முஸ்லிம்கள் மத்தியில் ஒளிந்திருக்கும் அடிப்படைவாதிகளை காட்டிக்கொடுங்கள்

அமைச்சர் சம்பிக்க ரணவக்க

0 440

முஸ்­லிம்­களின் அடை­யாளம் என்­பது அடிப்­ப­டை­வாதம் அல்ல. ஆகவே முஸ்லிம் சமூ­கத்தில் ஒளிந்­தி­ருக்கும் அடிப்­ப­டை­வா­தி­களை காட்­டிக்­கொ­டுக்க வேண்டும். மீண்டும் இலங்­கை­ய­ராக நாம் அனை­வரும் ஒன்­றி­ணைய வேண்டும் என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார்.
இந்த நாட்டில் மத­வாத மோதல்­களை உரு­வாக்க எவரும் முயற்­சிக்­கக்­கூ­டாது எனவும் அவர் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

மேல் மாகாண மற்றும் நகர அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க விடுத்­துள்ள அறிக்­கையில் அவர் இதனைக் குறிப்­பிட்­டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில், எவ்­வா­றான பிரி­வி­னை­வாதம், அர­சியல் முரண்­பா­டுகள் இருந்­தாலும் கூட எமது புல­னாய்வுத் துறையின் தக­வல்­களை கருத்தில் கொள்­ளாது நிலை­மை­களை கருத்தில் கொள்­ளாது ஒரு சில­ரது கீழ்த்­த­ர­மான அர­சியல் நட­வ­டிக்­கை­களை கையாண்ட கார­ணத்­தினால் தான் இலங்­கையில் மீண்டும் ஒரு பயங்­க­ர­வாத தாக்­குதல் இடம்­பெற்­றுள்­ளது.
சஹ்றான் என்ற நபர் இன்று அல்ல கடந்த 2014 ஆம் ஆண்டே தடுக்­கப்­பட வேண்­டிய ஒரு நப­ராவார். அதேபோல் எதிர்­கா­லத்தில் உரு­வா­க­வி­ருக்கும் பயங்­க­ர­வாத சாத்­தான்­களை தடுத்து நிறுத்த வேண்டும்.

இதில் பிர­தான கடமை முஸ்லிம் மக்­க­ளிடம் உள்­ளது. இதற்­காக எந்த அச்­சமும் இல்­லாது முன்­வ­ர­வேண்டும்.

முஸ்­லிம்கள் மத்­தியில் இருக்கும் அடிப்­ப­டை­வா­தி­களை எமக்கு வெளிப்­ப­டுத்த வேண்டும். எமது பாது­காப்பு படை­க­ளுக்கு இந்த தக­வல்­களை தாருங்கள்.

மீண்டும் முஸ்­லிம்கள் நல்­லி­ணக்­கத்தை கையில் எடுத்து அனை­வ­ரு­டனும் இணைந்து வாழும் பல­மான சூழலை நாம் உரு­வாக்­குவோம். சமூக வேறு­பாடு இல்­லாது, சமூக பிரி­வினை இல்­லாது உணவு, உடை முதல்­கொண்டு நாம் அனை­வரும் ஒற்­று­மை­யான ஓர் இடத்­துக்கு வருவோம்.

நாம் ஒரு­போதும் இஸ்­லா­மிய கொள்­கை­களை நிரா­க­ரிக்­க­வில்லை. சிங்­க­ள­வர்­க­ளுக்கு என்ற ஓர் அடை­யாளம் உள்­ளது, இந்­துக்­க­ளுக்கு ஓர் அடை­யாளம் உள்­ளது, கிறிஸ்­த­வர்­க­ளுக்கு ஓர் அடை­யாளம் உள்­ளது. அதேபோல் முஸ்லிம் மக்­களின் அடை­யா­ளத்தை நாம் நிரா­க­ரிக்­க­வில்லை.

அடை­யாளம் என்­பது அடிப்­ப­டை­வாதம் இல்லை என்­பதை அனை­வரும் நினைவில் வைத்­து­க் கொள்ளவேண்டும்.

நாம் அனை­வரும் மனி­தர்கள் வாழும் உலகில் வாழ்­கின்றோம், நாம் அனை­வரும் இலங்­கைக்குள் வாழ்­கின்றோம் என்­பதை மறந்­து­வி­டக்­கூ­டாது.
முதலில் நாம் மனி­தர்கள், அடுத்து இலங்­கை­யர்கள் என்ற எண்­ணத்தில் நாட்டின் வளர்ச்­சிக்­காக அனை­வரும் வாழ வேண்டும்.

ஆகவே பயங்­க­ர­வா­தத்தை ஒழிக்க அனை­வரும் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும். இன்று உரு­வா­கி­யுள்­ளது பிர­பா­கரன் அல்ல, இது விடு­த­லைப்­பு­லி­களின் பயங்­க­ர­வாதம் அல்ல. இதை ஆரம்­பத்தில் ஒழிக்க முடிந்தால் நாட்­டினை ஆரோக்­கி­ய­மாக பாது­காக்க முடியும். அவ்­வாறு செயற்­பட்டால் மத­வாத முரண்­பாடு இல்­லாத நாடாக எம்மை மாற்­றிக்­கொள்ள முடியும்.

இந்த பயங்­க­ர­வா­தத்தை இந்­தி­யாவோ சீனாவோ, அமெ­ரிக்­காவோ ரஷ்­யாவோ மத்­திய கிழக்கின் ஜன­நா­யக நாடு­களோ அங்­கீ­க­ரிக்­க­வில்லை.
இந்த பயங்­க­ர­வாதம் அனைத்து நாடு­க­ளுக்கும் அச்சுறுத்தல் என்பதால் நாம் அனைவரும் இணைந்து இவற்றை அழிக்க முடியும்.

இந்த சம்பவத்தால் தவறுகள் ஒரு சிலர் மீது சுமத்தலாம் ஆனால் தவறிய இடம் என்ன என்பதை ஆராய்ந்து எமது பாதுகாப்பு துறைக்கு பொருத்தமான நபர்களை நியமிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.