வன்முறையினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடுகள்

பள்ளிகளை மறுசீரமைக்கவும் நிதி பிரதமரின் யோசனைக்கு அங்கீகாரம்

0 709

நாட்டில் சில பிர­தே­சங்­களில் அன்­மையில் கடும்­போக்கு குழு­வி­னர்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட இன­வாதத் தாக்­குதல் நிலை­மையின் கார­ண­மாக இடம்­பெற்ற சேதத்­திற்­கான இழப்­பீ­டடு தொகையை வழங்க அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.

இது தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க முன்­வைத்த அமைச்­ச­ரவை பத்­தி­ரத்­திற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

சமீ­பத்தில் சில பிர­தே­சங்­களில் ஏற்­பட்ட மோதல் நிலை­மையின் கார­ண­மாக சேத­மாக்­கப்­பட்ட முஸ்லிம் பள்­ளி­வா­சல்­களை மறு­சீ­ர­மைத்தல் மற்றும் இந்த மோத­லினால் ஏற்­பட்ட பாதிப்­புக்­கா­கவும் இதற்கு முன்னர் உயிர்த்­தெ­ழுந்த ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­த­லினால் ஏற்­பட்ட பாதிப்­புக்­க­ளுக்­காக செலுத்­து­வ­தற்­காக தீர்­மா­னிக்­கப்­பட்ட நடை­மு­றையின் கீழான இழப்­பீட்டுத் தொகையை செலுத்­த­வ­தற்­காக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சமர்ப்­பித்த ஆவ­ணத்­திற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது.

அத்­துடன், பயங்­க­ர­வாத தாக்­கு­த­லினால் பாதிக்­கப்­பட்­டுள்ள மொத்த குடும்­பங்­களின் எண்­ணிக்கை 344 என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதில் ஒரு­வ­ரேனும் மரணம் அல்­லது ஏதோ ஒரு பாதிப்பை கொண்ட குடும்­பங்­களின் எண்­ணிக்கை 188 ஆகும். இதில் ஆகக் குறைந்த வகையில் குடும்பத்தில் ஒருவர் காய­ம­டைந்­தி­ருப்­ப­தாக எனவும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. இந்த குடும்­பங்­களின் அங்­கத்­த­வர்­களின் சமூக பொரு­ளா­தார கலா­சார கல்வி ஆகிய ரீதியில் மறு­சீ­ர­மைப்பு மற்றும் மீண்டும் மேம்­பாட்­டுக்­காக திட்­ட­மிட்ட வேலைத்­திட்டம் கல்வி அமைச்­சினால் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளது.

இதற்­க­மை­வாக இந்த தாக்­கு­தலின் கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டுள்ள குடும்­பங்­களை ஊக்­கு­விப்­ப­தற்­காக கத்­தோ­லிக்க சபையின் சமூக சேவை நிறு­வ­னங்­க­ளான செத்­ச­ரண நிறு­வ­னத்தின் இணைப்­புடன் நகர குடி­யி­ருப்பு அதி­கார சபையின் மூலம் ஸ்வசக்தி அபி­வி­ருத்தி விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.