படையினரின் தேடுதல்கள் போது முஸ்லிம்களுக்கு அசெளகரியங்கள்

பிரதமரை சந்தித்து முஸ்லிம் தூதுக்குழு நேரில் முறைப்பாடு

0 679

நாட்­டி­னதும் நாட்டு மக்­க­ளி­னதும் பாது­காப்பு கருதி தினந்­தோறும் பாது­காப்புப் பிரி­வி­னரால் மேற்­கொள்­ளப்­படும் சோதனை நட­வ­டிக்­கைகள், கைதுகள், கைப்­பற்­றப்­படும் ஆயு­தங்கள் உட்­பட ஏனைய பொருட்கள் தொடர்­பான விப­ரங்­களை மூன்று நாட்­க­ளுக்கு ஒரு­முறை முஸ்லிம் மதத் தலை­வர்கள் மற்றும் சிவில் சமூகப் பிர­தி­நி­தி­க­ளுக்கு வழங்­கு­மாறு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவன் விஜே­வர்­த­ன­வுக்கு பணிப்­புரை விடுத்தார்.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் உட்­பட முஸ்லிம் சிவில் சமூகப் பிர­தி­நி­திகள் நேற்று முன்­தினம் இரவு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவைச் சந்­தித்­தனர். இந்த அவ­சர சந்­திப்பு அலரி மாளி­கையில் இடம்­பெற்­றது. முஸ்லிம் சமூக பிர­தி­நி­திகள், தற்­போது பாது­காப்­புப்­பி­ரி­வினர் சந்­தே­கத்­துக்­கி­ட­மான இடங்கள் என்று தேடுதல் நட­வ­டிக்­கை­க­ளின்­போது அல்­குர்ஆன் அவ­ம­திக்­கப்­ப­டு­கின்­றமை, ஹிஜாபை கழற்­று­கின்­றமை, முஸ்­லிம்கள் அச்­ச­ுறுத்­தப்­ப­டு­கின்­றமை, பள்­ளி­வா­சல்­களில் தேடுதல் நட­வ­டிக்­கை­யின்­போது பள்­ளி­வா­சல்­களின் புனிதம் கெடு­கின்­றமை, விசா­ர­ணை­க­ளின்­போது சி.சி.ரி.வி. கம­ராக்­களை செய­லி­ழக்கச் செய்­யு­மாறு கோரு­கின்­றமை போன்ற முறைப்­பா­டு­களை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் முன்­வைத்­தனர்.

இத­னை­ய­டுத்து இந்தச் சந்­திப்பில் கலந்­து­கொண்­டி­ருந்த பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜே­வர்­த­ன­விடம் இதனைக் கவ­னத்­திற்­கொள்­ளு­மாறு பிர­தமர் வேண்­டிக்­கொண்டார்.

பிர­த­மரின் உத்­த­ர­வுக்­க­மைய பாது­காப்புப் பிரிவும் முஸ்லிம் சமூக பிர­தி­நி­தி­களும் மூன்று நாட்­க­ளுக்கு ஒரு­முறை சந்­தித்து குறிப்­பிட்ட 3 தினங்­க­ளுக்குள் மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கைகள் தொடர்பில் விப­ரங்­களைப் பரி­மாறிக் கொள்­வ­தெனத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

பாது­காப்புப் பிரி­வி­னரால் மேற்­கொள்­ளப்­படும் தேடுதல் நட­வ­டிக்­கைகள் மற்றும் சுற்­றி­வ­ளைப்­பு­க­ளின்­போது ஊட­கங்­களை பாது­காப்புப் பிரி­வினர் அழைத்துச் செல்­லக்­கூ­டாது என முஸ்லிம் சமூகப் பிர­தி­நி­திகள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் வேண்­டிக்­கொண்­டனர். இவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் ஊட­கங்கள் தவ­றான கருத்­து­களைத் தெரி­விப்­பதால் இனங்­களின் உணர்­வுகள் மேலி­டு­வ­தற்கு கார­ணமாய் அமை­கின்­றன எனவும் சுட்­டிக்­காட்­டினர்.

தீவி­ர­வா­தத்தை ஒழிப்­ப­தற்கு முஸ்லிம் சமூகம் எந்தச் சந்­தர்ப்­பத்­திலும் ஒத்­து­ழைத்து வரு­கின்­றது. எனவே முஸ்­லிம் சமூகம் சந்­தே­கங்­கொண்டு நோக்­கப்­ப­டு­வது தவிர்க்­கப்­பட வேண்­டு­மெ­னவும் அவர்கள் வேண்­டிக்­கொண்­டனர்.
இந்தச் சந்­திப்பில் அமைச்­சர்­க­ளான கபீர் ஹாசிம், எம்.எச்.ஏ. ஹலீம், பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவன் விஜே­வர்­தன, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏ.எச்.எம். பௌஸி, முஜிபுர் ரஹ்மான், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி, உதவித் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். தாஸிம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என்.எம். அமீன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.