இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதம் எங்கே செல்லும் இந்த பாதை?

0 941
  • பேராசிரியர் எஸ்.ஐ. கீதபொன்கலன்,

பாதுகாப்பு பகுப்பாய்வாளர்,
சாலிஸ்பரி பல்கலைக்கழகம்,
மேரிலாந்து, அமெரிக்கா

இலங்­கையில், உயிர்ப்பு ஞாயிறு தாக்­கு­தலில் 250க்கும் மேற்­பட்ட பொது­மக்கள் கொல்­லப்­பட்­டமை உள்ளூர் ரீதி­யா­கவும், சர்­வ­தேச ரீதி­யா­கவும் பாரிய எதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்தி இருந்­தன. இத்­தாக்­கு­தலில் பேர­திர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது தாக்­கு­தலின் பிர­மாண்­டமும், கொல்­லப்­பட்­ட­வர்­களின் எண்­ணிக்­கை­யுமே அன்றி தாக்­கு­தல்கள் அல்ல.

இது­வரை வந்­துள்ள தக­வல்­களின் அடிப்­ப­டையில், தாக்­கு­த­லா­ளிகள் அனை­வரும் இலங்­கையின் இரண்­டா­வது சிறு­பான்மைக் குழு­வா­கிய முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்கள் என்­பது உறு­தி­யாகி உள்­ளது.

கடந்த சில காலங்­களில் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கும் பெரும்­பான்மை சிங்­க­ள­வர்­க­ளுக்கும் இடையில் பிளவும் பதற்­றமும் அதி­க­ரித்து வந்­துள்­ளன.

குறிப்­பாக இன யுத்தம் 2009-ஆம் ஆண்டு முடி­வ­டைந்­ததிலிருந்து அவர்கள் மீதான தாக்­கு­தல்கள் அதி­க­ரித்து வந்­துள்­ளன. இது இலங்கை முஸ்­லிம்­களில் ஒரு சாரா­ரி­டையே தீவி­ர­வா­தத்தை உந்­தி­யி­ருந்­தது.

இருப்­பினும் உள்­ளூரில் செயற்­படும் ஒரு சிறிய குழு­வினால் இத்­த­கைய பிர­மாண்­ட­மான ஒரு தாக்­கு­தலை தனியே முன்­னெ­டுத்­தி­ருக்க முடி­யுமா என்ற கேள்வி தாக்­கு­தலின் பின் மிக விரை­வா­கவே கேட்­கப்­பட்­டது.

இத்­த­கைய ஒரு பின்­ன­ணி­யி­லேயே இத்­தாக்­கு­த­லுக்கும் சர்­வ­தேச சக்­தி­க­ளுக்கும் ஒரு தொடர்பு இருக்­கக்­கூடும் என்று யூகிக்­கப்­பட்­டது. குறிப்­பாக இஸ்­லா­மிய அரசு சந்­தே­கிக்­கப்­பட்­டது. இச்­சந்­தேகம் விரை­வா­கவே தீர்க்­கப்­பட்­டது.

தாக்­கு­தலின் சில தினங்­க­ளுக்குள் இஸ்­லா­மிய அரசு தாக்­கு­த­லுக்கு உரிமை கோரி­ய­துடன் அதன் வெற்­றியை கொண்­டாடத் தொடங்­கி­யி­ருப்­ப­தாக உள­வுத்­துறை தக­வல்கள் சுட்­டிக்­காட்­டின.

கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள சம்மாந்துறை நகரில் இஸ்­லா­மிய அரசின் கொடியும் வேறு இலச்­சி­னை­களும் மீட்­கப்­பட்­ட­தாக கூறப்­பட்­டது.

ஏப்ரல் 29ஆம் தேதி வெளி­யி­டப்­பட்ட காணொ­லி­யூ­டாக இஸ்­லா­மிய அரசு என்று தங்­களை அழைத்­துக்­கொள்ளும் அமைப்பின் தலைவர் அபூ­பக்கர் அல்­பக்­தாதி, இலங்கை தாக்­கு­தலை உரிமை கோரி­ய­துடன் இத்­தாக்­கு­தலின் இஸ்­லா­மிய அரசின் தொடர்பு ஊர்­ஜிதம் செய்­யப்­பட்­டது.

எனவே, உயிர்ப்பு ஞாயிறு தாக்­கு­தல்கள் இஸ்­லா­மிய அரசு சார்­பாக இலங்கை இஸ்­லா­மி­ய­வாத தீவி­ர­வா­தி­களால் முன்­னெ­டுக்­கப்­பட்­டது என்று கூறு­வதில் தவ­றி­ருக்க முடி­யாது.

சவால்கள் என்ன?

இத்­தாக்­கு­தலில் இஸ்­லா­மிய அரசின் தொடர்பு, இலங்கை அர­சாங்­கத்­தையும் பாது­காப்புத் தரப்­பி­ன­ரையும் பொறுத்­த­வரை மிக முக்­கி­ய­மான சவால் ஒன்றை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அது `அறி­யப்­ப­டாமை` ஆகும்.

இஸ்­லா­மிய அரசின் தாக்­குதல் தந்­தி­ரோ­பா­யங்கள், வழி­மு­றைகள், செயற்­பாட்டு பாணி ஆகி­யவை தொடர்பில் போதி­ய­ளவில் உள்ளூர் நிபு­ணத்­துவம் காணப்­ப­டு­கின்­றது என்று கூற முடி­யாது.

இதுவே உள்ளூர் தீவி­ர­வா­தி­களின் தாக்­கு­த­லாக இருந்­தி­ருக்­கு­மாயின் அதை இல­கு­வாக கையா­ளக்­கூ­டிய வல்­லமை இருந்­தி­ருக்கும்.

இலங்கை பாது­காப்பு படை, தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­க­ளுடன் யுத்தம் செய்­ததன் மூல­மா­கவும், இறு­தியில் அதனை கட்­டுப்­பாட்­டினுள் கொண்­டு­வந்­ததன் மூல­மா­கவும், பாரிய அனு­ப­வத்­தையும், அறி­வையும் பெற்­றுள்­ளது. இவை உள்ளூர் தீவி­ர­வா­தத்தை கட்­டுப்­பாட்டில் கொண்­டு­வரப் போது­மா­ன­வை­யாக இருந்­தி­ருக்கும்.

இருப்­பினும், இஸ்­லா­மிய அரசின் வழி­மு­றைகள் பற்­றிய அறி­யாமை சவால் ஒன்று உள்­ள­மை­யினால் இரண்டு சிக்­கல்கள் தோன்­றலாம்.

ஒன்று, இப்­பு­திய தீவி­ர­வா­தத்தை முழு­மை­யாக கட்­டுப்­பாட்­டினுள் கொண்­டு­வர மேல­திக நேரம் தேவைப்­ப­டலாம், அல்­லது பயங்­க­ர­வாத எதிர்ப்பு செயற்­பாடு பல­வீ­ன­மா­ன­தாக இருக்­கலாம்.

இதன் கருத்து என்­ன­வெனில், மேல­திக தாக்­கு­தல்கள் முழு­மை­யாக தடுக்­கப்­பட முடி­யா­தி­ருக்­கலாம்.

அர­சு­க­ளுக்­கி­டை­யி­லான ஒத்­து­ழைப்பு

இஸ்­லா­மிய அரசின் தொடர்­பினால் ஏற்­பட்ட ஒரு பலன் என்­ன­வெனில் அது இலங்கை அரசு வெளி­நா­டு­க­ளி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய ஒத்­து­ழைப்பை அதி­க­ரித்­துள்­ளது.

தெற்­கா­சி­யாவின் பல நாடு­களும் இப்­பி­ராந்­தி­யத்தில் இஸ்­லா­மிய அரசின் விஸ்­த­ரிப்பின் கார­ண­மாக கவ­லை­ய­டைத்­துள்­ளன. அண்­மைய கடந்த காலத்தில் இஸ்­லா­மிய அரசு பங்­கா­ளதேஷ், ஆப்­கா­னிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடு­களில் தனது செயற்­பா­டு­களை துரி­தப்­ப­டுத்தி வந்­துள்­ளது.

இந்­தி­யா­வுக்கு எதி­ராக இஸ்­லா­மிய அரசின் பாரிய சவால் ஒன்று காணப்­ப­டு­கி­றது. இஸ்­லா­மிய அரசு இந்­தி­யாவை தனது கலி­பாவின் ஒரு பகு­தி­யாக அறி­வித்­துள்­ள­துடன், அங்கு தனது ஆட்­சேர்ப்­பையும், செயற்­பா­டு­க­ளையும் முடுக்கி விட்­டுள்­ளன.

இப்­போது இஸ்­லா­மிய அரசு இலங்­கையில் நுழைந்­துள்­ளமை இந்­திய அர­சுக்கு பாரிய அச்­சு­றுத்­த­லாக அமை­யலாம். இலங்கை, இந்­தி­யா­வுக்கும் தெற்­கா­சி­யாவின் ஏனைய நாடு­க­ளுக்­கு­மான `வாயி­லாக` பயன்­ப­டுத்­தப்­ப­டலாம்.

இதற்குப் புறம்­பாக அமெ­ரிக்­காவும், ஏனைய மேற்­கு­லக நாடு­களும் இஸ்­லா­மிய அர­சுக்கு எதி­ரான சர்­வ­தேச யுத்தம் ஒன்றில் ஈடு­பட்­டுள்­ளன. இவையும் இலங்கை தாக்­குதல் தொடர்பில் கரி­ச­னை­யு­டை­ய­வை­யா­கவே உள்­ளன.

எனவே, இந்­நா­டுகள் அனைத்தும் ஏற்­க­னவே இப்­பி­ரச்­சினை தொடர்பில் இலங்கை அர­சுக்கு உதவத் தொடங்­கி­யி­ருக்கும் என்று எதிர்­பார்க்­கலாம்.

எனவே, இலங்­கையில் இஸ்­லா­மிய அரசு தொடர்­பு­டைய தீவி­ர­வா­தத்தை கட்­டுப்­பாட்டில் கொண்டு வரு­வதில் சர்­வ­தேச மட்­டத்­தி­லான அர­சு­க­ளுக்­கி­டை­யி­லான ஒத்­து­ழைப்பு செயற்­றிட்­ட­மொன்று ஏற்­க­னவே முடுக்கி விடப்­பட்­டி­ருக்கும் என்­பது தெளி­வா­னது.

தீவி­ர­வா­தி­களை அடை­யாளம் காண்­ப­திலும் அவர்­களைக் கைது செய்­வ­திலும் இலங்கை பாது­காப்பு படை வெளிப்­ப­டுத்­திய செயற்­றி­றனின் பின்­ன­ணியில் இவ்­வ­ரசின் ஒத்­து­ழைப்பு இருந்­தி­ருக்­கு­மாயின், குறிப்­பாக இந்­தி­யாவின் உதவி இருந்­தி­ருக்­கு­மாயின் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்­கில்லை.

இத்­த­கைய பரந்த சர்­வ­தேச ஒத்­து­ழைப்பு செயற்­றிட்­ட­மொன்றை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது அவ்­வ­ளவு கடி­ன­மா­ன­தாக இருக்கும் என்று கூற முடி­யாது.

ஏனெனில், 2009ஆம் ஆண்டு, விடு­தலைப் புலி­களை இரா­ணுவ ரீதி­யாக நிர்­மூ­ல­மாக்­கு­வதில் இத்­த­கைய சர்­வ­தேச ஒத்­து­ழைப்பு பாரிய பங்கு வகித்­தி­ருந்­தது.

இறுதி யுத்­தத்தின் போது இந்­தியா, பாகிஸ்தான், சீனா, ஐக்­கிய அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா போன்ற பல நாடு­களும் இலங்கை அர­சுக்கு சாத­க­மாகத் தமது பங்­க­ளிப்பை செயற்­ப­டுத்தி இருந்­தன. எனவே, அப்­போது நடப்­பி­லி­ருந்த செயற்றிட்­டத்தை புதுப்­பிப்­பதே இப்­போ­தைய தேவை­யாக இருந்­தி­ருக்கும்.

இன வன்­முறை

உயிர்ப்பு ஞாயிறு படு­கொ­லைகள் அர­சியல், இராணுவ விளை­வுக்கு புறம்­பாக சமூக மட்­டத்­தி­லான பாரிய பதற்­ற­நிலை ஒன்றைத் தோற்­று­வித்­துள்­ளமை முக்­கி­ய­மாக சுட்­டிக்­காட்­டப்­பட வேண்டும்.

இது பெரும்­பான்மை இன மக்­க­ளி­டையே இலங்கை முஸ்­லிம்கள் தொடர்பில் ஏற்­க­னவே காணப்­பட்ட அதி­ருப்­தியை தூண்­டி­விட்­டுள்­ளது. இதன் கார­ண­மாக உள்ளூர் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இனக்­க­ல­வரம் ஒன்று ஏற்­ப­டலாம் என்று எதிர்­பாக்­கப்­பட்­டது.

உட­னடி நிலையில் சிறு மட்ட பதற்­ற­நிலை சில பிர­தே­சங்­களில் ஏற்­பட்­டி­ருந்த போதும், பாரிய தாக்­கு­தல்கள் எதுவும் இடம் பெற்­றி­ருக்­க­வில்லை. இருப்­பினும் இக்­கட்­டுப்­பாடு நீண்­ட­காலம் நீடிக்­க­வில்லை.

மே மாதம் 13ஆம் தேதி நாட்டின் பல பகு­தி­க­ளிலும் முஸ்லிம் மக்­களின் உட­மை­க­ளுக்கு எதி­ரான பர­வ­லான தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டி­ருந்­தன.

முஸ்லிம்களுக்கு எதிரான இவ்வின வன்முறையில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.

இவ்வின வன்முறையும் தொடரும் பதற்றமும் இஸ்லாமிய குழுக்களிடையேயான தீவிரவாதம் தொடர்பில் இரண்டு விதமான தாக்கத்தை கொண்டிருக்கலாம். இவ்விரு தாக்கங்களும் சமாந்திரமாக செயற்படலாம்.

ஒன்று, எதிர்தாக்குதல் அச்சம் காரணமாக இஸ்லாமிய குழுக்களுக்கிடையே காணப்படு கின்ற தீவிரவாதம், தீவிரவாத ஆதரவு என்பவை மந்தப்படுத்தப்படலாம்.

இதன் விளைவாக சில குழுக்கள் அரசு மீதான விசுவாசத்தையும் அதை வெளிப்படுத்துவதையும் கூர்மைப்படுத்தலாம்.

இரண்டு, இத்தாக்குதல் காரணமாக அதிருப்தியும் விரக்தியும் அடையும் சிலர் தமது தீவிரவாதத்தை அதிகரித்துக்கொள்வதுடன் இஸ்லாமிய அரசு உற்பட ஏனைய தீவிரவாத குழுக்களுடன் இணையலாம்.

இவை இரண்டு செயற்பாடு களும் சமாந்திரமாக இடம்பெறக் கூடுமாயினும் இக்குழு பெரும் பான்மையாக இருக்கப் போகின்றது என்ற கேள்விக்கு காலம் பதில் கூறும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.