முஸ்லிம்களின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுகோள்

0 484

முஸ்­லிம்­க­ளுக்கும், பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் உச்ச பாது­காப்­பினை வழங்­கு­மாறு முஸ்லிம் அமைச்­சர்­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அவ­சர வேண்டு கோளினை விடுத்­துள்­ளனர்.

அமைச்­சர்கள் ரவூப் ஹக்கீம், ரிசாத் பதி­யுதீன், கபீர் ஹாசிம், எம்.எச்.ஏ.ஹலீம் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் உட்­பட பலர் ஜனா­தி­பதி, பிர­தமர், பதில் பாது­காப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகி­யோ­ரி­டமே இவ் அவ­சர வேண்­டு­கோ­ளினை விடுத்­துள்­ளனர்.

குரு­நாகல் மாவட்­டத்தில் நேற்று முன்­தி­னமும், நேற்றும் பல்­வேறு பகு­தி­களில் நேற்று மாலை இந்தச் செய்தி எழுதும் வரை 7 பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­ட­துடன், முஸ்­லிம்­களின் வீடுகள், வாக­னங்கள் தாக்­கப்­பட்­டுள்­ள­மை­யை­ய­டுத்தே இவ் வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டுள்­ளது.

கினி­யம, ஹெட்­டி­பொல, கொட்­டம்­பிட்­டிய, அனுக்­கன ஆகிய பகு­தி­க­ளிலே பள்­ளி­வா­சல்கள் தாக்­கு­தல்­க­ளுக்­குள்­ளா­கி­ய­தாக அப்­ப­குதி மக்கள் தெரி­விக்­கின்­றனர்.

முஸ்லிம் அமைச்­சர்­களின் வேண்­டு­கோ­ளி­னை­ய­டுத்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பொலிஸ்மா அதி­பரை தொடர்­பு­கொண்டு நிலை­மை­களைக் கேட்­ட­றிந்­த­துடன் சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்­டு­மாறு பணிப்­புரை விடுத்­துள்ளார்.

இதே­வேளை, நாட்டில் எந்தப் பிர­தே­சத்தில் ஏதா­வது அசம்­பா­வித சம்­ப­வங்கள் இடம்­பெற்றால் அதற்கு பிரதி பொலிஸ் மா அதி­பரும் அந்­தந்த பிர­தேச பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­கா­ரி­யுமே வகை சொல்­ல­வேண்டும். அதற்­கான அறி­வு­றுத்­தல்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன என்றார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.