எங்கிருந்து வந்தது இந்த தீவிரவாதம்

0 877

இந்­நாட்டில் முஸ்­லிம்கள் ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கு மேலாக எல்லா சமூ­கங்­க­ளு­டனும் இணைந்து வாழ்­கி­றார்கள். எப்­போதும் அமை­தியை விரும்­பு­கின்ற ஒரு சமூ­க­மா­கவே முஸ்­லிம்கள் அடை­யாளம் காணப்­பட்டு வந்­தி­ருக்­கி­றார்கள்.

அன்று காத்­தான்­குடிப் பள்­ளி­வாசல், சதாம் ஹுசைன் கிராமம், அழிஞ்­சிப்­பொத்­தானை, கல்­முனை, சாய்ந்­த­ம­ருது, மாளி­கைக்­காடு, அக்­க­ரைப்­பற்று, மூதூர், வட­புல வெளி­யேற்றம் என்று முஸ்­லிம்கள் வடக்கு, கிழக்கு பூரா­கவும் துவம்சம் செய்­யப்­பட்­ட­போது அவர்கள் ஆயுதம் தூக்­க­வில்லை.

வட, கிழக்­கிற்கு வெளியே மாவ­னெல்­லையில், அளுத்­க­மையில், கிந்­தோட்­டையில், திக­னயில் என்­றெல்லாம் இன­வாதம் கட்­ட­விழ்த்து விடப்­பட்­ட­போதும் ஆயுதம் தூக்­க­வில்லை. இவ்­வாறு அமை­தி­யான சமூகம் என்று ஆயிரம் வரு­டங்­க­ளுக்­கு­மே­லாக பெய­ரெ­டுத்த ஒரு சமூகம் ஒரே நாளில் ஒரு பயங்­க­ர­வா­த சமூ­க­மாக பார்க்­கப்­ப­டு­கின்ற நிலை ஏற்­பட்­டு­விட்­டது.

இந்த தீவி­ர­வாத குழு தொடர்­பாக இஸ்­லா­மிய அமைப்­புக்கள் மற்றும் பிர­மு­கர்கள் ஏற்­க­னவே அர­சுக்கு தகவல் வழங்­கியும், தாக்­கு­த­லுக்கு முன்­ப­தாக இந்­தியா இது தொடர்­பாக எச்­ச­ரித்­தி­ருந்தும் அதி­கா­ரிகள் அச­மந்­த­மாக இருந்­த­தாக குற்றம் சாட்­டப்­ப­டு­கி­றது. சில­வேளை முஸ்­லிம்கள் மீது வைத்த அப­ரி­மித நம்­பிக்கை அந்த அச­மந்­தத்­திற்கு கார­ண­மாக அமைந்­தி­ருக்­கலாம்.

இந்தப் பயங்­க­ர­வாதம் துடைத்­தெ­றிப்­பட வேண்டும். இதற்கு அனை­வரும் ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்டும். முஸ்­லிம்­களைப் பொறுத்­த­வரை தாக்­குதல் நடந்த கணத்­தி­லி­ருந்து இப்­ப­யங்­க­ர­வா­தி­க­ளுக்­கெ­தி­ராக குமுறிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தமது ஒரு­மைப்­பாட்டை முழு­மை­யாக தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

எங்­கி­ருந்து வந்­தது தீவி­ர­வாதம்?

இவ்­வாறு அமை­தியை விரும்­பு­கின்ற ஒரு சமூ­கத்­திற்குள் எங்­கி­ருந்து இத்­தீ­வி­ர­வாதம் வந்­தி­ருக்­கலாம்? ஒரு சிறு எண்­ணிக்­கை­யா­ன­வர்­க­ளாக அவர்கள் இருந்­த­போதும் அதைத் துடைத்­தெ­றி­வது எப்­படி என்­பதை ஒரு சமூகம் என்ற ரீதியில் சிந்­திக்க வேண்­டி­யது நமது கட­மை­யாகும். தவறின், இதனால் பாதிக்­கப்­ப­டப்­போ­வது நாம்தான்.

இந்தத் தாக்­கு­தலின் பின்­னணி தொடர்­பாக பல ஊகங்கள் வெளி­யி­டப்­ப­டு­கின்­றன. அர­சி­ய­லுக்­காக உள்­நாட்டு சக்­திகள் என்றும், தமது பிராந்­திய கேந்­திர நல­னுக்­காக இலங்­கையில் காலூன்­று­வ­தற்­காக வெளி­நாட்டு சக்­திகள் செயற்­பட்­டன என்றும் ISIS என்றும் பல அபிப்­பி­ரா­யங்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.

இங்கு நாம் சிந்­திக்க வேண்­டி­யது பின்­னா­லி­ருந்து இயக்­கிய சக்­திகள் எது­வாக இருந்­த­போதும் செயற்­பட்­ட­வர்கள் நமது சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்­களே என்­ப­தாகும். அத­னால்தான் இது குறித்து நாம் ஆவே­சப்­ப­டு­கின்றோம், வேதனை அடை­கின்றோம்.

நோக்­க­மென்ன?

இயக்­கி­ய­வர்­களின் நோக்கம் எது­வாக இருந்­த­போதும் இயங்­கி­ய­வர்­களின் நோக்­க­மென்ன? இது ஒரு சாதா­ரண தாக்­குதல் அல்ல. இது ஒரு தற்­கொலைத் தாக்­குதல். இதில் ஈடு­பட்­ட­வர்கள் பணத்­தா­சையில் செய்­தி­ருக்க முடி­யாது. ஏனெனில் அவ்­வா­றாயின் அந்தப் பணத்தை அவர்கள் அனு­ப­விக்க உயிர்­வாழ வேண்­டு­மென்றே விரும்­பு­வார்கள். மட்­டு­மல்ல, இதில் ஈடு­பட்­ட­வர்கள் நன்கு படித்­த­வர்­களும் பணக்­காரக் குடும்­பங்­களைச் சேர்ந்­த­வர்­களும் என்று கூறப்­ப­டு­கின்­றது.

பணம் கார­ண­மில்­லை­யெனில் ஏதா­வது ஒரு பாரிய இலட்­சியம் இருந்­தி­ருக்க வேண்டும். விடு­தலைப் புலிகள் தற்­கொ­லை­தா­ரி­யாகி உயிர்­நீத்­த­தற்குப் பின்னால் தமது சந்­த­தி­யி­ன­ருக்­கென்று ஒரு நாடு என்­கின்ற இலட்­சியம் அவர்­க­ளுக்­கி­ருந்­தது. அந்த இலட்­சி­யத்­திற்கு முன்னால் அந்த உயிர் அவர்­க­ளுக்கு ஒரு தூசா­கப்­பட்­டது.

முஸ்­லிம்­க­ளுக்கு அவ்­வாறு ஓர் இலக்கு, இலட்­சியம் இருக்­கின்­றதா? நிச்­ச­ய­மாக இல்லை. இருப்­பது சாத்­தி­ய­மு­மில்லை. அவ்­வா­றாயின் அவர்­களை இந்த நிலை­மைக்கு கொண்­டு­சென்­றது எது?

யுத்தம் நிறை­வு­பெற்­றதும் பேரி­ன­வாதம் துர­திஷ்­ட­வ­ச­மாக முஸ்­லிம்­களை நோக்கித் திரும்­பி­யது உண்மை. அது சில வாலி­பர்­களை விரக்­தியின் விளிம்­பிற்குத் தள்­ளி­யி­ருக்­கலாம். அப்­பொ­ழுது அமை­தி­யாக இருந்­து­விட்டு இப்­பொ­ழுது இத்­தற்­கொலைத் தாக்­கு­தலை நடாத்தி அடைய முற்­பட்­ட­தென்ன? குறிப்­பாக கிறிஸ்­த­வர்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் என்­றுமே இலங்­கையில் இன­மு­ரண்­பாடு இருந்­த­தில்லை அந்­நி­லையில் இத்­தாக்­குதல் ஏன்? இதைப் பற்றி சிந்­திப்­பது நமது கட­மை­யில்­லையா?

இங்கு ஒன்று புரி­கி­றது. அவர்கள் உள்­ளத்தில் விரக்தி இருந்­தி­ருக்­கலாம். அது முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான இலங்கை நிகழ்­வுகள் மாத்­தி­ர­மல்ல; சர்­வ­தேச நிகழ்­வு­க­ளா­கவும் இருக்­கலாம். ஆனாலும் அவர்­களின் உயிர்­களை இழந்து அடை­ய­முற்­பட்­டது பண­மு­மல்ல; தனி நாடு­மல்ல; என்றால் அவர்­க­ளது இலக்கு மறுமை விமோ­ச­ன­மா­கத்தான் இருக்­க­மு­டியும். எனவே, அவர்கள் மறு­மையின் ஆசை­யினை ஊட்டி “மூளைச் சலவை” செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்கள் என்­பது தெளி­வா­கின்­றது. இதற்­காக மார்க்கம் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.

சாய்ந்­த­ம­ருதில் உயி­ரி­ழந்த தற்­கொ­லை­தா­ரி­களும் அவர்கள் வெளி­யிட்ட வீடி­யோவில் மறு­மையைப் பற்­றியும் சுவர்க்­கத்­தைப்­பற்­றி­யுமே பேசு­கி­றார்கள். தனது மனைவி, பிள்­ளை­க­ளையும் கூடவே அழைத்­து­வந்து உயிர்ப்­பலி கொடுத்தால் அவர்­க­ளுக்கும் சுவர்க்கம் கிடைக்கும் என்று நம்­பு­கின்ற அளவு மூளைச்­ச­லவை நடை­பெற்­றி­ருக்­கி­றது.

வெறு­மனே ஒரு­வனைக் கூட்­டி­வந்து, முஸ்­லிம்­க­ளுக்கு அநி­யாயம் நடக்­கி­றது நீ தற்­கொ­லை­தா­ரி­யாக மாறி இவர்­களைக் கொல்லு, உனக்கு சுவர்க்கம் இல­கு­வாக கிடைக்கும் என்றால் அவ்­வ­ளவு இல­கு­வாக அவன் தன் உயிரைத் தியாகம் செய்ய முன்­வந்­து­வி­டு­வானா? நிச்­ச­ய­மாக இல்லை.

முத­லா­வது, அவ­னி­டத்­திலும் ஏதோ ஒரு­வகை தீவிர சிந்­தனை இருக்­க­வேண்டும். அந்த சிந்­தனை வெறும் உல­கத்­தோடு தொடர்­பு­டை­ய­தாக இருந்தால் அவன் உலக இலட்­சி­யத்தின் மூலம்தான் மூளைச் சலவை செய்­யப்­பட்டு தற்­கொ­லை­தா­ரி­யாக மாற்­றப்­ப­டலாம். இங்கு அடை­வ­தற்கு விடு­தலைப் புலி­களைப் போல் உலக இலட்­சியம் இல்­லா­த­போது அது மறுமை இலட்­சி­ய­மா­கத்தான் இருக்­க­வேண்டும்; அதற்கு மார்க்கம் அடிப்­ப­டை­யாக இருக்­க­ வேண்டும் என்றால் அவ­னிடம் மார்க்க விட­யத்தில் தீவிர சிந்­தனை இருக்­க­வேண்டும்.

மார்க்க விட­யத்தில் தீவிர சிந்­தனை உள்­ள­வனை மறு­மையின் ஆசை­யைக்­காட்டி மூளைச்­ச­லவை செய்­வது இல­கு­வாக இருக்கும். ஏனெனில் ஏற்­க­னவே அவ­னது மார்க்­க­ரீ­தி­யான தீவிர சிந்­தனை என்­பது பாதி மூளைச் சல­வை­யாகும். அந்தப் பாதி மூளைச்­ச­ல­வையில் இருப்­ப­வனை தீய­சக்­திகள் சில சுய­நல முஸ்­லிம்கள் மூல­மாக ஆயுத கலா­சா­ரத்தை நோக்கித் திருப்­பு­வ­தற்கு மிகுதிப் பாதி மூளைச் சல­வையை செய்­வ­தற்கு மறு­மையின் ஆசையை ஊட்­டலாம்.

இங்கு இருக்­கின்ற அடிப்­படை விடயம் என்­ன­வென்றால் அவன் தெளி­வாக சிந்­திக்க முடி­யா­தவன் என்ற அவ­னது பல­வீ­னம்தான் அவனை ஏற்­க­னவே மார்க்­க­ரீ­தி­யான தீவிர சிந்­த­னையை நோக்கி பாதி மூளைச்­ச­ல­வைக்­குட்­பட உத­வி­யது.

அவ்­வாறு ஏற்­க­னவே பாதி மூளைச்­ச­ல­வையில் இருப்­ப­வர்­களுள் சிந்­தனைப் பல­வீ­னத்தின் உச்­சத்தில் இருப்­ப­வர்கள் சிலரை அதே மார்­க்கத்­தையும் மறு­மை­யையும் சொல்லி பயங்­க­ர­வா­தி­யாக மாற்­றப்­ப­டு­கி­றது. அடுத்­த­வர்­களைக் கொலை­செய்து தானும் தற்­கொலை செய்தால் தனக்கு எவ்­வாறு சுவர்க்கம் கிடைக்கும் என்­றெல்லாம் அவன் அமை­தி­யாக உட்­கார்ந்து சிந்­திக்­கு­ம­ள­வுக்கோ அல்­லது மார்க்க அறி­ஞர்­க­ளிடம் வின­வு­வ­தற்கோ முடி­யாத அளவு ஒரு வகைச் சிந்­தனை போதை அவ­னுக்கு ஏற்­றப்­ப­டு­கின்­றது.

எனவே, சுருக்கம் என்­ன­வென்றால் பயங்­க­ர­வாத நோக்­கமோ, ஆயுதம் தூக்கும் நோக்­கமோ இல்­லாமல் வேறு வேறு கார­ணங்­க­ளுக்­காக மார்க்­கத்தில் கடும்­போக்­கு­வாத சிந்­த­னையை நோக்கி பாதி மூளைச்­ச­லவை செய்­யப்­பட்ட சிந்­தனைப் பலம் குறைந்­த­வர்­க­ளுக்­குள்­ளி­ருந்­துதான் இவ்­வா­றான பயங்­க­ர­வா­திகள் உரு­வாக்­கப்­பட முடியும். அதன் விளைவை மொத்த சமூ­கமும் அனு­ப­விக்க வேண்டி வரு­கின்­றது.

இந்தப் பின்­ன­ணி­யில்தான் ஆயுத நோக்­க­மற்ற முன்­பாதி மூளைச்­ச­லவை எவ்­வாறு நம் சமூ­கத்தில் இடம்­பெ­று­கி­றது என்­பதை மிகவும் நுணுக்­க­மாக நாம் ஆரா­ய­வேண்டும். இந்த முன்­பாதி மூளைச்­ச­லவை தடுக்­கப்­ப­ட­மு­டி­யு­மானால் பின்­பா­திக்­கான மூளைச் சல­வைக்­கான சாத்தியம் மிகவும் அபூர்வமாகிவிடும்.

இந்த விடயத்தில் நாம் உணர்ச்சிகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு, இயக்கக் கண்ணாடிபோடா மல் நடுநிலையாக சமூக கோணத் தில் இருந்து பார்த்தால் மட்டும் தான் உண்மை புரியும். இந்த முதல் பாதி மூளைச் சலவைதான் இயக்க வாதத்துடன் தொடர்புபட்டது. எனவே, இயக்கவாதம் தொடர்பாக சற்று ஆழமாக ஆராயவேண்டும்.

இயக்கவாதம்

இஸ்லாம் 1400 வருடங்களுக்குமுன் தோன்றி இந்த உலகமெலாம் வியாபித்திருக்கின்றது. இஸ்லாம் இவ்வாறு வளர்ந்தது இயக்கங்கள் மூலமா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இயக்கங்கள் தோன்றியது பிந்திய காலத்திலாகும். இயக்கங்கள் என்று தோன்ற ஆரம்பித்ததோ அன்று முஸ்லிம்களுக்கு மத்தியில் பிளவுகளும் ஆரம்பித்தன என்பது வரலாற்று உண்மையா? இஸ்லாம் வளர்ந்ததென்பது வரலாற்று உண்மையா? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

காலம் செல்லச்செல்ல இயக்கங்கள் அதிகரித்து இன்று எத்தனை இயக்கங்கள் நமது இந்த சிறிய நாட்டிலேயே இருக்கின்றன; என்று நமக்கே தெரியாத அளவு அதிகரித்திருக்கிறது.

சிந்­த­னைக்கு வேலை

இஸ்லாம் அல்­லாஹ்வின் தூதர் (ஸல்) என்ற ஒருவர் ஊடாக வந்து உல­கெலாம் வியா­பிக்க ஆரம்­பித்­தது. ஆனாலும் ஒரே இஸ்­லா­மா­கத்தான் இருந்­தது. காலங்­களில் சிறந்த கால­மாக மூன்று காலங்­களைப் குறிப்­பிட்­டார்கள் (ஸல் ) அவர்கள். அந்­தக்­கா­லத்­தில்தான் மத்­ஹ­பு­டைய இமாம்கள் தோன்­றி­னார்கள்.

ஹதீஸ்­க­ளின்­படி காலஞ்­செல்லச் செல்ல இஸ்­லாத்தில் குழப்­பங்கள் கூடவே வாய்ப்­பி­ருக்­கின்­றன. சுருங்­கக்­கூறின் இன்­றை­யைவிட நேற்று சிறந்­த­தாகும். நாளை­யை­விட இன்று சிறந்ததாகும். இதுதான் யதார்த்தம்.
தொடரும்…
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.