தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவோம்

0 709

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று கிறிஸ்­தவ ஆல­யங்­க­ளிலும் நட்­சத்­திர ஹோட்­டல்கள் சில­வற்­றிலும் இடம்­பெற்ற தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து நாட்­டி­னதும் பொது­மக்­க­ளி­னதும் பாது­காப்­பினை அர­சாங்கம் பலப்­ப­டுத்­தி­யுள்­ளது.

நாட­ளா­விய ரீதியில் வீடுகள் பலத்த சோத­னைக்­குள்­ளாக்­கப்­பட்டு வரு­கின்­றன. சந்­தே­கத்தின் பேரில் சில பள்­ளி­வா­சல்­களும் சோத­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. மக்கள் ஒன்று கூடு­மி­டங்­க­ளான ரயில் நிலை­யங்கள், பிர­தான பஸ் நிலை­யங்கள், வைத்­தி­ய­சா­லைகள் உட்­பட பல முக்­கிய இடங்­களில் ஆயு­த­மேந்­திய படை­வீ­ரர்கள் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்.

மக்கள் கட்­டாய பய­ணங்­களைத் தவிர ஏனைய பய­ணங்­களைத் தவிர்த்­துள்­ளனர். ரயில்­க­ளிலும் பஸ்­க­ளிலும் பெரிய பயணப் பைக­ளுடன் ஏறு­ப­வர்­களை மக்கள் சந்­தேகக் கண்­கொண்டு பார்க்­கின்­றனர். அபாயா, புர்கா, நிக்காப் அணிந்து பய­ணிக்கும் எமது பெண்­களைக் காண­மு­டி­யா­துள்­ளது.

முஸ்­லிம்கள் பெரும் அச்­சத்­துடன் வாழ­வேண்­டிய சூழ்­நிலை உரு­வா­கி­யுள்­ளது. தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்கள் நடத்தி நூற்­றுக்­க­ணக்­கான அப்­பாவி உயிர்­களைக் காவு கொண்­ட­வர்கள் முஸ்லிம் தீவி­ர­வா­திகள் என்­பது நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது.

இவ்­வா­றான சூழ்­நி­லையில் முஸ்லிம் சமூகம் நாங்கள் நிர­ப­ரா­திகள், தீவி­ர­வா­தத்­துக்கும் தீவி­ர­வாத குழு­வுக்கும் எங்­க­ளுக்கும் தொடர்­பில்லை’ என்­பதை நிரூ­பிக்க வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளது.

சமூ­கத்­தினுள் ஊடு­ரு­வி­யுள்ள ஒரு சிறு குழு­வி­னரை சட்­டத்தின் முன் நிறுத்த வேண்­டி­யது முஸ்­லிம்­களின் கட­மை­யா­க­வுள்­ளது. அவர்­களை இனங்­கண்டு சட்­டத்தின் பிடிக்குள் சிக்க வைப்­ப­தற்கு முஸ்­லிம்கள் பாது­காப்பு பிரி­வி­ன­ருக்கு ஒத்­து­ழைக்க வேண்டும். இதனை அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்­சரும் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்­பெற்ற மாவ­னெல்­லையில் புத்தர் சிலை உடைப்பு சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்­களைக் கைது­செய்ய சமூ­க­நலன் கரு­திய முஸ்­லிம்­களே பாது­காப்புப் பிரி­வி­ன­ருக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கி­னார்கள். ஒத்­து­ழைப்பு வழங்­கி­ய­தற்­காக அமைச்சர் கபீர் ஹாசிமின் ஆத­ர­வாளர் ஒருவர் சுடப்­பட்­ட­மை­யையும் நாம் அறிவோம்.

கடந்த 26 ஆம் திகதி இரவு கல்­முனை – சாய்ந்­த­ம­ருது வில் இடம்­பெற்ற தீவி­ர­வா­தி­களின் வெடி­பொ­ருட்கள் களஞ்­சி­ய­சாலை சுற்­றி­வ­ளைப்­புக்கும் முஸ்­லிம்­களே தகவல் வழங்­கி­யுள்­ளனர். இதனால் பாரிய அழி­வுக்­கான திட்டம் முறி­ய­டிக்­கப்­பட்­டுள்­ளது. சாய்ந்­த­ம­ரு­துவில் சந்­தே­கத்­துக்­கி­ட­மா­ன­வர்கள் தங்­கி­யி­ருக்­கி­றார்கள், சந்­தே­கத்­திற்­கி­ட­மான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்கப் படு­கின்­றன என முஸ்­லிம்­களே அரச புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு தகவல் வழங்­கி­யி­ருக்­கி­றார்கள். அந்தத் தக­வல்­களின் அடிப்­ப­டை­யி­லேயே வெடி­பொருள் களஞ்­சி­ய­சாலை முற்­று­கை­யி­டப்­பட்­டது. இதி­லி­ருந்து முஸ்­லிம்கள் தீவி­ர­வா­தத்­துக்கு எதி­ரா­ன­வர்கள். நாட்­டுப்­பற்­றுள்­ள­வர்கள் என்­பதை நிரூ­பித்­துள்­ளார்கள்.

அதேபோன்று சம்மாந்துறையில் குண்டு தயா­ரிப்­ப­தற்­கான மூலப்­பொருட்கள், இர­சா­யனப் பொருட்கள், ஒரு இலட்சம் சிறிய இரும்பு உருளைகள், தற்­கொலை குண்டு ஆடை­ உட்­பட பல பொருட்கள் பாது­காப்புப் பிரி­வி­னரால் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

புர்கா தடை செய்­யப்­ப­ட­வேண்டும் என்ற யோச­னைக்கும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை உட்­பட முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பச்சைக் கொடி காட்­டி­யுள்­ளனர். நாட்­டி­லி­ருந்து தீவி­ர­வா­தத்தை அடி­யோடு வேர­றுப்­ப­தற்கு முஸ்­லிம்கள் தயார் என்­பதை இது உறு­திப்­ப­டுத்­து­கி­றது.
முஸ்லிம் சமூகம் இஸ்லாம் வெறுத்­துள்ள தீவி­ர­வா­தத்­தையும் மனிதப் படு­கொ­லை­க­ளையும் ஒழிப்­ப­தற்கு தொடர்ந்தும் அர­சாங்­கத்­துடன் கைகோர்க்க வேண்டும். தாங்கள் நிர­ப­ரா­திகள், தீவி­ர­வா­தத்­துக்கும் எமக்கும் எந்தத் தொடர்­பு­மில்லை என்­பதை நிரூ­பிக்க வேண்டும். இவ்­வாறு நிரூ­பிப்­பதன் மூலமே நாட்டில் ஏனைய இனங்­க­ளுடன் முன்­புபோல் கைகோர்த்து ஒன்­றி­ணைந்து வாழ்­வ­தற்­கான சூழல் உருவாகும். இல்லையேல் நாம் எப்போதும் சந்தேகக் கண்கொண்டே நோக்கப்படுவோம்.

சாய்ந்தமருதுவில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்வ தற்கு முஸ்லிம்களே தகவல் வழங்கியதாக கிழக்கின் இராணுவ மையத்தின் உயரதிகாரி முஸ்லிம்களைப் பாராட்டியுள்ளார். முஸ்லிம்கள் தொடர்ந்தும் இவ்வாறான விடயங்களில் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென அறைகூவல் விடுத்துள்ளார்.
பல்லின மக்கள் வாழும் எமது நாட்டில் சமாதானத்துடனும் பாதுகாப்புடனும் வாழ்வதற்கு நாம் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவோம்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.