அர­சாங்­கத்­திற்கு எதி­ரான அவ­நம்­பிக்கை பிரே­ரணை சபா­நா­ய­க­ரிடம் சமர்ப்­பிப்பு

மஹிந்த, சம்பந்தனின் ஆதரவையும் பெறுவோம் என்கிறது ம.வி.மு.

0 466

அர­சாங்­கத்­திற்கு எதி­ராக மக்கள் விடு­தலை முன்­னணியின் நம்பிக்கை­யில்லா பிரே­ர­ணை நேற்றுக் காலை சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­விடம் ஒப்­ப­ டைக்கப்பட்டது. அடுத்த பாரா­ளு­மன்ற வாரத்தில்  சபையில் இதனை எடுத்­துக்­கொள்­ள­மு­டியும் என நம்­பு­வ­தா­கவும் அதற்கு முன்னர்  எதிர்க்­கட்சித் தலைவர் மற்றும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­புடன் பேச்­சு­வார்த்தை நடத்தி ஆத­ரவை பெற்­றுக்­கொள்­வ­தாக ஜே.வி.பி. குறிப்­பி­டு­கின்­றது.

கடந்த ஈஸ்டர் தினத்­தன்று நடத்­தப்­பட்ட பயங்­க­ர­வாத தாக்­கு­தலை அடுத்து அர­சாங்­கத்தின் பாது­காப்பு பல­வீ­னங்கள் மற்றும் பொறுப்­பற்ற தன்­மைகள் கார­ண­மென குற்றம் சுமத்தி மக்கள் விடு­தலை முன்­னணி அர­சாங்­கத்­திற்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை ஒன்­றினை கொண்­டு­வ­ரு­வ­தாக கூறிய நிலையில் நேற்றுக் காலை நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை ஜே.வி.பியினர் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­விடம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்­தனர். அந்தப் பிரே­ர­ணையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள விட­யங்­க­ளா­னது,

  1. 2019 ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் கொழும்பு, நீர்­கொ­ழும்பு, மட்­டக்­க­ளப்பு ஆகிய பிர­தே­சங்­களில் இடம்­பெற்ற பயங்­க­ர­வா­தி­களின் தற்­கொலை குண்­டுத்­தாக்­குதல் சம்­ப­வங்­களில் இலங்­கை­யர்கள் உள்­ளிட்ட 250ற்கும் மேற்­பட்­ட­வர்கள் கொல்­லப்­பட்­ட­துடன் மேலும் 500 பேர் வரை­யி­லானோர் காய­ம­டைந்­தி­ருந்­தனர். இது தொடர்­பாக பிர­தமர், அமைச்­ச­ரவை மற்றும் அர­சாங்­கத்­திற்கு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக தக­வல்கள் கிடைத்­தி­ருந்­த­போதும் அது தொடர்­பான அக்­க­றை­யின்றி கீழ்­வரும் செயற்­பா­டு­களை மேற்­கொண்டும், மேற்­கொள்­ளா­மலும் இருந்­துள்­ளனர். அதில்,

அ) 2019.05.08 அன்று பிர­தமர் பாரா­ளு­மன்­றத்தில் கூறி­ய­தன்­படி 2014ஆம் ஆண்டு முதல் ஐ.எஸ். சர்­வ­தேச பயங்­க­ர­வாத இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத அமைப்­புடன்  இலங்­கை­யி­லுள்ள சிலர் தொடர்­பு­களை பேணி­ய­தா­கவும், பல்­வேறு செயற்­பா­டு­களில் ஈடு­பட்­ட­தா­கவும் அறிந்­தி­ருந்­தி­ருந்­துள்­ளனர். எனினும் அது தொடர்­பாக சரி­யான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை,

ஆ) பல்­வேறு இஸ்­லா­மிய மத அடிப்­ப­டை­வாத அமைப்­புகள் முஸ்லிம் சமூ­கத்­தி­ன­ரி­டையே செயற்­ப­டு­வ­தாக முஸ்லிம் சமூ­கத்­தி­ன­ரா­லேயே அர­சாங்கம் மற்றும் பொறுப்பு வாய்ந்த நிறு­வ­னங்­க­ளுக்கு அறி­வித்­தி­ருந்த போதும் அது தொடர்­பாக செயற்­ப­டாமை,

இ) காத்­தான்­குடி பிர­தே­சத்தில் வாழும் மக்­க­ளுக்கு பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட அச்­சு­றுத்தல் மற்றும் தாக்­கு­தல்கள் தொ­டர்­பாக 2019 ஏப்ரல் 21ஆம் திகதி குண்டை வெடிக்க வைத்து உயி­ரி­ழந்த சஹ்ரான் ஹாசிம் மற்றும் 2019 ஏப்ரல் 26ஆம் திகதி சாய்ந்­த­ம­ருதில் குண்டை வெடிக்க வைத்து உயி­ரி­ழந்த ஏ.எல்.எம்.நியாஸ் உள்­ளிட்­டோ­ருக்கு எதி­ராக நீதி­மன்­றத்­தினால் பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்த போதும் அவர்­களை கைது செய்­வ­தற்கு முறை­யாக சட்­டத்தை செயற்­ப­டுத்­தாமை

ஈ) 2018ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் திகதி மாவ­னெல்­லையில் புத்தர் சிலைக்கு சேதம் விளை­வித்­த­மை­யுடன் சஹ்ரான் ஹாசிம் உள்­ளிட்ட குழு­வினர் தொடர்­பு­பட்­டி­ருப்­ப­தாக இலங்கை முஸ்லிம் சபை­யினால் தேசிய புல­னாய்வு பிரி­வுக்கு 2018 டிசம்பர் 28ஆம் திகதி அறி­விக்­கப்­பட்­டி­ருந்த போதும் மற்றும் இந்த தாக்­குதல் சம்­பவம் தொடர்­பாக சந்­தே­கத்தில் சிலர் கைது செய்­யப்­பட்­டி­ருந்த போதும் அது தொடர்­பான விசா­ர­ண­களை முன்­னெ­டுத்து செல்­வது தடுக்­கப்­பட்டு அதில் தலை­யீ­டுகள் காணப்­பட்­ட­தாக அர­சாங்­கத்தின் அமைச்சர் ஒருவர் கருத்து தெரி­வித்­துள்­ளமை

உ) இந்த தாக்­குதல் இடம்­பெ­று­வ­தற்கு முன்­பி­ருந்து குறிப்­பி­டத்­தக்­க­ளவு இலங்­கை­யர்கள் ஐ.எஸ். இஸ்­லா­மிய பயங்­க­ர­வாத அமைப்­புடன் இணைந்து செயற்­ப­டு­வது தொடர்­பான தக­வல்கள் தொடர்­பாக சட்ட நட­வ­டிக்­கைகள் மற்றும் பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­காமை

ஊ) பாது­காப்பு சபையின் உறுப்­பி­ன­ரான பிர­தமர் பாது­காப்பு சபை அமர்­வு­களில் கலந்­து­கொள்­ளாது நாட்டு மக்­க­ளுக்­காக அவர் செய்ய வேண்­டிய அடிப்­படை பொறுப்பை செய்ய தவ­றி­யமை,

எ) வெளி­நாட்டு உளவு பிரி­வினால் இலங்­கைக்குள் கத்­தோ­லிக்க தேவா­ல­யங்கள் மற்றும் ஹோட்­டல்­களை இலக்கு வைத்து தற்­கொலை தாக்­கு­தல்­களை நடத்­த­வுள்­ள­தா­கவும் அத­னுடன் தொடர்­பு­டைய நபர்கள் மற்றும் அவர்­களின் தொலை­பேசி இலக்­கங்கள், தேசிய அடை­யாள அட்டை இலக்கம் உள்­ளிட்ட சரி­யான தக­வல்­களை வழங்­கி­யி­ருந்த போதும் அந்த தக­வல்­க­ளின்­படி நட­வ­டிக்­கை­யெ­டுக்க தவ­றி­யமை மற்றும் 2019.4.21 ஆம் திகதி அந்த தாக்­கு­த­லுக்கு முன்­னரும் உள­வுப்­பி­ரி­வினால் மீண்டும் எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்த போதும் அது தொடர்­பான நட­வ­டிக்­கை­யெ­டுக்­காமை

ஏ) 2019.04.11 அன்று பிரதி பொலிஸ்மா அதிபர் விசேட பாது­காப்­புக்கு பொறுப்­பான பிரி­யலால் தச­நா­யக்­க­வினால் ஏப்ரல் 21 தாக்­குதல் தொடர்­பாக அனுப்­பி­யி­ருந்த கடி­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள விட­யங்கள் தொடர்­பாக நட­வ­டிக்­கை­யெ­டுக்­காமை உள்­ளிட்ட விட­யங்­க­ளுக்­க­மைய 2019.4.21ஆம் திகதி சிவில் மக்­களை இலக்கு வைத்து மேற்­கொள்­ளப்­பட்ட பயங்­க­ர­வாத தாக்­கு­தலை தடுப்­ப­தற்கும் மற்றும் சேதங்­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கும் முடி­யு­மாக இருந்­த­போ­திலும்

  1. 2019.04.21ஆம் திகதி இடம்­பெற்ற தாக்­கு­தல்­களின் பின்னர் பிர­தமர் மற்றும் அமைச்­சர்­க­ளினால் அந்த தாக்­கு­தல்கள் தொடர்­பாக பொறுப்புக் கூறாது அந்தப் பொறுப்­பு­களை வேறு தரப்­பினர் மீது சுமத்­து­வ­தற்கு முயற்­சித்­துள்­ள­துடன் அமைச்­சர்கள் பொறுப்­பற்ற வகையில் பொய்­யான கருத்­துக்­களை வெளி­யிட்டு நாட்டை பாது­காப்­பற்ற நிலை­மைக்கு கொண்டு செல்லும் வகையில் நடந்­து­கொண்­டுள்­ளனர்.
  2. 2019.04.21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பாக கைது செய்­யப்­பட்­டுள்ள சந்­தேக நபர்கள் தொடர்­பான விசா­ரணை செயற்­பா­டு­க­ளுக்கு இடை­யூ­று­களை ஏற்­ப­டுத்தி அந்தக் குற்றச் செயல்கள் தொடர்­பாக சட்­டத்தை செயற்­ப­டுத்­து­வ­தற்கு இடை­யூ­று­களை மேற்­கொண்டோ அல்­லது தடுத்து நிறுத்­தியோ அர­சாங்­கத்தின் சில அமைச்­சர்கள் செயற்­பட்­டுள்­ளனர்.
  3. 2019.04.21ஆம் திகதி பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­களின் பின்னர் மேலும் அவ்­வா­றான தாக்­கு­தல்கள் மற்றும் வன்­முறை செயற்­பா­டு­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான சட்ட திட்­டங்கள் அர­சாங்­கத்­திடம் இருக்­கின்ற போதும் 2019.05.13ஆம் திகதி கம்­பஹா பிர­தே­சத்­திலும் வடமேல் மாகா­ணத்­திலும் இடம்­பெற்ற அடிப்­ப­டை­யா­வத வன்­முறை செயற்­பா­டு­களால் கொலை, சொத்து சேதங்கள் ஏற்­பட்­டுள்­ளன. இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெ­று­வதை தடுக்க தவ­றி­யமை,
  4. உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் இடம்­பெற்று ஒரு மாத­மா­கி­யுள்ள போதும் நாட்டில் பொரு­ளா­தா­ரத்தை மீள கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது போயுள்­ள­தா­கவும் நாட்டில் பாட­சா­லைகள் மற்றும் பல்­க­லைக்­க­ழக கல்வி செயற்­பா­டு­களை மீளக் கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது போயுள்­ள­தா­கவும் அரச மற்றும் தனியார் துறை­களை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்­டு­வரத் தவ­றி­யுள்­ள­தா­கவும் அர­சாங்கம் என்ற வகையில் நாட்டு மக்­க­ளுக்கு நிறை­வேற்ற வேண்­டிய பொறுப்­பு­க­ளி­லி­ருந்து விலகி செயற்­பட்­டுள்­ள­தா­கவும்,
  5. 2019.04.21ஆம் திகதி தாக்­கு­தல்­களை தடுக்க முடி­யா­மை­யி­னாலும் அதன் பின்னர் நாட்டில் பாது­காப்பு நிலைமை மற்றும் சிவில் வாழ்க்­கையை இயல்பு நிலைக்கு கொண்டு வரா­மை­யி­னாலும் ஏற்­பட்­டுள்ள பாது­காப்­பற்ற தன்­மையால் நாட்டின் உள்­ளக நட­வ­டிக்­கை­களில் தலை­யி­டு­வ­தற்கு வெளி­நா­டு­க­ளுக்கு இட­ம­ளித்து செயற்­ப­டு­வ­தா­கவும் இலங்கை ஜன­நா­யக சோஷ­லிச அர­சாங்கம் தொடர்­பாக மேலும் நம்­பிக்கை கொள்ள முடி­யாது போயுள்­ள­தாக பாரா­ளு­மன்­றத்தில் யோச­னையை முன்­வைக்­கின்றோம் என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் நேற்­றைய தினம் இது குறித்து ஜே.வி.பியினர் பாரா­ளு­மன்­றத்தில் செய்­தி­யாளர் சந்­திப்­பொன்­றையும் நடத்­தினர். இதில் கலந்­து­கொண்ட கட்­சியின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக,

நாம் கொண்­டு­வரும் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையின் கார­ணி­களை முழு­மை­யாக படித்­துப்­பார்த்தால் நாம் ஏன் இந்தப் பிரே­ர­ணையை கொண்­டு­வ­ரு­கின்றோம் என்­பது தெரி­ய­வரும். ஏற்­க­னவே பொது எதி­ரணி அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை ஒன்­றினை கொண்­டு­வ­ரு­கின்­றது. அதன் பின்­னரே நாம் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை முன்­வைத்­துள்ளோம். ஆகவே முதலில் அவர்­களின் பிரே­ர­ணையை எடுத்­து­கொண்டு அதன் பின்­னரே எமது பிரே­ர­ணை முன்­னெ­டுக்­கப்­படும். எனினும் இந்த நம்­பி­கை­யில்லா பிரே­ர­ணைக்கும் நாம் கொண்­டு­வரும் பிரே­ர­ணைக்கும் இடையில் வேறு­பா­டுகள் உள்­ளன. இன்று சபா­நாகர் கரு ஜய­சூ­ரி­ய­விடம் எமது பிரே­ர­ணையை கைய­ளித்­துள்ளோம். இதில் பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் ஜே.வி.பியின் ஆறு உறுப்­பி­னர்­களும் கைச்­சாத்­திட்­டுள்ளோம். அடுத்த பாரா­ளு­மன்ற வாரத்தில் இதனை சபைக்கு எடுக்­கப்­ப­டு­மென நாம் நம்­பு­கின்றோம். நாம் அர­சாங்­கத்தை காப்­பாற்ற இவற்றை செய்­வ­தாக ராஜபக் ஷ அணியில் ஒரு­சிலர் குற்றம் சுமத்தி வரு­கின்­றனர். ஆனால் இந்த அர­சாங்­கத்தில் நாம் எந்த சலு­கையும் பெற்­றுக்­கொண்டு அவர்­களை காப்­பாற்ற ஒரு­போதும் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. ஆனால் எம்மை விமர்­சிக்கும் சிலர் பிர­தமர், ஜனா­தி­ப­தி­யிடம் சலு­கை­களை பெற்­றுக்­கொண்டு தம்மை பாது­காத்­துக்­கொண்­டதை நாம் அறிவோம். இவர்கள் என்ன நோக்­கத்­துக்­காக நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கும் எமது பிரே­ர­னைக்கும் இடையில் உள்ள வித்­தி­யா­சத்தை அவ­தா­னிக்கும் போதே அதனை அறிந்­து­கொள்ள முடியும். எமக்­குள்ள ஒரே நோக்கம் இந்த அர­சாங்­கத்தை வீழ்த்­து­வது மட்­டு­மே­யாகும்.

அதேபோல் இதற்கு முன்னர் இவர்கள் பல நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்ட போதும் அதற்கு நாம் ஆதரவு தெரிவித்தோம். ஆகவே அவர்களின் பிரேரணையில் இதில் என்ன செய்வது என்பது குறித்து நாம் தீர்மானம் எடுக்கவில்லை.

ஆனால் ஒருபோதும் நாம் கள்வர்களை, குற்றவாளிகளை காப்பாற்ற செயற்­பட மாட்டோம், ஆனால் இவர்­களில் பலர் அர­சாங்­கத்தை காப்பாற்றவே நடவடிக்கை எடுத்தனர். குறிப்பாக கடந்த ஆண்டு கள்ளத்தனமாக ஒரு அரசாங்கத்தை அமைக்க ராஜபக் ஷ கூட்­டணி முயற்­சித்த போது ரிஷாத் பதியுதீனுடன் பேச்சுவர்த்தை நடத்தினர். ஒருவேளை அப்போது ரிஷாத் மஹிந்த தரப்புடன் இணைந்திருந்தால் இன்று அவரை தலையில் வைத்து போற்றியிருப்பார்கள். ஆகவே இவர்களின் செயற்பாடுகள் என்ன என்பது எமக்கு நன்றாகவே தெரியும். எவ்வாறு இருப்பினும் அடுத்த அமர்வுகளுக்கு இதற்கான ஆதரவை பெற்றுக்கொள்ள பிரதான எதிர்க்கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஏனைய தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி எமக்கான ஆதரவை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். உண்மையாக குற்றவாளிகளை தண்டிக்க நினைக்கும் அனைவரின் ஆதரவையும் நாம் இதில் எதிர்பார்க்கின்றோம் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.