சட்ட்டத்தை மதிப்போம்

முகத்தை மூடிச் சென்றதற்காக சிறைத்தண்டனை அனுபவித்த இளம் கர்பிணிப் பெண்ணும் 3 மத குழந்தையின் தாயும்

0 1,046

வழ­மை­யாக வாடிக்­கை­யா­ளர்­க­ளினால் களை­கட்­டி­யி­ருக்கும் அபாயா விற்­பனை நிலை­யங்கள் இன்று வெறிச்­சோ­டிப்­போ­யுள்­ளன. அபாயா விற்­பனை நிலை­யங்­க­ளிலும், ஆடை­ய­கங்­க­ளிலும் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த புர்கா, நிக்­காப்கள் அகற்­றப்­பட்­டு­விட்­டன.

புர்கா மற்றும் நி­காப்­புடன் பயணம் மேற்­கொள்ளும் முஸ்லிம் பெண்­களைக் காண முடி­ய­வில்லை. கறுப்­பு­நிற அபா­யா­வு­ட­னான பெண்­க­ளையும் வெளியில் குறைந்த எண்­ணிக்­கை­யிலே காண­மு­டி­கி­றது.

நாட்டில் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்­பெற்ற தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களை மேற்­கொண்­ட­வர்கள் ஐஎஸ் அமைப்­புடன் தொடர்­பு­பட்ட முஸ்லிம் தீவி­ர­வா­திகள் என்­பது உறுதி செய்­யப்­பட்­டு­விட்­டதால் வந்­த­வினை இது. முஸ்லிம் தீவி­ர­வா­தி­களின் அடை­யாளம் முகத்தை மூடி அணியும் ஆடை என்­பது இப்­போ­தல்ல நீண்­ட­கா­ல­மா­கவே பெரும்­பான்மை இன இன­வாதக் குழுக்­களால் பிர­சாரம் செய்­யப்­பட்டு வந்­தது. தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களை அடுத்து முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் புர்கா, நி­கா­புக்கு மாத்­தி­ர­மல்ல அபாயா, ஹிஜா­புக்கும் பலத்த எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்­டு­வந்­தது.

முகத்தை மூடி அணிவதை இலங்­கையில் தடை செய்­யப்­பட வேண்டும் எனப் பல்­வேறு தரப்­புகள் ஜனா­தி­ப­திக்கு அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்­தன. தீவி­ர­வா­திகள் முகத்தை மறைத்து ஆடை­ய­ணிந்து மேலும் தாக்­கு­தல்­களை நடாத்­தலாம் என அதற்குக் காரணம் தெரி­விக்­கப்­பட்­டது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் இம்­மாத ஆரம்­பத்தில் அரச வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் முகத்­திரை அணிய தடை­வி­தித்தார். பாது­காப்புக் கார­ணங்­க­ளுக்­காக இலங்­கையில் முகத்தை மூடி ஆடை அணி­வது தொடர்பில் வெளி­யி­டப்­பட்ட அர­சாங்க வர்த்­த­மானி அறி­வித்தல் முஸ்­லிம்கள் மத்­தியில் குழப்­ப­க­ர­மான நிலை­மை­யினை உரு­வாக்­கி­யது.

‘ஒரு­வ­ரது அடை­யா­ளத்தை மறைக்கும் வகையில் முழு முகத்­தையும் மூடக்­கூ­டிய எந்­த­வொரு ஆடை­யையும் பொது இடங்­களில் அணி­ய­மு­டி­யாது. முழு­முகம் என்­பது ஒரு­வ­ரது காதுகள் உள்­ளிட்ட முழு முகத்­தையும் குறிப்­ப­தாக அமையும். பொது இடம் எனக்­கு­றிப்­பி­டு­வது பொது­வீ­திகள், கட்­ட­டங்கள், அடைக்­கப்­பட்ட அல்­லது திறந்த வெளிகள், வாக­னங்கள் அல்­லது ஏனைய போக்­கு­வ­ரத்துச் சாத­னங்­களைக் குறிப்­ப­தாக அமையும். பொது­வீ­திகள் என்­பது வீதி­க­ளுடன் தொடர்­பு­படும் பொதுப்­பா­லத்தின் மேலான ஏதேனும் வீதிகள், நடை­பா­தைகள், வாய்க்கால், ஏரிக்­கரை, சாக்­கடை என்­ப­வற்­றையும் உள்­ள­டக்கும்’ என்று ஜனா­தி­ப­தியின் வர்த்­த­மானி அறி­வித்தல் தெரி­வித்­தது.

‘காதுகள் வெளித்­தெ­ரிய வேண்டும்’ என்ற வர்த்­த­மானி அறி­வித்தல் பெண்­களின் ஹிஜா­புக்கும் தடை­யாக அமைந்­தது. இத­னை­ய­டுத்து அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை மற்றும் முஸ்லிம் அமைச்­சர்கள் ஜனா­தி­ப­தியைச் சந்­தித்து அர­சாங்க வர்த்­த­மா­னியில் திருத்­தங்­களைச் செய்­யு­மாறு கோரிக்கை விடுத்­தனர். முகத்தை மூடி ஆடை அணி­வ­தற்­கான தடை­யினை வர­வேற்ற முஸ்லிம் சிவில் சமூக பிர­தி­நி­தி­களும் அர­சியல் தலை­மை­களும் காது­களை மூடி ஹிஜாப் அணியும் வகையில் வர்த்­த­மா­னியில் திருத்­தங்­களைச் செய்­யு­மாறு வேண்­டிக்­கொண்­டனர்.

இதே­வேளை நாட்டில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய தடை விதிக்­கப்­பட வில்லை. நிகாப் மற்றும் புர்கா அணி­வ­தற்கே தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது என அமைச்சர் கலா­நிதி ஹர்ஷ டி சில்வா தெரி­வித்தார். ‘முகத்தை மறைக்கும் ஆடைகள் அணிய தடை­வி­திக்­கப்­பட்­டுள்ள நிலையில் தற்­போது சந்­தே­கங்கள் எழுந்­துள்­ளன. முழு­மை­யாக முகத்தை மறைத்தல் என்­பது காது­க­ளையும் சேர்த்து மறைப்­ப­தையே குறிப்­பி­டு­கி­றது. எனினும் இது ஹிஜாப் தடை செய்­யப்­பட்­டுள்­ள­தாக அர்த்­தப்­ப­டாது. பெண்கள் ஹிஜாப் அணி­ய­மு­டியும். புர்கா மற்றும் நிகாப் என்­ப­னவே அணிய தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது எனத் தெரி­வித்தார்.

என்­றாலும் முஸ்லிம் சமூகம் வர்த்­த­மானி அறி­வித்­தலில் திருத்­தத்­தையே வேண்டி நின்­றது. இத­னை­ய­டுத்து ஜனா­தி­ப­தி­யினால் கடந்த ஏப்ரல் மாதம் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் ஆடைக்கு தடை­வி­தித்து வெளி­யி­டப்­பட்ட வர்த்­த­மானி அறி­வித்­தலில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

கடந்த 13 ஆம் திகதி ஜனா­தி­ப­தியின் கையொப்­பத்­துடன் மீண்­டு­மொரு வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்­டது. அந்த வர்த்­த­மானி அறி­வித்தல் இவ்­வாறு தெரி­விக்­கி­றது.

‘ஏதா­வது ஆடை, உடுப்பு அல்­லது துணி­ம­ணிகள் ஒரு­வரை அடை­யாளம் காண ஏதேனும் வகையில், சிர­ம­மாக்கும் வகையில் முழு முகத்­தையும் மறைக்கும் வண்ணம் பொது இடத்தில் இலங்கைப் பிர­ஜையால் அணி­யப்­ப­ட­லா­காது. இவ்­வாறு அணி­ப­வர்கள் இலங்கை இரா­ணுவம், இலங்கை கடற்­படை, இலங்கை விமா­னப்­படை, பொலிஸ் அதி­கா­ரிகள் அல்­லது சிவில் பாது­காப்­புப்­படை உறுப்­பி­னர்கள் கேட்­டுக்­கொள்ளும் பட்­சத்தில் ஒரு­வரை அடை­யாளம் காண காதுகள் உட்­பட முழு­மு­கத்­தையும் மறைக்கும் எந்த ஒன்­றி­னையும் அகற்­ற­வேண்டி நேரிடும். இங்கு முழு­முகம் எனக் குறிப்­பி­டப்­ப­டு­வது நெற்­றியில் இருந்து வாய்க்குக் கீழுள்ள நாடி வரை என்­ப­தாகும். இங்கு காதுகள் உள்­ள­டங்­காது என வர்த்­த­மா­னியில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சட்­டத்­துக்குக் கட்­டுப்­பட வேண்டும். 

முகத்தை மூடி ஆடை­ய­ணியக் கூடாது என நாட்டில் சட்­ட­மொன்று அமுல்­ப­டுத்­தப்­பட்டு வரும் நிலையில் எமது பெண்கள் அதற்கு கட்­டுப்­பட வேண்டும். நீண்ட கால­மாக முகத்­திரை அதா­வது புர்கா, நிகாப் அணிந்து பழக்­கப்­பட்டு விட்ட எமது பெண்­க­ளுக்கு அதனைக் களை­வதில் அசௌ­க­ரி­யங்கள் ஏற்­ப­டலாம். எம்மால் அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு உள்­ளாக முடி­யாது என்று ஆடை தொடர்பில் வழங்­கப்­பட்­டுள்ள சட்ட வரை­ய­றை­களை நாம் பின்­பற்ற வேண்டும்.

தொடர்ந்தும் நாட்டின் பல்­வேறு பகு­தி­களில் முஸ்லிம் பெண்­களின் ஆடை தொடர்பில் விதிக்­கப்­பட்­டுள்ள வரை­ய­றை­களை மீறி எமது பெண்கள் ஆடை அணி­வதால் புர்கா மற்றும் நிகாப் அணிந்து பொது இடங்­க­ளுக்குச் செல்­வதால் சட்­டத்தின் பிடியில் சிக்­குண்டு வரு­கி­றார்கள். இவ்­வா­றா­ன­வர்­களில் ஓரி­ருவர் விளக்­க­ம­றி­ய­லிலும் வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

சிலா­பத்தில் கைது – விளக்­க­ம­றியல்

சிலா­பத்தில் முகத்தை மறைத்து ஆடை­ய­ணிந்து கொண்டு சென்­ற­தாக புகார் செய்­யப்­பட்ட பெண் ஒருவர் அவ­ரது வீட்டில் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்டார்.

சிலாபம் – ஜய­பிம என்ற கிரா­மத்தைச் சேர்ந்த பாத்­திமா சில்­மியா (25) என்­ப­வரே அவர். அவர் தனக்கு நேர்ந்த சம்­ப­வத்தை கவ­லை­யுடன் எம்­மிடம் தெரி­வித்தார்.

கடந்த 10 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை ஊரில் எனது நண்­பி­யொ­ரு­வரின் வாப்­பாவின் ஜனா­ஸா­வுக்கு அவ­ரது வீட்­டுக்கு காலை 7.30 மணிக்கு எனது கணவர் மொஹமட் சாதீக் (24) உடன் சென்றேன். எங்­க­ளுக்கு மூன்று மாத குழந்­தை­யொன்றும் இருக்­கி­றது. குழந்­தை­யையும் என்­னுடன் கொண்டு சென்றேன். காலை 7.30 மணிக்கு ஜனாஸா வீட்­டுக்குச் சென்று 8.00 மணிக்கு வீட்­டுக்கு திரும்பி வந்து விட்டேன். நான் முகத்தை மூடி ஆடை அணிந்தே சென்றேன்.

8.30 மணி­ய­ளவில் ஊர் பள்­ளி­வாசல் என்று கூறிக்­கொண்டு சுமார் ஐந்து, ஆறுபேர் வீட்­டுக்கு வந்­தார்கள். வீட்டில் எனது கண­வரும் இருந்தார். வந்­த­வர்கள் எனது கண­வ­ருடன் வாக்­கு­வா­தத்தில் ஈடு­பட்­டார்கள். ஏன் முகத்தை மூடி அழைத்துச் சென்­றீர்கள். உங்கள் மீது முறைப்­பாடு இருக்­கி­றது. ஏன் பிரச்­சி­னைக்கு ஆளா­கி­றீர்கள். உங்­களால் எங்­க­ளுக்குப் பிரச்­சினை என்­றார்கள். வாக்­கு­வா­தப்­பட்டு எனது கண­வரை தாக்­கு­வ­தற்கும் முயற்­சித்­தார்கள். அவர்கள் நாட்டு நடப்பு தெரி­யாத எங்­க­ளுக்கு விளக்­கி­யி­ருக்க வேண்டும். நல்­ல­படி பேசி­யி­ருக்க வேண்டும். பின்பு அவர்கள் போய்­விட்­டார்கள்.

9 மணி­ய­ளவில் பொலிஸார் எங்கள் வீட்­டுக்கு வந்­தார்கள். அப்­போது வீட்டில் நான் முகத்தை மூடி ஆடை அணிந்­தி­ருக்­க­வில்லை. சாதா­ரண உடையில் குழந்­தைக்குப் பால் கொடுத்­துக்­கொண்­டி­ருந்தேன். பொலிஸார் நான் முகத்தை மூடி ஆடை அணி­வ­தா­கவும் என்­னிடம் வாக்­கு­மூலம் பெற்­றுக்­கொள்­ள­வேண்­டு­மெ­னவும் கூறி என்­னையும் கண­வ­ரையும் அழைத்­துச்­சென்­றார்கள். நான் மூன்று மாத குழந்­தை­யையும் எடுத்­துக்­கொண்டு சென்றேன்.

எங்கள் மீது யாரோ புகார் செய்தே பொலிஸார் எங்­களைக் கைது செய்­தார்கள். வீட்­டி­லி­ருந்த கறை­ப­டிந்த கத்­தி­யொன்­றையும் எடுத்­துக்­கொண்­டார்கள். எங்­க­ளிடம் வாக்­கு­மூலம் பெற்­றுக்­கொண்டு நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­தார்கள். நீதிவான் எங்­களை ஒரு கிழமை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்டார். நான் எனது மூன்று மாத குழந்­தை­யு­ட­னேயே விளக்­க­ம­றி­யலில் இருந்தேன். விளக்­க­ம­றி­யலில் என்னை ஏசி­னார்கள்.

கறை­ப­டிந்த கத்­தி­யொன்று வீட்டில் இருந்­த­தற்­காக எனது கண­வரும் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்டார். நீர்­கொ­ழும்பு சிறை­யிலே வைக்­கப்­பட்டேன். ஒரு வாரத்தில் நான் பிணையில் விடு­தலை செய்­யப்­பட்டேன். ஆனால் எனது கணவர் விடு­தலை செய்­யப்­ப­ட­வில்லை. அவர் எதிர்­வரும் 31 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

மொஹமட் ருனைஸ்

விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள மொஹமட் சாதீக்கின் மைத்­துனர் மொஹமட் ருனைஸ் சம்­பவம் தொடர்பில் விடி­வெள்­ளிக்கு விளக்­க­ம­ளித்தார். நான் புத்­த­ளத்தைச் சேர்ந்­தவன். மொஹமட் சாதீக் எனது மனை­வியின் சகோ­தரர். எனது மைத்­து­னரும் அவ­ரது மனை­வியும் கைது செய்­யப்­பட்­டமை எனது மனை­வியின் தங்­கை­யி­னது கணவர் மூலமே அறிந்து கொண்டோம். அவர் கட்­டா­ரி­லி­ருந்து பேஸ்­புக்கில் விபரம் அறிந்­த­தாக எங்­க­ளுக்கு அறி­வித்தார். அவர் கட்­டா­ரிலே வேலை செய்­கிறார். அவர் அறி­வித்­ததன் பின்பே நாங்கள் சிலா­பத்­துக்குச் சென்றோம். அவர்கள் ஒன்றும் அறியாதவர்கள் முகத்தை மூடி ஆடை அணிந்ததற்காகவும், வீட்டில் கறைபடிந்த கத்தியொன்று இருந்ததற்காகவும் கைதுசெய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டார்கள் என்றார்.

மொஹமட் சாதீக்கின் சகோதரி யமீனா

விளக்கமறியலில் வைக்கப்பட்டி ருக்கும் மொஹமட் சாதீக்கின் சகோதரி யமீனா விடிவெள்ளிக்கு கருத்து வழங்குகையில்,

‘மொஹமட் சாதீக் எனது சகோதரர். நாங்கள் புத்தளத்தைச் சேர்ந்தவர்கள். எனது சகோதரர் 2 வருடங்கள் கட்டாரில் வேலை செய்து நாடு திரும்பியதன் பின்பே திருமணம் செய்தார். இப்போது கடல் தொழில் மற்றும் கூலிவேலை செய்து வருகிறார். எனது சகோதரரும் அவரது மனைவியும் அப்பாவிகள். முகத்தை மூடி ஆடை அணிவதன் பாரதூரத்தை அவள் அறியாதவள். அத்தோடு கறைபடிந்த கத்தியொன்றுக்காகவும் அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். எனது சகோதரர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்’ என்றார்.

கற்­பிட்­டியில் கைது – விளக்­க­ம­றியல்

முகத்தை மூடி ஆடை­ய­ணி­வது சட்­ட­ரீ­தி­யாகத் தடை செய்­யப்­பட்­டி­ருக்கும் நிலையில் கற்­பிட்­டியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் முகத்தை மறைத்து ஆடை­ய­ணிந்து சென்­ற­போது அவர் கற்­பிட்டி பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டார். 17 வயது நிரம்­பிய அந்தப் பெண் கர்ப்­பி­ணி­யாவார்.

தேசிய அடை­யாள அட்டை பெற்றுக் கொள்­வ­தற்கு விண்­ணப்பம் அனுப்­பு­வ­தற்­காக அவர் புகைப்­பட நிலை­யத்­துக்கு புகைப்­படம் எடுத்­துக்­கொள்ள சென்­ற­போது வீதியில் கட­மை­யி­லி­ருந்த பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். கடந்த வெள்­ளிக்­கி­ழமை கைது செய்­யப்­பட்ட குறிப்­பிட்ட பெண் கற்­பிட்டி பொலி­ஸா­ரினால் புத்­தளம் நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட போது புத்­தளம் மேல­திக நீதிவான் அவரை எதிர்­வரும் வெள்­ளிக்­கி­ழமை (இன்று) வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்டார்.

சந்­தேக நபர் தொடர்பில் விசா­ரணை நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் அவ­சர கால சட்­டத்தின் கீழ் அடிப்­ப­டை­வாத அமைப்­புடன் தொடர்­புள்­ள­வரா என்­பது தொடர்பில் விசா­ரணை நடை­பெ­று­வ­தா­கவும், முன்னாள் குற்றச் செயல்கள் ஏதும் இவ­ருக்­கெ­தி­ராக இருப்­பதா என்­பது தொடர்பில் அறிக்கை பெற்­றுக்­கொள்­ள­வி­ருப்­ப­தா­கவும் பொலிஸார் நீதி­மன்றில் தெரி­வித்­தனர்.

அர­சாங்­கத்­தினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள அதி­வி­சேட வர்த்­த­மானி அறி­வித்­தல்கள் 2120/5, 2121/1 மற்றும் 2123/4 என்­ப­வற்றின் பிர­காரம் இது தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் எனவும் பொலிஸார் சம்­பந்­தப்­பட்ட பெண்ணை நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­திய போது தெரி­வித்­தனர்.

இச்­சம்­பவம் தொடர்பில் முஸ்லிம் பெண்கள் விவ­கா­ரங்­களில் சட்ட ஆலோ­ச­னை­களை வழங்­கி­வரும் சட்­டத்­த­ரணி நதீஹா அப்பாஸ் கருத்து தெரி­விக்­கையில்,

முகத்தை மறைத்து ஆடை அணி­வது எமது நாட்டில் தடை செய்­யப்­பட்­டுள்­ளது. தடையை மீறிச்­செ­யற்­ப­டு­வது தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மாகும். முஸ்­லிம்­க­ளுக்கு சவால்கள் நிறைந்த இக்­கால கட்­டத்தில் முஸ்லிம் பெண்கள் தேவை­யற்ற சிர­மங்­க­ளுக்குத் தம்மை ஆளாக்கிக் கொள்­ளக்­கூ­டாது.

முகத்தை மூடு­வ­தாயின் முஸ்லிம் பெண்­க­ளா­கிய நீங்கள் நிச்­சயம் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­ப­டு­வீர்கள். இதனால் பல அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு உள்­ளா­கு­வீர்கள். முகத்­திரை சட்ட ரீதி­யாக தடை செய்­யப்­பட்­டி­ருக்கும் இந்தச் சந்­தர்ப்­பத்தில் முகத்தை மூடி ஆடை அணிந்தால் நீங்கள் மஹ்ரம் இல்­லாது சிறைச்­சா­லைக்கு செல்ல வேண்­டிய நிலை ஏற்­ப­டலாம்.

பெண் என்ற வகையில் முஸ்லிம் பெண்­களின் சிர­மங்­களை நான் அறி­கிறேன். 10–15 வரு­டங்­க­ளாக முகத்தை மூடி ஆடை அணிந்து விட்டு திடீரென அமுலுக்கு வந்த வர்த்தமானி அறிவித்தலையடுத்து எப்படி முகத்தை திறந்து கொண்டு செல்வது. இது மிகவும் சிரமமான விடயம் தான். என்றாலும் முகத்திரை அணிந்து கைது செய்யப்பட்டால் கண்ணீருடனே சிறையில் இருக்க வேண்டும்’ என்றார்.

அவ­தானம் தேவை

முஸ்லிம் சமூகம் அவ­தானம் மிக்க ஒரு கால­கட்­டத்தை அடைந்­தி­ருக்­கி­றது. எமக்­கெ­தி­ராக அடுக்­க­டுக்­காக குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. முஸ்லிம் என்­றாலே ஏனைய இனத்­தினர் சந்­தே­கக்கண் கொண்டு பார்க்­கு­ம­ள­வுக்கு நாம் தள்­ளப்­பட்­டுள்ளோம். ஏப்ரல் 21 ஆம் திகதி முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தி­களால் நடாத்­தப்­பட்ட தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்கள் எமக்கு விட்டுச் சென்­றுள்ள எச்­சங்கள் இவை.

அரபுக் கல்­லூ­ரிகள், அரபு மத்­ர­ஸாக்கள் கல்­வி­ய­மைச்சின் கட்­டுப்­பாட்­டுக்குள் அடங்­கி­விடப் போகின்­றன. வர­லாற்றில் என்­று­மில்­லாத அள­வுக்கு பெரும் எண்­ணிக்­கை­யி­லான பள்­ளி­வா­சல்கள் தாக்கி சிதைக்­கப்­பட்­டுள்­ளன.

குறிப்­பாக எமது ஆடை­க­ளுக்கும் ஆப்பு வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இது­வரை காலம் முஸ்லிம் பெண்கள் தாம் நினைத்­த­வா­றெல்லாம் ஆடை அணிந்­தார்கள். ஹிஜாப், நிகாப், புர்கா என்று பல வடி­வி­லான ஆடைகள் அவை. அவற்­றுக்கு எந்தத் தடை­களும் இருக்­க­வில்லை.

புர்கா ஆடை அணிந்து சென்ற எமது பெண்­களை பெரும்­பான்­மை­யி­னரில் சிலர் ‘கோனி பில்­லாக்கள்’ என்று அழைத்­தார்கள். அன்று எந்த எதிர்ப்­புகள் எழுந்­தாலும் எமது பெண்கள் அச்சம் கொள்­ள­வில்லை. இன்று நிலைமை தலை­கீ­ழாக மாற்றம் பெற்­று­விட்­டது.

இன்று புர்கா, நிகாப் அணி­வ­தற்கே சட்­ட­ரீ­தி­யாக தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. காது­களை மூடி அணியும் ஹிஜா­புக்கும், அபா­யா­வுக்கும் எந்தத் தடையும் இல்லை. ஆனால் ஹிஜாப் மாத்­தி­ர­மல்ல அபா­யா­வுக்கும் கூட பாட­சா­லை­க­ளிலும் வைத்­தி­ய­சா­லை­க­ளிலும், அரச நிறு­வ­னங்­க­ளிலும் தடைகள் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வதை நாம் காண்­கிறோம். எனவே அரசு முஸ்­லிம்­களின் ஆடை விவ­கா­ரத்தில் நாட்டு மக்­க­ளுக்கும், பாட­சா­லை­க­ளுக்கும், அரச நிறு­வ­னங்­க­ளுக்கும் வரை­ப­டங்­க­ளுடன் தெளி­வு­களை வழங்க வேண்டும். விஷேட சுற்று நிரு­பங்­களை அனுப்பி வைக்க வேண்டும்.

இதே­வேளை முஸ்லிம் பெண்கள் புர்கா, நிகாப் அணி­வதை கண்­டிப்­பாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இவைகள் நாட்டில் சட்­ட

­ரீ­தி­யாக தடை செய்­யப்­பட்­டுள்­ளன. சட்­டத்தை மீறினால் நாம் நிச்­சயம் தண்­டிக்­கப்­ப­டுவோம்.

சிலா­பத்­திலும், கற்­பிட்­டி­யிலும் நாட்டின் வேறு சில பகு­தி­க­ளிலும் இடம்­பெற்­றுள்ள சம்­ப­வங்கள் எமக்குப் பாட­மாக அமைய வேண்டும். சிலா­பத்தில் 25 வய­தான இளம்பெண் ஒருவர் முகத்தை மூடி ஆடை அணிந்த குற்­றச்­சாட்டின் கீழ் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்டு ஒரு­வார காலத்தின் பின்பு வெளியில் வந்­துள்ளார். தனது 3 மாத கால­மே­யான குழந்­தை­யு­டனே அவர் சிறையில் இருக்க வேண்­டி­யேற்­பட்­டது. சிறைச்­சாலை அதி­கா­ரிகள் அவர்­மீது கடு­மை­யான வார்த்தை பிர­யோ­கங்­களை மேற்­கொண்­டுள்­ளார்கள்.

இதே­போன்று கற்­பிட்­டியில் நடந்­துள்ள சம்­ப­வமும் எமக்குப் பாட­மாக அமைய வேண்டும். முகத்தை மூடி ஆடை­ய­ணிந்து சென்ற குற்­றத்­துக்­காக ஒரு பெண் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார். அவ­ருக்கு 17 வய­துதான் ஆகி­றது. அத்­தோடு அவர் கர்ப்­பி­ணிப்பெண். இளம் பெண்கள் சட்­டத்தை மீறும் வகையில் செயற்­ப­டு­வது தவிர்க்­கப்­பட வேண்டும்.

இவ்­வா­றான இளம் பெண்­க­ளுக்கு உற­வி­னர்­களும், அவர்­க­ளது கண­வர்­களும் தெளி­வு­களை வழங்க வேண்டும். முகத்தை மூடி வெளியில் செல்வதைத் தடுக்க வேண்டும்.

மிகவும் பின்தங்கிய கிராமப்புறங் களைச் சேர்ந்த முஸ்லிம் பெண்கள் நாட்டின் நிலைமைகளை அறிந்து கொள்ளாதவர்களாக இருக்கலாம். அவர்களை  உடன் தண்டிக்காது வழிகாட்ட வேண்டியது அந்தந்தப் பிரதேச பள்ளிவாசல்கள் மற்றும் உலமாக்களின் கடமையாகும்.

 

vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.