மலேசியப் படகுப் பயணம் தடுத்து நிறுத்தப்பட்டது

தப்பிச்செல்ல முயன்ற ரோஹிங்ய முஸ்லிம்கள் தடுத்து வைப்பு

0 522

பங்­க­ளாதேஷ் அக­தி­க­ளாக முகாம்­களில் தஞ்­ச­ம­டைந்­துள்ள மியன்மரைச் சேர்ந்த ரோஹிங்ய முஸ்­லிம்கள் 84 பேரின் ஆபத்­தான மலே­சியப் படகுப் பயணம் வழி­யி­லேயே தடுத்து நிறுத்­தப்­பட்­டுள்­ளது.

இது­கு­றித்து பெகு­வாவைச் சேர்ந்த பொலிஸ் அதி­கா­ரிகள் கருத்து தெரி­வித்­துள்னர்.

பங்­க­ளா­தேஷின் உல­கி­லேயே மிகப்­பெ­ரிய அகதி குடி­யேற்றம் அமைந்­துள்ள இடம் குட்­டு­பலாங். இங்­குள்ள அக­திகள் முகா­மி­லி­ருந்து 31 பெண்கள் மற்றும் 15 குழந்­தைகள் உள்­ளிட்ட 67 ரோஹிங்ய முஸ்­லிம்கள் ஒரு மீன்­பிடி படகில் ஏறி புறப்­பட காத்­தி­ருந்­த­போது தடுத்து நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இதற்­கி­டையில், வங்­கா­ள­வி­ரி­கு­டாவில் உள்ள பங்­க­ளா­தேஷின் ஒரு சிறிய தீவான செயின்ட் மார்ட்டின்ஸ் வழியே தப்­பிச்­செல்ல இருந்த 17 ரோஹிங்ய முஸ்­லிம்­களும் அவர்­க­ளுக்கு உடந்­தை­யாக இருந்த 5 பங்­க­ளாதேஷ் கடத்­தல்­கா­ரர்­களும் தடுத்து நிறுத்­தப்­பட்­ட­துடன் இவர்­களும் ஆபத்­தான மீன்­ப­டகுப் பய­ணத்­தின்­மூலம் மலே­சியா செல்­ல­வி­ருந்­தமை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

தங்­க­ளுக்கு கிடைத்த ஒரு இரக­சிய தகவல் அடிப்­ப­டையில் இவ்­விரு ஆபத்­தான படகுப் பய­ணங்­களும் தடுத்து நிறுத்­தப்­பட்­ட­தாக பிராந்­திய கட­லோர பாது­காப்பு தள­ப­தி­யான பாயேசூல் இஸ்லாம் மண்டோல், தெரி­வித்தார்.

2017 ஆகஸ்ட் மாதம் பல­வந்­த­மான இரா­ணுவ நட­வ­டிக்கை கார­ண­மாக சுமார் 740,000 முஸ்லிம் சிறு­பான்­மை­யினர் ரோஹிங்­யாக்கள் மியான்மார் நாட்டை விட்டு வெளி­யேற்­றப்­பட்­டனர்.

பங்­க­ளா­தேஷின் காக்ஸின் பஜார் பகு­தி­களில் உள்ள மிகப்­பெ­ரிய முகாம்­களில் வன்­மு­றைகள் பெரு­கி­யதைத் தொடர்ந்து ஏற்­கெ­னவே 3 லட்சம் பேர் வேறு முகாம்­க­ளுக்கு அனுப்­பப்­பட்­டனர்.

ஒவ்­வொரு ஆண்டும் முகாம்­களில் இருந்து அக­தி­க­ளாக ஆயி­ரக்­க­ணக்­கான அக­திகள் மலே­சியா மற்றும் தாய்­லாந்து போன்ற நாடு­களில் வாய்ப்­பு­களை பெறு­வ­தற்­காக அங்­கி­ருந்து வெளி­யேற முயற்­சிகள் செய்­து­வ­ரு­கி­றார்கள்.

இது­கு­றித்து மனிதக் கடத்­தல்­களில் மீட்புப் பணி­களில் ஈடு­பட்டு வரும் சிறப்பு நிபுணர் ஜிஷ்ஷூ பருவா ஏ.எப்.பி.யிடம் தெரி­விக்­கையில்,

ஆபத்­தான படகுப் பய­ணங்­களில் உயிரை பணயம் வைத்­தா­வது தங்கள் வாழ்­வா­தா­ரத்தை உயர்த்திக் கொள்­வதில் அவர்கள் தொடர்ந்து ஈடு­பட்டு வரு­கி­றார்கள்.

ஆனால் அவர்­களின் இத்­த­கைய வாழ்க்கை பல சர்­வ­தேச மனித கடத்தல் கும்­பல்­க­ளுக்கு இரை­யாகி விடு­கி­றது.

அதே­நேரம் பரு­வ­ம­ழைக்கு முன் அதா­வது மார்ச் மாதத்­திற்கு முன்பு கடல் அமை­தி­யாக இருக்கும் போதுதான் பயண முயற்சிகள் செய்வது வழக்கம். ஆனால் கடத்தல்காரர்கள் அகதிகளுக்கு ஆசைகாட்டி கடலில் அலைப்பெருக்கங்கள் மிகவும் மோசமாக இருக்கும் போதுகூட அழைத்துச் செல்கிறார்கள். இது மிகவும் ஆபத்தான சூழ்நிலையாகும்” என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.