முஸ்லிம் சமூகம் ‘குற்றமற்றவர்கள்’ என்பதை நிரூபிக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளது

புர்கா , நிகாப் தடை 'ஹிஜாப்' அணிவதையும் பாதித்துள்ளது என்கிறார் கலாநிதி நெளபல்

0 1,057

கலா­நிதி ஏ.எஸ்.எம். நௌபல் பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஓய்வு பெற்ற முது­நிலை விரி­வு­ரை­யாளர். இவர் வக்பு சபையின் உறுப்­பி­ன­ரு­மாவார். அத்­தோடு இலங்கை அபி­வி­ருத்­திக்கும் ஒற்­று­மைக்­கு­மான புத்­தி­ஜீ­விகள் ஒன்­றி­யத்தின் உதவித் தலைவர்.

அவ­ரு­ட­னான நேர்­கா­ணலை இங்கு தரு­கிறோம்.

Q உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து நாளுக்கு நாள் முஸ்­லிம்­களின் சக­வாழ்வு பாதிக்­கப்­ப­டு­வ­தற்­கான கார­ணிகள் என்ன?

தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களில் 253 பேர் பலி­யா­கி­யி­ருக்­கி­றார்கள். தேசிய தௌஹீத் ஜமாஅத் ஐ.எஸ். அமைப்­புடன் இணைந்து தாக்­கு­தல்­களை நடத்­தி­யுள்­ளமை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் பள்­ளி­வா­சல்கள், முஸ்­லிம்­களின் வீடுகள், சந்­தே­கத்­துக்­கி­ட­மான வர்த்­தக நிறு­வ­னங்கள் திடீர் சோத­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. இஸ்­லா­மிய சஞ்­சி­கைகள், குர்ஆன் பிர­திகள், இஸ்­லா­மிய இறு­வட்­டுக்கள் பொலி­ஸா­ரி­னாலும் இரா­ணு­வத்­தி­னாலும் கைப்­பற்­றப்­பட்டு வரு­கின்­றன.
பள்­ளி­வா­சல்­களில் தொழு­கையைப் பூர்த்தி செய்து விட்டு தரித்­தி­ருக்க முடி­யாது. பள்­ளி­வா­சல்கள் ஒவ்வோர் ஜமாஅத் தொழு­கையின் பின்பும் மூடப்­பட வேண்டும் என்றும் பாது­காப்பு தரப்­பி­னரால் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.
பொதுப் போக்­கு­வ­ரத்துச் சேவை­களில் பஸ் மற்றும் ரயிலில் பய­ணிக்கும் முஸ்லிம் கலா­சார உடை­யு­ட­னான பய­ணி­களை ஏனைய இனங்­களைச் சேர்ந்த பய­ணிகள் சந்­தே­கத்­துக்­கு­டனே நோக்­கு­கின்­றனர். முஸ்லிம் பெண்­க­ளுக்கு இஸ்­லா­மிய கலா­சார உடை­யுடன் வெளியில் செல்ல முடி­யாத சூழ்­நிலை உரு­வா­கி­யுள்­ளது. இவையே சகவாழ்வு பாதிக்கப்படுவதற்கான காரணிகள் நாட்டில் அனைத்து உரி­மை­க­ளையும் பெற்று ஏனைய மக்­க­ளுடன் சக­வாழ்வு வாழ்ந்த முஸ்­லிம்­களின் நிலைமை தலை­கீ­ழாக மாறி­யுள்­ளது. இன்று என்ன நடக்கப் போகி­றது என்ற பீதி­யுடன் முஸ்­லிம்கள் நாட்­களைக் கடத்திக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

பாது­காப்பு கருதி சோத­னை­களும் சுற்­றி­வ­ளைப்­பு­களும் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். ஆனால் அந்தச் சோத­னைகள் பள்­ளி­வா­சல்­க­ளையும் புனித குர்­ஆ­னையும் அகௌ­ர­வப்­ப­டுத்தும் வகையில் அமை­யக்­கூ­டாது.

Q ஜனா­தி­ப­தி­யினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள புர்­கா­வுக்­கான தடை பற்­றிய வர்த்­த­மானி அறி­வித்தல் குழப்­ப­க­ர­மான நிலை­யினை உரு­வாக்­கி­யுள்­ளதே?

முஸ்லிம் பெண்கள் அணியும் புர்­கா­வுக்­கான தடை முஸ்­லிம்­களை பெரிதும் பாதித்­துள்­ளது. கவ­லை­ய­டையச் செய்­துள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன புர்கா அணி­வதைத் தடை செய்யும் வர்த்­த­மானி அறி­வித்­தலை திடீ­ரென வெளி­யிட்­டுள்ளார். ஒரு சமூ­கத்தின் கலா­சார ஆடை­யினைத் தடை செய்­வ­தென்றால் அச்­ச­மூ­கத்­த­லை­வர்­க­ளையும் மதத்­த­லை­வர்­க­ளையும் நிறு­வ­னங்­க­ளையும் கலந்­தா­லோ­சித்து ஆலோ­ச­னை­களைப் பெற்றுக் கொண்­டி­ருக்க வேண்டும்.

இது தொடர்பில் அகில இலங்கை உலமா சபை, முஸ்லிம் சமய விவ­கார அமைச்சு, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் என்­ப­வற்­றுடன் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வில்லை.

ஜனா­தி­பதி வெளி­யிட்­டுள்ள வர்த்­த­மா­னியில் முழு முகத்­தையும் மூடி அணியும் ஆடைக்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்ள அதே­வேளை, “முழு முகம்” என்­ப­தற்கு இரு காது­க­ளையும் உள்­ள­டக்­கியே வரை­வி­லக்­கணம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

இன்று ஏனைய இன மக்­க­ளுக்கு புர்கா என்றால் என்ன?, நிகாப் என்றால் என்ன?, ஹிஜாப் என்றால் என்ன? என்­பது பற்றி தெளி­வில்­லாமல் உள்­ளது. இந்­நி­லையில் வைத்­தி­ய­சா­லை­களில், பாட­சா­லை­களில், வர்த்­தக நிறு­வ­னங்­களில், பொது போக்­கு­வ­ரத்து சேவை­களில் புர்­கா­வுக்கு மாத்­தி­ர­மல்ல ஹிஜாப் மற்றும் அபா­யா­வுக்கும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் முஸ்லிம் பெண்கள் வெளி­யி­டங்­களில் பல இன்­னல்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளார்கள். அவர்­க­ளுக்கு வைத்­திய சேவை மறுக்­கப்­ப­டு­கி­றது. சுப்பர் மார்க்­கட்­டு­களில் நுழை­வதும் தடை செய்­யப்­ப­டு­கி­றது.

Q ஹிஜாப் மற்றும் அபா­யா­வுக்கு அரச வைத்­தி­ய­சா­லை­களில் சவால்கள் ஏற்­பட்­டுள்­ளதா?

ஆம், அரச வைத்­தி­ய­சா­லை­களில் மாத்­தி­ர­மல்ல, தனியார் வைத்­தி­ய­சா­லை­க­ளிலும் வைத்­திய பரி­சோ­தனை நிலை­யங்­க­ளிலும் பாட­சா­லை­க­ளிலும் கண்­டியில் சவால்கள் ஏற்­பட்­டுள்­ளன.

கண்டி வைத்­தி­ய­சா­லையில் கட­மை­யாற்றும் முஸ்லிம் பெண் டாக்­டர்­க­ளுக்கு கூட ஹிஜாப் அணிந்து கட­மைக்குச் செல்­வது மறுக்­கப்­பட்­டது. பின்பு வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பா­ள­ருடன் முஸ்லிம் சமூக பிர­தி­நி­தி­களும் அர­சி­யல்­வா­தி­களும் கலந்­து­ரை­யா­டி­யதன் பின்பே அனு­மதி வழங்­கப்­பட்­டது.

ஹிஜாப் அணிந்து செல்லும் பெண்­களை வைத்­தி­ய­சா­லையில் கட­மை­யாற்றும் தாதி­களும் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்­களும் ஹிஜாபை கழற்­றும்­படி பணிக்­கி­றார்கள். இது தொடர்­பிலும் வைத்­தி­ய­சாலை பணிப்­பா­ள­ருடன் கலந்­து­ரை­யா­டி­ய­தை­ய­டுத்து முகத்தை காட்­டினால், அடை­யாள அட்­டையை சமர்ப்­பித்தால் அனு­ம­திக்­கும்­படி அவர் அறி­வு­றுத்­தி­யுள்ளார்.

என்­றாலும் நேற்று முன்­தினம் ஹிஜா­புடன் இரத்தப் பரி­சோ­த­னைக்­காக சென்ற பெண் ஒரு­வரை ஹிஜாபை கழற்­றி­விட்டு வரு­மாறு பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர் திருப்பி அனுப்­பி­யுள்ளார்.

தனியார் வைத்­திய பரி­சோ­தனை நிலை­ய­மொன்­றுக்கு ஸ்கேனிங்­காக ஹிஜாப் அணிந்து சென்ற பெண் ஒரு­வரை ஹிஜாபை கழற்­று­மாறு பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர் உரத்த குரலில் உத்­த­ர­விட்­டுள்ளார். அந்தப் பெண் ஸ்கேனிங் அறைக்குச் செல்­லும்­போது அங்கு அமர்ந்­தி­ருந்த நோயா­ளர்கள் மற்றும் தாதி­யர்கள் ஹிஜாபைக் கழற்­று­மாறு சப்­த­மிட்­டுள்­ளார்கள்.

தனது பக்க நியா­யத்தை அந்த முஸ்லிம் பெண் வைத்­திய பரி­சோ­தனை நிலைய ஊழி­யர்­க­ளிடம் தெரி­வித்த பின் தனது ஹிஜாபைக் கழற்­று­வ­தற்கு ஸ்கேன் அறையில் இடம் வழங்­கப்­ப­ட­வில்லை. இரண்டு அறை­க­ளை­ய­டுத்து திறந்­தவோர் இடத்திலேயே ஹிஜாபை கழற்­று­வ­தற்கு அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது. பரி­சோ­தனை முடிந்து அந்தப் பெண் வெளியில் வந்­த­போது அங்கு கட­மை­யி­லி­ருந்த வைத்­திய தொழில் நுட்­ப­வி­ய­லாளர் ஒருவர் அடுத்த முறை இவ்­வாறு வந்தால் எல்­லா­வற்­றையும் கழற்றி விடுவோம் என்று கூறி­யுள்ளார்.

Q புர்கா தடை தொடர்பில் பாட­சா­லைகள் எந்த நிலைப்­பாட்­டினை முன்­னெ­டுத்­துள்­ளன?

கண்­டியில் பிர­பல மகளிர் பாட­சா­லை­களில் புர்கா, ஹிஜாப் மாத்­தி­ர­மல்ல அபா­யா­வுக்கும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இது தொடர்பில் கண்டி மாந­கர பிரதி மேயர் உட்­பட சிவில் சமூகப் பிர­தி­நி­திகள் மத்­திய மாகாண ஆளுநர் மைத்­திரி குண­ரத்­னவைச் சந்­தித்து நேற்று முன்­தினம் கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர்.
மத்­திய மாகாண ஆளுநர் உட­ன­டி­யாக புர்கா, நிகாப், ஹிஜாப், அபாயா ஆகிய ஆடை­களின் புகைப்­ப­டங்­களை அனைத்து பாட­சா­லை­க­ளுக்கும் அனுப்பி வைத்து தெளி­வு­ப­டுத்­து­மாறு கல்விப் பணிப்­பா­ளரை வேண்­டி­யுள்ளார்.

Q அரபுக் கல்­லூ­ரிகள், மத்­ர­ஸாக்கள் தொடர்பில் தவ­றான கருத்­துகள் தெரி­விக்­கப்­ப­டு­கி­றதே?

அரபுக் கல்­லூ­ரிகள் மற்றும் குர்ஆன் மத்­ர­ஸாக்கள் தவ­றான செயற்­பா­டு­களைக் கொண்­டன அல்ல என்­பதை நாம் நிரூ­பிக்க வேண்டும். முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் புதிய மத்­ர­ஸாக்கள் தொடர்பில் கண்­கா­ணிக்க வேண்டும். நிதி­யு­த­விகள் எங்­கி­ருந்து கிடைக்­கின்­றன? யாருடன் தொடர்பு கொண்­டுள்­ளார்கள்? அவற்றின் பாட­நெ­றிகள் என்ன? என்­பன பற்றி ஆராய வேண்டும். தவ­றான செயற்­பா­டு­களைக் கொண்­டுள்ள அரபு மத்­ர­ஸாக்­களும் அரபுக் கல்­லூ­ரி­களும் பதிவு செய்­யப்­படக் கூடாது. அவை மூடப்­பட வேண்டும். வக்பு சபை மேலும் செயற்­றிறன் மிக்­க­தாக மாற்­றி­ய­மைக்­கப்­பட வேண்டும்.

Q முஸ்­லிம்­களின் வர்த்­த­கத்­துக்கும் சவால்கள் ஏற்­ப­டுமா?

நிச்­ச­ய­மாக, அவ்­வா­றான சூழ்­நி­லையே உரு­வா­கி­யுள்­ளது. ஏனைய இன மக்கள் முஸ்­லிம்­களின் கடைகள், வர்த்­தக நிலை­யங்­களில் கொள்­வ­னவு செய்­வதை நிறுத்தி விடலாம். நிரா­க­ரிக்­கலாம். அதனால் முஸ்­லிம்கள் நிலைமை சீரா­கும்­வரை கடை­களில் தம்மை முஸ்லிம் என உடை­க­ளி­னாலோ அல்­லது உரை­யா­டல்­க­ளி­னாலோ இனங்­காட்டிக் கொள்­ளாது தங்கள் வர்த்­த­கத்தைத் தொடர வேண்டும்.

Q இச்­சூ­ழலில் பள்ளி நிர்­வா­கங்­களின் பங்­க­ளிப்பு எவ்­வாறு அமைய வேண்டும்?

பள்ளி நிர்­வா­கங்கள் பள்­ளி­வா­சல்­க­ளையும் பள்ளி சூழ­லையும் பாது­காக்க வேண்டும். தீவி­ர­வாத அமைப்­பு­க­ளுக்கும் தீவி­ர­வா­தி­க­ளுக்கும் பள்­ளி­வா­ச­லினுள் இட­ம­ளிக்கக் கூடாது. பள்­ளி­வா­சல்­களில் கத்­திகள், வாள்கள், ஆயு­தங்கள் வைக்­கப்­பட்­டி­ருக்கக் கூடாது.

Q சின தினங்­களில் நாம் ரம­ழானை எதிர்­நோக்­கி­யி­ருக்­கிறோம். ரம­ழானில் எமது செயற்­பா­டுகள் எவ்­வாறு அமைய வேண்டும்?

நாம் அமை­தி­யாக இருக்க வேண்டும். எந்தச் சவால்­க­ளுக்கும் செல்­லக்­கூ­டாது. பெண்கள் இரவு வேளையில் கறுப்பு ஆடை அணிந்து வெளியில் செல்­லக்­கூ­டாது. எமது தொழு­கை­களை பள்­ளி­வா­சல்­களில் நிறை­வேற்றி விட்டு வீட்­டிலே இருக்க வேண்டும்.

Q புர்கா தடை செய்­யப்­பட்­டி­ருப்­ப­தை­ய­டுத்து முஸ்லிம் பெண்­களின் உயர்­கல்வி பாதிக்­கப்­ப­டுமா?

பல்­க­லைக்­க­ழ­கங்­களில் பயிலும் முஸ்லிம் மாண­விகள் அநேகர் ஹிஜாப் அணி­கி­றார்கள். சிலர் புர்கா அணி­கி­றார்கள், ஒரு சிலர் நிகாப் அணி­கி­றார்கள். முஸ்லிம் பெண்­களின் கலா­சார உடைக்கு எந்த சவால்கள் ஏற்­ப­டினும் உயர்­கல்­வியைத் தொடர வேண்டும். கல்­வியை இடை­ந­டுவில் கைவி­டு­வது புத்­தி­சா­லித்­த­ன­மா­ன­தல்ல. கல்­வியின் மூலமே சமூ­கத்தைக் கட்­டி­யெ­ழுப்ப முடியும்.

Q முஸ்லிம் சமூ­கத்தின் மீது முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டு­க­ளி­லி­ருந்து எவ்­வாறு விடு­தலை பெறலாம்?

இன்று முஸ்லிம் சமூகம் பாரிய சவால்­களை எதிர்­கொண்­டுள்­ளது. ஒரு போதும் எதிர்­பார்த்­தி­ராத சவால்கள் இவை. திடீ­ரென உரு­வா­கிய சவால்­க­ளினால் சமூகம் நிலை தடு­மாறிப் போயுள்­ளது.

நாங்கள் நிர­ப­ரா­திகள். குற்­ற­மற்­ற­வர்கள். ஒரு சில தீவி­ர­வா­தி­களின் செயற்­பா­டு­க­ளுக்கும் எமக்கும் எவ்­வித தொடர்­பு­மில்லை என்­பதை நாம் நிரூ­பிக்க வேண்டும்.

இதற்­காக எமது மதத் தலை­வர்­களும், அர­சியல் தலை­வர்­களும், சிவில் சமூக அமைப்­பு­களும் திட்­டங்­களை வகுக்க வேண்டும்.
சிதைந்து போயுள்ள நல்லிணக்கமும், இன நல்லுறவும் மீண்டும் கட்டியெழுப் பப்பட வேண்டும்.

சமூகத்தினுள் ஊடுருவியுள்ள தீவிரவாத சக்திகளை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்த பாதுகாப்பு பிரிவினருக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

Q தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் முஸ்லிம்களும் பலியாகியுள்ளார்களா?

ஆம், சுமார் 10 முஸ்லிம்கள் பலியாகியுள்ளனர். அத்தோடு இரண்டு சவூதி அரேபிய பிரஜைகளும் பலியாகியுள்ளனர். இவர்களும் அப்பாவி முஸ்லிம்கள். நட்சத்திர ஹோட்டல்களில் பணிபுரிந்தவர்கள். அங்கு உணவருந்திக் கொண்டிருந்தவர்கள். தீவிரவாதிகள் ஒரு இனத்தை இலக்கு வைக்கவில்லை என்பது இதிலிருந்து தெரியவருகிறது.

Qதீவிரவாதத்தை ஒழிப்பதற்கு சமூகம் என்ன நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம்?

அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாத கொள்கைகளைக் கொண்டுள்ள இளைஞர், யுவதிகள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும். வேலைவாய்ப்புகளை முஸ்லிம் நிறுவனங்களில் பெற்றுக் கொடுக்க முடியும். அரச துறைகளிலும் வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுக்கலாம்.

ஒவ்வோர் பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் தொடர்பில் கூடிய அவதானம் செலுத்த வேண்டும்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.