முஸ்லிம்கள் சட்டத்தை மதித்து நிதானமாக செயற்பட வேண்டும்

வழிகாட்டல் அறிக்கையில் உலமா சபை சுட்டிக்காட்டு

0 526

இந்த நாட்டின் பிர­ஜைகள் என்ற வகையில் முஸ்­லிம்­க­ளது உயிர் மற்றும் உடை­மை­களை பாது­காக்கும் கடப்­பாடு அர­சாங்­கத்­திற்கு இருக்­கின்­றது. இது விட­ய­மாக நாம் அனை­வரும் அர­சாங்­கத்தை வலி­யு­றுத்த வேண்டும். மேலும், முஸ்­லிம்கள் அனை­வரும் சட்­டத்தை மதித்து மிகுந்த அவ­தா­னத்­து­டனும் நிதா­னத்­து­டனும் நடந்து கொள்ள வேண்­டு­மென அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா முஸ்லிம் சமூ­கத்­திற்கு விடுத்­துள்ள வழி­காட்டல் அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக இன­வா­திகள் வன்­மு­றை­களை கட்­ட­விழ்த்­து­விட்­டுள்ள நிலையில் அ.இ.ஜ.உ.வின் பிரதித் தலைவர் அஷ்ஷைக் ஏ.சி. அகார் முஹம்மத் ஒப்­ப­மிட்டு வெளி­யிட்­டுள்ள ‘முஸ்­லிம்­க­ளுக்­கான சில முக்­கிய வழி­காட்­டல்கள்’ எனும் தலைப்­பி­லான அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

நாட்டில் கடந்த சில தினங்­க­ளாக உரு­வா­கி­யுள்ள நெருக்­கடி நிலை­மையைக் கையா­ளு­வது குறித்து அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவும் ஏனைய முஸ்லிம் சிவில் அமைப்­பு­களும் தொடர்ந்து கலந்­தா­லோ­ச­னை­களை நடத்தி உரிய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றன. அதன் தொடரில் அனைத்து இஸ்­லா­மிய அமைப்­புக்கள், முஸ்லிம் சிவில் அமைப்­புக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் இணைப்புக் குழு ஒன்றும் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

இந்தக் கூட்டு இணைப்புக் குழுவின் நெறிப்­ப­டுத்­தலில் நாட்டின் உயர்­மட்ட தலை­மை­க­ளான ஜனா­தி­பதி, பிர­தமர், பாது­காப்பு அதி­கா­ரிகள் முத­லா­னோ­ருடன் உட­ன­டி­யாக தொடர்­புகள் ஏற்­ப­டுத்­தப்­பட்டு உரிய நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

கடந்த 21.04.2019ஆம் திகதி பயங்­க­ர­வா­தி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட மனி­தா­பி­மா­ன­மற்ற மிலேச்­சத்­த­ன­மான தாக்­கு­தலை ஒட்­டு­மொத்த இலங்கை முஸ்­லிம்­களும் ஒரு­மித்த குரலில் வன்­மை­யாக கண்­டித்து நிரா­க­ரித்­த­தையும் பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கு முஸ்லிம் சமூகம் பூரண ஒத்­து­ழைப்பு நல்கி வரு­வ­தையும் நாம் அனை­வரும் அறிவோம். இஸ்லாம் இவ்­வா­றான மனி­தா­பி­மா­ன­மற்ற தீவி­ர­வாத செயற்­பா­டு­களை வன்­மை­யாக கண்­டிக்கும் நிலையில், வழி­த­வ­றிய சிலரின் இந்த தீவி­ர­வாத செயற்­பா­டு­க­ளுக்கு ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­களும் ஒரு­போதும் பொறுப்புக் கூற­மு­டி­யாது. எனவே, இதனை மைய­மாக வைத்து ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­க­ளையும் குற்­ற­வா­ளி­க­ளாக பார்ப்­பதும் முஸ்­லிம்­க­ளுடன் காழ்ப்­பு­ணர்­வுடன் நடந்து கொள்­வதும் அப்­பாவி முஸ்­லிம்­க­ளையும் அவர்­க­ளது உடை­மை­க­ளையும் தாக்­கு­வதும் பிழை­யான செயற்­பா­டு­க­ளாகும்.

தவி­ரவும், இந்­நெ­ருக்­க­டி­யான சூழ்­நி­லையில் இந்­நாட்டு முஸ்­லிம்கள் பின்­வரும் வழி­காட்­டல்­களை பின்­பற்றி நடக்­கு­மாறு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா வேண்டிக் கொள்­கின்­றது.

  1. எவ்­வ­கை­யான அசா­தா­ரண சூழ்­நி­லைகள் உரு­வா­கி­ய­போ­திலும் முஸ்­லிம்கள் வழ­மை­போன்று அல்­லாஹ்­வு­ட­னான தொடர்பைப் பல­மாக வைத்துக் கொள்ளும் அதே­நேரம் தொழுகை, நோன்பு, தவக்குல், துஆ, இஸ்­திஃபார் முத­லான இபா­தத்­களை கடைப்­பி­டித்­தொ­ழுக வேண்டும்.
  2. இந்­நெ­ருக்­க­டி­யான கட்­டத்தில் முஸ்லிம் சமூகம் மனம் தள­ரா­மலும் பீதி­ய­டை­யா­மலும் நிலை­மை­களை அவ­தா­னித்து விழிப்­பு­டனும் தூர­நோக்­கு­டனும் நடந்­து­கொள்ள வேண்டும்.
  3. இந்த நாட்டின் பிர­ஜைகள் என்ற வகையில் முஸ்­லிம்­க­ளது உயிர் மற்றும் உடை­மை­களை பாது­காக்கும் கடப்­பாடு அர­சாங்­கத்­திற்கு இருக்­கின்­றது. இது விட­ய­மாக நாம் அனை­வரும் அர­சாங்­கத்தை வலி­யு­றுத்த வேண்டும். மேலும், முஸ்­லிம்கள் அனை­வரும் சட்­டத்தை மதித்து மிகுந்த அவ­தா­னத்­து­டனும் நிதா­னத்­து­டனும் நடந்து கொள்ள வேண்டும்.
  4. அவ­ச­ர­கால சட்டம் நடை­மு­றையில் இருப்­ப­தனால் அது தொடர்­பான சட்ட வரை­ய­றை­களைப் பேணி நடந்­து­கொள்ள வேண்டும்.
  5. நாட்டில் பதற்ற சூழ்­நிலை நில­வு­வதால் கிடைக்கும் தக­வல்கள் அனைத்­தையும் பகிர்ந்து விடாமல் முதலில் அவற்றை ஊர்­ஜிதம் செய்து கொள்ளும் அதே­நேரம், அவற்றை பகிர்ந்து கொள்­வ­தனால் ஏற்­ப­டக்­கூ­டிய பின்­வி­ளை­வு­களை கவ­னத்திற் கொண்டு செயற்­பட வேண்டும்.
  6. எந்த அசா­தா­ரண சூழ்­நி­லை­யிலும்; அந்­தந்த பிராந்­தி­யங்­களின் தலை­மை­க­ளுக்கு கட்­டுப்­பட்டு ஒத்­து­ழைப்பு நல்க வேண்டும்.
  7. நாட்டில் தொடரும் அசா­தா­ரண நிலையை கருத்திற் கொண்டு ஐவேளை தொழு­கையில் குனூத் அந்­நா­ஸி­லாவை தொடர்ந்தும் ஓதி­வரும் அதே­நேரம், அதில் ஜம்­இய்­யா­வினால் வழங்­கப்­பட்ட துஆக்களுடன் சுருக்கிக் கொள்ள வேண்டும்.
  8. இந்நாட்டு மக்களில் பெரும்பான்மையானோர் சமய நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் விரும்புபவர்கள் என்ற உண்மையை புரிந்து கடந்த காலங்களில் நடந்து கொண்டதைப் போலவே தொடர்ந்தும் அவர்களுடன் நல்லிணக்கத்துடனும் சமாதானமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.
  9. தத்தமது பிரதேசங்களிலுள்ள சமய, சமூக தலைமைகளோடு கலந்துரையாடி பிரதேசத்தில் சுமுகமான நிலை உருவாகுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.