அடிப்­ப­டை­வாத தௌஹீத் பள்­ளி­களை தடை செய்க

சு.க. செய­லாளர் தயா­சிறி வலி­யு­றுத்து

0 651

முந்­தைய அர­சாங்­கங்­களின் கீழ் சம­ய­ விவகாரங்க­ளுக்குப் பொறுப்­பான பொது­வான அமைச்சு ஒன்றே காணப்­பட்­டது. எனினும் தற்­போதைய அர­சாங்­கத்தின் கீழ் பௌத்த, இந்து, இஸ்லாம், கத்தோலிக்க சமயங்களுக்குப் பொறுப்­பான தனித்­தனி அமைச்­சுக்கள் வழங்­கப்­பட்­டன. இவ்­வாறு இஸ்­லா­மிய விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பாக பத­வி­யேற்ற அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் கடந்த காலங்­களில் தனது மாவட்­ட­மான கண்­டியில் மாத்­திரம் 50 தௌஹீத் ஜமாத் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு அனுமதி வழங்­கி­யி­ருக்­கின்றார்.

எனினும் இவை ஜும்மா தொழு­கையை நடத்­து­வ­தற்கு அவ­சி­ய­மான அளவு உறுப்­பினர் தொகை­யைக்­கூட பூர்த்தி செய்­யாத நிலையில், ஒரு மத­வ­ழி­பாட்டுத் தல­மாக அன்றி அலு­வ­ல­கங்கள் போன்று இயங்கி வரு­கின்­றன. கண்­டியில் மாத்­திரம் 50 அடிப்­ப­டை­வாத தொஹீத் ஜமாத் நிலை­யங்­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ள­துடன், இஸ்­லா­மிய விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பான அமைச்­சினால் நாட­ளா­விய ரீதியில் 400 இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத நிலை­யங்­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. எனவே இவற்­றுக்கு இஸ்­லா­மிய விவ­கா­ரங்கள் அமைச்சும் பொறுப்­புக்­கூற வேண்­டிய நிலையில் இருக்­கின்­றது என்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைமைக் காரி­யா­ல­யத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் இதனைக் குறிப்­பிட்டார். அங்கு அவர் மேலும் கூறு­கையில்,

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று கிறிஸ்­தவ தேவா­ல­யங்­க­ளையும், நட்­சத்­திர ஹோட்­டல்­க­ளையும் இலக்­கு­வைத்து நடத்­தப்­பட்ட தொடர்­குண்டுத் தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து இதனைக் கட்­டுப்­பாட்­டிற்குள் கொண்­டு­வரும் பொறுப்பை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இரா­ணு­வத்­திற்கு வழங்­கி­ய­துடன், அவ­ச­ர­காலச் சட்­டத்­தையும் உட­ன­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தினார். அதே­போன்று பல­வ­ரு­டங்­க­ளுக்குப் பின்னர் ஊர­டங்கு உத்­த­ரவும் பிறப்­பிக்­கப்­பட்­டது. இதற்கு பலர் விமர்­ச­னங்­களை வெளி­யிட்ட போதிலும், ஊர­டங்­கு உத்­த­ர­வினால் குற்­ற­வா­ளிகள் ஒரு பிர­தே­சத்­தி­லி­ருந்து வேறொரு பிர­தே­சத்­திற்குத் தப்­பிச்­செல்­வது தடுக்­கப்­பட்­ட­தனால் அவர்­களைக் கைது­செய்­வது இல­கு­வாக்­கப்­பட்­டது. அத்­தோடு தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பைத் தடை செய்­வ­தற்கும், ஒரு­வரின் அடை­யா­ளத்தை வெளிக்­காட்­டாத வகை­யி­லான முகத்தை மறைக்கும் ஆடை­களைத் தடை செய்­வ­தற்கும் ஜனா­தி­பதி நட­வ­டிக்கை மேற்­கொண்டார்.

இந்­நி­லையில் தௌஹீத் ஜமாத் என்ற பெயரில் இயங்கும் அனைத்து அமைப்­புக்­க­ளையும் தடை செய்ய வேண்டும் என்­பதே என்­னு­டைய ஆலோ­ச­னை­யாகும். காரணம் பெரும்­பாலும் இவை பாரம்­ப­ரிய இஸ்­லா­மிய கோட்­பா­டு­களைப் பின்­பற்­றாமல் அடிப்­ப­டை­வாதக் கருத்­துக்­களைப் போதிக்­கின்ற அமைப்­புக்­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றன. மேலும் இந்தத் தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­டைய குற்­ற­வா­ளி­க­ளுக்குத் தண்­டனை வழங்­கு­வ­தற்கு விசேட நீதி­மன்றம் ஒன்று அமைக்­கப்­பட்டு, அத­னூ­டாக விரை­வாக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு குற்­ற­வா­ளி­க­ளுக்குத் தண்­டனை வழங்­கப்­பட வேண்டும்.

அதே­போன்று இஸ்­லா­மிய அற­நெறிப் பாட­சா­லை­க­ளாக இயங்கும் மத்­ரஸா எனப்­ப­டு­கின்ற பாட­சா­லை­களில் சிங்­க­ள­மொழி கற்­பிக்­கப்­ப­டு­வது தடை செய்­யப்­பட்­டுள்­ளது. இப்­பா­ட­சா­லைகள் எதன்கீழ் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன? யாரிடம் அனு­ம­தி­பெற்று இயங்­கு­கின்­றன? உள்­ளிட்ட கேள்­விகள் காணப்­ப­டு­கின்­றன. இந்தப் பாட­சா­லைகள் கல்­வி­ய­மைச்சின் கீழ், அதன் பாட­வி­தா­னங்­க­ளுக்கு அமை­வாக செயற்­ப­ட­வில்லை. எனவே இவை தொடர்­பிலும் அர­சாங்­கத்தின் கண்­கா­ணிப்பின் கீழான முறை­யான கட்­ட­மைப்­பொன்று உரு­வாக்­கப்­பட வேண்டும்.

முந்­தைய அர­சாங்­கங்­களின் கீழ் சம­ய­வி­வ­கா­ரங்­க­ளுக்குப் பொ­றுப்­பான பொது­வான அமைச்சு ஒன்றே காணப்­பட்­டது. எனினும் தற்­போ­தைய அர­சாங்­கத்தின் கீழ் பௌத்த, இந்து, இஸ்லாம், கத்­தோ­லிக்க சம­யங்­க­ளுக்குப் பொறுப்­பான தனித்­தனி அமைச்­சுக்கள் வழங்­கப்­பட்­டன. இவ்­வாறு இஸ்­லா­மிய விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பாக பத­வி­யேற்ற அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் கடந்த காலங்­களில் தனது மாவட்­ட­மான கண்­டியில் மாத்­திரம் 50 தௌஹீத் ஜமாத் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு அனு­மதி வழங்­கி­யி­ருக்­கின்றார். எனினும் இவை ஜும்ஆ தொழு­கையை நடத்­து­வ­தற்கு அவ­சி­ய­மான இழி­வ­ளவு உறுப்­பினர் தொகை­யைக்­கூட பூர்த்தி செய்­யாத நிலையில், ஒரு மத­வ­ழி­பாட்டுத் தள­மாக அன்றி அலு­வ­ல­கங்கள் போன்று இயங்கி வரு­கின்­றன. கண்­டியில் மாத்­திரம் 50 அடிப்­ப­டை­வாத தொஹீத் ஜமாத் நிலை­யங்­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ள­துடன், இஸ்­லா­மிய விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பான அமைச்­சினால் நாட­ளா­விய ரீதியில் 400 இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத நிலை­யங்­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. எனவே இவற்­றுக்கு இஸ்­லா­மிய விவ­கா­ரங்கள் அமைச்சும் பொறுப்­புக்­கூற வேண்­டிய நிலையில் இருக்­கின்­றது.

இந்­நி­லையில் இவ்­வாறு நாட­ளா­விய ரீதியில் அனு­மதி வழங்­கப்­பட்ட அனைத்து இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத நிறு­வ­னங்­களும் உட­ன­டி­யாகத் தடை­செய்­யப்­பட வேண்டும் என்­ப­துடன், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் ஆலோ­ச­னை­களைப் பெற்று செயற்­பட வேண்டும். மேலும் இந்த தௌஹீத் ஜமாத் நிறு­வ­னங்­க­ளுக்கு பாரி­ய­ளவில் நிதி­யு­தவி வழங்­கு­கின்ற அனைத்து அரச சார்­பற்ற அமைப்­புக்­களும் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு, உரிய நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். அதே­போன்று தேவா­ல­யங்­களைத் தாக்­கி­யதன் பின்னர் சிங்­க­ள­வர்­களும், கத்­தோ­லிக்­கர்­களும் இணைந்து முஸ்லிம் பள்­ளி­வா­சல்­களைத் தாக்­கு­வார்கள் என்றே பயங்­க­ர­வா­திகள் எதிர்­பார்த்­தி­ருந்­தனர். எனினும் கர்­தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை செயற்பட்ட விதத்தினால் நாட்டில் ஏற்படவிருந்த பாரிய அழிவு தடுக்கப்பட்டது. எனவே இத்தருணத்தில் அவருக்கு எம்முடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம் என்று குறிப்பிட்டார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.