சேதமடைந்த பள்ளிகள் புனரமைத்து தரப்படும்

முஸ்லிம் சமய விவகார அமைச்சிடம் விபரங்களை திரட்டி தருமாறும் அமைச்சர் சஜித் பணிப்பு

0 779

குரு­நாகல், புத்­தளம் மற்றும் கம்­பஹா ஆகிய மாவட்­டங்­களில் கடந்த வாரம் இன­வா­தி­களால் தாக்­கப்­பட்டு பகு­தி­ய­ளவில் அல்­லது முழு­மை­யாக சேத­ம­டைந்த அனைத்து பள்­ளி­வா­சல்­களும் புன­ர­மைத்து தரப்­ப­டு­மென வீட­மைப்பு, நிர்­மா­ணத்­துறை மற்றும் கலா­சார விவ­கார அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ தெரி­வித்­துள்ளார். 

அத்­துடன் சேத­ம­டைந்த பள்­ளி­வா­சல்­களின் விப­ரங்­களை தரு­மாறு முஸ்லிம் சமய விவ­கார அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் என்­ப­வற்­றிடம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ மற்றும் வீட­மைப்பு, நிர்­மா­ணத்­துறை மற்றும் கலா­சார விவ­கார அமைச்சின் அதி­கா­ரி­க­ளுக்­கி­டையே நேற்­றைய தினம் அமைச்சில் கலந்­து­ரை­யா­ட­லொன்று இடம்­பெற்­றது.

இதன்­போது, மத்­திய கலா­சார நிதி­யத்தின் ஒதுக்­கீட்டில் வடமேல் மாகாணம் மற்றும் கம்­பஹா மாவட்­டத்தில் தாக்­கு­த­லுக்­குள்­ளான பள்­ளி­வா­சல்­களை நிர்­மா­ணித்துக் கொடுப்­ப­தற்­கான யோச­னையை அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ முன்­வைத்­துள்ளார். அத்­துடன், பாதிக்­கப்­பட்ட பள்­ளி­வா­சல்கள் தொடர்­பி­லான விப­ரங்­களை திரட்­டு­மாறும் அதி­கா­ரி­க­ளுக்கு பணித்­துள்ளார்.

இத­னி­டையே, முஸ்லிம் சமய விவ­கார அமைச்சுடன் தொடர்புகொண்டு பாதிப்புக்குள்ளான பள்ளிவாசல்கள் தொடர்பிலான முழு அறிக்கையும் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.