­காக உள்­துறை அமைச்­சினால் உரு­வாக்­கப்­பட்ட நீதி­மன்­ற­மான விஷேட குற்­ற­வியல் நீதி­மன்­றத்தில் இர­க­சிய விசா­ர­ணை­க­ளுக்­காக அல்-­ஓதாஹ் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டார். பயங்­க­ர­வாதம் தொடர்­பான 37 குற்­றச்­சாட்­டுக்கள் விசேட சட்­ட­வா­தி­யினால் அல்-­ஓதாஹ் மீது சுமத்­தப்­பட்­டுள்­ளது.

முன்­னணி சர்­வ­தேச இஸ்­லா­மிய அமைப்­புக்­க­ளான முஸ்லிம் சகோ­த­ரத்­துவ அமைப்பு மற்றும் பத்வா மற்றும் ஆராய்ச்­சிக்­கான ஐரோப்­பிய சபை போன்ற பெயர்­க­ளி­லான பயங்­க­ர­வாத அமைப்­புக்­க­ளுடன் தொடர்­பு­களைக் கொண்­டி­ருந்­தமை உள்­ளிட்ட குற்­றச்­சாட்­டுக்கள் அவர் மீது சுமத்­தப்­பட்­டுள்­ளன.
அல்-­ஓதாஹ் மீதான இரண்­டா­வது தொகுதி குற்­றச்­சாட்­டுக்­களில் கைதி­க­ளுக்கு இழைக்­கப்­படும் அநீ­திகள் தொடர்பில் கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்­தி­யமை, அர­சாங்­கத்தின் அடை­வுகள் தொடர்பில் எதிர்­மறை மற்றும் கேலி­செய்யும் கருத்­துக்­களை வெளி­யிட்­டமை போன்ற குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டி­ருந்­தன.

அல்-­ஓதாஹ் மீதான மூன்­றா­வது தொகுதி குற்­றச்­சாட்­டுக்­களில் கட்­டாரின் அரச குடும்­பத்­துடன் தொடர்­பு­களைப் பேணி­யமை மற்றும் கட்டார் மீதான சவூதி தலை­மை­யி­லான புறக்­க­ணிப்­புக்கு ஆத­ரவு தெரி­விப்­ப­தற்கு பகி­ரங்­க­மாக மறுப்புத் தெரி­வித்­தமை போன்ற குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டி­ருந்­தன.

இவ்­வா­றான 37 குற்­றச்­சாட்­டுக்­களும் மறை­முக ஆட்­சி­யா­ள­ரான பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் பின் சல்­மானின் கீழ் சட்­டத்தின் ஆட்சி எவ்­வாறு இருக்­கி­றது என்­பதை வெளிப்­ப­டுத்­து­வ­தாக இஸ்­தான்­பூலில் சவூதி அரே­பிய துணைத்­தூ­த­ர­கத்தில் வைத்துக் கொல்­லப்­ப­டு­வ­தற்கு இரண்டு நாட்­க­ளுக்கு முன்­ன­தாக லண்­டனில் தனது நண்­பர்­க­ளிடம் ஊட­க­வி­ய­லாளர் ஜமால் கஷேக்ஜி தெரி­வித்­தி­ருந்தார்.

என்ன விலை கொடுத்­தா­வது மாற்றுக் கருத்­துக்­களைக் கொண்­ட­வர்­களை அவர் நசுக்கி விடுவார் இந்தக் குற்­றச்­சாட்­டுக்கள் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என அந்த நேரத்தில் கஷேக்ஜி தெரி­வித்­தி­ருந்தார்.

தீவி­ரப்­போக்குக் கொண்­டவர் என்­ப­தற்­காக அல்-­அவ்தாஹ்­வுக்கு மரண தண்­டனை வழங்­கப்­ப­ட­வுள்­ளது என்­ப­தல்ல, அவர் மித­வா­த­போக்குக் கொண்­டவர் என்­பதே கார­ண­மாகும். அத­னால்தான் அவரை அவர்கள் அச்­சு­றுத்­த­லாகப் பார்க்­கின்­றனர்.

அர­சியல் மாற்­றுக்­க­ருத்­துக்­கொண்­ட­வர்­க­ளுக்கு மேலும் ஏதேனும் மரண தண்­டனை வழங்­கப்­ப­டு­மானால் அதற்­கான சூழலை ஏற்­ப­டுத்­தி­ய­மைக்­காக ட்ரம்ப நிரு­வா­கத்தின் நேரடி விளை­வு­களை ஏற்­ப­டுத்தும் என மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­ப­கத்தின் மத்­திய கிழக்­கிற்­கான பணிப்­பாளர் சாரா லேஹ் விட்சன் தெரி­வித்தார்.

பர­வ­லா­னதும் திட்­ட­மிட்ட வகை­யி­லா­னதும் கவ­லை­தரும் விதத்­தி­லா­ன­து­மான சமயத் தலை­வர்கள், எழுத்­த­ளர்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள் மற்றும் செயற்­பாட்­டா­ளர்­களின் கைது­களும் தடுத்து வைப்­புக்­களும் நிறுத்­தப்­பட வேண்­டு­மென தொட­ராக விடுக்­கப்­படும் கோரிக்­கை­களை றியாத் புறந்­தள்ளி வரு­வ­தாக கடந்த வருடம் ஜன­வரி மாதம் மனித உரி­மைகள் பேர­வையின் ஒரு பகு­தி­யான ஐக்­கிய நாடுகள் நிபு­ணர்கள் குழு குற்­றம்­சாட்­டி­யி­ருந்­தது.

சர்­வ­தேச மனித உரி­மைகள் சட்­டத்தின் கீழான சவூதி அரே­பி­யாவின் கடப்­பா­டுகள் எந்த அள­விற்கு ஒத்­துப்­போ­கின்­றன என்­பது தொடர்பில் அர­சாங்­கத்தின் தெளி­வு­ப­டுத்­தலைக் கோரும் அதே­வேளை, மனித உரி­மைகள் பேர­வையில் இணைந்து கொள்­வ­தற்கு எதிர்­பார்க்கும் போது தன்­னார்­வ­ரீ­தி­யான வாக்­கு­று­திகள் மற்றும் அர்ப்­ப­ணிப்­புக்கள் தொடர்­பிலும் கவனம் செலுத்­துவோம் என ஐக்­கிய நாடுகள் நிபு­ணர்கள் குழு தெரி­வித்­துள்­ளது.

2016 ஆம் ஆண்டு முடிவில் மனித உரி­மைகள் பேர­வையில் உறுப்­பி­ன­ராக தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்­த­போ­திலும் மனித உரிமைக் காவ­லர்கள் மற்றும் விமர்­ச­கர்­களை மௌனிக்கச் செய்தல், பலவந்தமாக கைது செய்தல், தடுத்து வைத்தல் மற்றும் குற்றம் சுமத்துதல் என்பனவற்றை சவூதி அரேபியா தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.

அல்-அவ்தாஹ் மற்றும் ஏனைய இரு அறிஞர்களின் விசாரணை தொடர்பில் இவ் வருடத்தின் ஆரம்பத்தில் மனித உரிமைகள் தொடர்பான வருடாந்த அறிக்கையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாற்றுக்கருத்துடை யவர்களுக்கான அவரது வெளிப்படையான ஆதரவுக்கு மேலதிகமாக அல்-ஓதாஹ்வுக்கு எதிராக அரச சட்டவாதி 37 குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு கட்டார் அரசாங்கத்துடனான தொடர்புகளே இதில் பெரும்பான்மையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட வன்முறைச் செயற்பாடுளில் ஈடுபட்டதாகவோ அல்லது வன்முறைகளைத் தூண்டியதாகவோ எவர் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவில்லை என கடந்த செப்டம்பர் 12 ஆந் திகதிய மனித உரிமை கண்காணிப்பகம் தனது அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.