ஜேர்மனியில் இஸ்லாம் தொடர்பான பீதியான கடிதங்கள் கைப்பற்றப்பட்டன

0 520

ஐரோப்­பியப் பாரா­ளு­மன்றத் தேர்தல் எதிர்­வரும் மே மாதம் 26 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள நிலையில் கடந்த சில வாரங்­க­ளாக இஸ்­லா­மிய பீதி தொடர்­பாக பல கடி­தங்கள் கிடைக்­கப்­பெற்­றுள்­ள­தோடு கொலை அச்­சு­றுத்­தலும் விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக முன்­னணி ஜேர்மன் -– துருக்கி அர­சி­யல்­வா­தி­யொ­ருவர் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை தெரி­வித்தார்.

கடி­தங்கள் அடை­யாளம் தெரி­யாத நபர்­க­ளினால் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அதில் அவ­ம­திக்கும் விதத்­தி­லா­னதும் அச்­சு­றுத்தும் விதத்­தி­லா­ன­து­மான குறி­யீ­டு­களும் காணப்­பட்­ட­தாக  குடி­யேற்­றத்­திற்கு ஆத­ர­வான புத்­தாக்கம் மற்றும் நீதிக்­கான கூட்­ட­மைப்பின் தலை­வ­ரான ஹாலுக் இத்ரீஸ் தெரி­வித்தார்.

அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ள கடி­தங்­களுள் ஒன்றில் நாம் எமது எல்­லை­களைக் கடந்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்த நாடு ஜேர்­ம­னி­யர்­க­ளுக்கு மட்­டு­மா­னது எனவும் அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. எனத் தெரி­வித்த அவர் புதிய நாஸி வன்­மு­றைகள் அண்­மைய ஆண்­டு­களில் அதி­க­ரித்­துள்­ள­மை­யினால் இந்த அச்­சு­றுத்­தலை நாம் மிகப் பார­தூ­ர­மான விட­ய­மாகப் பார்க்­கின்றோம் எனவும் தெரி­வித்தார்.

எனினும் இவ்­வா­றான அச்­சு­றுத்­தல்கள் எம்மை உற்­சா­க­மி­ழக்கச் செய்ய மாட்­டாது. எமது அர­சியல் போராட்டம் தொடர்ந்து இடம்­பெறும் எனவும் அவர் தெரி­வித்தார்.

ஜேர்­ம­னிக்கு புலம்­பெ­யர்ந்த குழு­வி­னரால் 2010 ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்ட சிறிய கட்­சியே புத்­தாக்கம் மற்றும் நீதிக்­கான கூட்­ட­மைப்­பாகும். அதன் முன்­னணி வேட்­பா­ள­ராக இத்ரிஸ் காணப்படுகின்றார்.

ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் முதன் முறையாக ஆசனமொன்றைக் கைப்பற்றும் எதிர்பார்ப்புடன் இக் கட்சி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.