முஸ்லிம்கள் வழங்கி வரும் தகவலுக்கமைய தீவிரவாதிகளை முற்றுகையிட முடிகின்றது

விரைவில் அழித்தொழிக்கலாம் என்கிறார் பிரதமர்

0 768

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்­பெற்ற தாக்­குதல் சம்­ப­வங்­களின் பின்பு பேராயர் கர்­தினால் கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவா­ல­யத்­தில நடத்­திய ஆரா­த­னையில் கலந்­து­கொண்டேன். ஒரு­வார காலத்­தினுள் தாக்­குதல் தொடர்­பான தக­வல்­களைத் திரட்­டி­யுள்­ள­துடன் அத­னுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் பலர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

ஜிஹாத் தீவி­ர­வா­தி­க­ளினால் மேற்­கொள்­ளப்­பட்­டு­வரும் தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­டைய சந்­தேக நபர்கள் இனங்­கா­ணப்­பட்டு அவர்கள் அனை­வரும் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட்டு இது உட­ன­டி­யாக முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும். நாம் இதற்­கான உத்­த­ர­வு­களைப் பிறப்­பித்­துள்ளோம். ஜனா­தி­பதி, நான், அமைச்­ச­ரவை உட்­பட முழு அர­சாங்­கமும் இந்த உத்­த­ர­வினைப் பிறப்­பித்­துள்­ளது. மேலும் 30 வரு­டங்கள் யுத்­த­மொன்­றினை நடத்­து­வ­தற்கு நாம் ஒரு­போதும் எதிர்­பார்க்­க­வில்லை.

தீவி­ர­வா­தத்­துக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகளை நாம் கடந்த ஞாயிறு (21) மதிய வேளை­யி­லேயே ஆரம்­பித்தோம். குண்டுத் தாக்­குதல் இடம்­பெற்று சில மணித்­தி­யா­லங்­களில் தெமட்­ட­கொ­டையில் சந்­தேக நபர்கள் சிலரைக் கைது செய்தோம். அங்கு எதிலும் அச்­ச­மில்­லாத பொலிஸ் அதி­கா­ரிகள் மூவரின் உயிர்கள் பலி­யெ­டுக்­கப்­பட்­டன. இது தவிர பாது­காப்புப் பிரி­வினர் எவ­ரதும் உயிர்கள் காவு கொள்­ளப்­ப­ட­வில்லை.

கடந்த வெள்­ளிக்­கி­ழ­மையும் சனிக்­கி­ழ­மையும் சம்­மாந்­துறை, நிந்­தவூர் அட்­டா­ளைச்­சேனை, சாய்ந்­த­ம­ருது ஆகிய பிர­தே­சங்­களில் ஜிஹாத் தீவி­ர­வா­திகள் மற்றும் அவர்­க­ளது ஆயு­தங்­களை எம்மால் கைப்­பற்­றிக்­கொள்ள முடிந்­தது. அந்தப் பிர­தே­சத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் வழங்­கிய தக­வல்­களின் பேரி­லேயே அப்­பி­ர­தே­சத்தை எம்மால் முற்­று­கை­யிட முடிந்­தது.

அங்­குள்ள வீடு­க­ளி­லி­ருந்து இர­சா­யனப் பொருட்கள் மற்றும் வெடி பொருட்கள், உப­க­ர­ணங்­களைக் கைப்­பற்ற முடிந்­தது. ஒரு வீட்டில் மறைந்­தி­ருந்த தீவி­ர­வா­தி­களும் அவர்­க­ளது பிள்­ளை­களும் தற்­கொலை செய்து கொண்­டனர். அங்கு 15 பேர் பலி­யா­கி­யி­ருக்­கி­றார்கள். மேலும் சிலர் காயங்­க­ளுக்­குள்­ளாகி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளார்கள். அவர்­களை இனங்­கா­ணு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

வானாத்­த­வில்­லுவில் இடம்­பெற்ற சோதனை நட­வ­டிக்­கைக­ளின்­போது கைப்­பற்றப் பட்ட ஆயு­தங்­களில்
T 56 துப்­பாக்­கி­யொன்றும் இருந்­தது. கம்­ப­ளையில் முக்­கி­ய­மான கண்­டு­பி­டிப்­புகள் இடம்­பெற்­றுள்­ளன. இப்­போது பல சந்­தேக நபர்கள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர். இந்த நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்ட அதி­கா­ரி­க­ளுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

எம்­மிடம் 7 உளவுப் பிரி­வுகள் இருக்­கின்­றன. இந்த உளவுப் பிரி­வினர் கடந்த மூன்று நான்கு வரு­டங்­க­ளாக உள­வுச்­சே­வை­யுடன் மிகவும் நெருங்­கிய தொடர்­பு­களைப் பேணி தங்­க­ளது கட­மை­களை முன்­னெ­டுத்து வந்­தனர். மற்றும் சி.ஐ.டி பிரிவு இந்தச் சம்­ப­வங்கள் தொடர்பில் தொடர்ந்து விசா­ரணை நடத்தி அதி­க­மான சந்­தேக நபர்­களை இனங்­கண்­டுள்­ளது. சி.ஐ.டி பிரிவு தற்­போது பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. பொலி­ஸாரும் முப்­ப­டை­யி­னரும் சந்­தேக நபர்­களைக் கைது செய்­வ­தற்கு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர். இவர்­க­ளுக்கு நன்றி தெரி­விக்­கிறேன்.

இந்தத் தாக்­கு­தல்­களை சிறப்­பாகத் திட்­ட­மிட்ட சிறு குழு­வொன்றே மேற்­கொண்­டுள்­ளது எனக் கூற­மு­டியும். அவர்கள் சாதா­ரண முஸ்­லிம்கள் அல்லர். தவ­றாக வழி­ந­டத்­தப்­பட்ட அடிப்­ப­டை­வாத கொள்­கை­களைக் கொண்ட பிரி­வி­னரே அவர்கள். வவு­ண­தீவில் பொலிஸ் அதி­கா­ரிகள் இரு­வரைக் கொலை செய்து அவர்கள் இந்த குற்­றச்­செ­யல்­களை ஆரம்­பித்­தி­ருக்­கி­றார்கள். கடந்த வருடம் நவம்பர் 30 ஆம் திகதி அவர்கள் இந்தக் கொலையைச் செய்­தார்கள். அதன் பின்பு மாவ­னெல்­லையில் புத்தர் சிலை­களை உடைத்து அமைச்சர் கபீர் ஹாசிமின் செய­லா­ள­ருக்கும் வெடி வைத்­தனர். வனாத்­த­வில்­லுவில் அவர்­க­ளது பயிற்­சி­முகாம் இருந்­தது. இதன் பின்பே அவர்கள் இந்த அழி­வு­களை முன்­னெ­டுத்­தார்கள். இதற்கு எதி­ராக நாம் தற் ­போது நட­வ­டிக்­கைகளை மேற்­கொண்டு வரு­கிறோம்.

பல்­வே­று­பட்ட கல்வி நிலை­யங்­களில் உரிய வேலை­விசா இல்­லாத வெளி­நாட்டு ஆசி­ரி­யர்கள் கட­மையில் உள்­ள­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. அவர்கள் அனை­வ­ரையும் நாட்­டி­லி­ருந்து வெளி­யேற்­று­வ­தற்கு முஸ்லிம் சமய விவ­கார அமைச்சும், உள்­நாட்­ட­லு­வல்கள் அமைச்சும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளன. அத்­தோடு இந்த அமைச்­சுகள் முஸ்லிம் சமூ­கத்­துடன் கலந்­து­ரை­யாடி பல்­வேறு சட்­டங்­களை இயற்­றவும் தேவை­யான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கவும் தீர்­மா­னங்­களை நிறை­வேற்றி அவற்­றினை அர­சாங்­கத்­திடம் முன்­வைக்­க­வுள்­ளன.

முஸ்லிம் சமூகம் வழங்கும் ஒத்­து­ழைப்பு பாராட்­டத்­தக்­க­தாகும். அவர்­க­ளுக்கு எந்த இடை­யூ­று­களும் செய்­ய­வேண்டாம் என நான் வேண்­டிக்­கொள்­கிறேன். நாம­னை­வரும் ஒன்­றி­ணைந்து ஜிஹாத் தீவி­ர­வா­தத்தை ஒழிப்­ப­தற்குச் செயற்­ப­டு வோம்.

இன்­டர்­போ­லுடன் தக­வல்­களைப் பரி­மா­றிக்­கொள்ளும் ஏற்­பா­டு­களும் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன. உள்­நாட்­ட­லு­வல்கள் அமைச்­சரும் பாது­காப்பு அமைச்­சரும் இணைந்து நாட்டின் எல்­லைக்குள் உட்­பி­ர­வே­சித்தல் மற்றும் வெளி­யேறல், பொருட்­களை கொண்டு வருதல் போன்றவற்றை அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட திட்­டங்­க­ளின்­படி நடை­மு­றைப்­ப­டுத்­து­கி­றார்கள். தற்­போது அதன் முன்­னேற்ற அறிக்­கைகள் பெற்றுக் கொள்­ளப்­பட்­டுள்­ளன.
சம்பந்தப்பட்ட தீவிரவாத அமைப்பைத் தடைசெய்வதற்காக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட் டுள்ளது. இலங்கைக்கு வெளியே இடம்பெறும் தீவிரவாத செயற்பாடுகள் மற்றும் வெளிநாடுகளில் தீவிரவாத நடவடிக் கைகளில் ஈடுபடும் இலங்கையர்கள் தொடர்பில் சட்டம் அமுல்படுத்த எமது சட்டத்தில் இடமில்லை. தண்டனைச் சட்டக்கோவை இலங்கைக்குள் நடைபெறும் குற்றங்களுக்கு மட்டுமே ஆன தாகும். 1979 இல் தீவிரவாதத்தை இல்லாமற் செய்வதற்கான சட்டம் இலங்கைக்குள் நடைபெறும் தீவிரவாத செயல்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாகும். தென் இந்தியாவில் முகாம்களில் இருப்பவர்களும் பின்பு இந்த சட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள் ளார்கள்.
1974 ஆம் ஆண்டு இங்­கி­லாந்தின் சட்­டத்­துக்கு அமை­வாக இங்கு நாம் செயற்­பட்­டுள்ளோம். அன்று இந்­தச்­சட்டம் வட அயர்­லாந்தின் தீவி­ர­வா­தத்­துக்­காக மாத்­தி­ரமே நடை­மு­றையில் இருந்­தது. இந்த இடை­வெ­ளியை நிரப்­பு­வ­தற்­காக நாம் பயங்­க­ர­வாத சட்­ட­மூ­லத்­துக்கு விட­யங்கள் சில­வற்றை உள்­ள­டக்­கி­யுள்ளோம்.

இலங்­கையில் நடை­பெற்ற சம்­ப­வங்கள் தொடர்பில் சந்­தேக நபர்கள் இந்தக் குற்­றங்­களைச் செய்­வ­தற்கு முன்பு அவர்­க­ளுக்கு எதி­ராக சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு தடைகள் ஏற்­பட்­டி­ருந்தால் அது புதிய சட்­டத்தை அங்­கீ­க­ரித்துக் கொள்ள முடி­யாமல் போனதே கார­ண­மாகும். இந்தச் சட்­ட­மூ­லத்தை 2018 ஆம் ஆண்டு நாம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்தோம். தற்­போது இந்தச் சட்­ட­மூலம் பாரா­ளு­மன்றில் சம்­பந்­தப்­பட்ட குழுவில் முடங்­கிப்­போ­யுள்­ளது. இந்தக் குழு­வினர் என்ன செய்­கி­றார்கள். உட­ன­டி­யாக இந்தச் சட்­டத்தை பாரா­ளு­மன்­றத்தில் அங்­கீ­க­ரிக்க ஏற்­பாடு செய்­வ­தற்கு கவ­னம்­எ­டுப்பேன்.

இந்தச் சட்­டத்தை தாம­தப்­ப­டுத்­தி­யதன் மூலம் தீவி­ர­வா­தி­களை சட்­டத்­தின்முன் நிறுத்­து­வ­தற்­கான சந்­தர்ப்பம் இல்­லாமற் போயுள்­ளது. இப்­போ­தா­வது நாங்கள் உட­ன­டி­யாக செயலில் இறங்­க­வேண்டும்.

இதே போன்று நாங்கள் மேலும் பல புதிய சட்­டங்­களைக் கொண்டு வர­வுள்ளோம். இந்த ஜிஹாத் அமைப்பை உட­ன­டி­யாக இல்­லாமற் செய்­து­விட வேண்டும். இந்த அமைப்பு கிறிஸ்­தவ சம­யத்­துக்கு மாத்­திரம் அல்ல எமது கலா­சா­ரத்­துக்கு அமைய முஸ்லிம் சம­யத்தை பின்­பற்­று­ப­வர்­க­ளுக்கும் பிரச்­சி­னை­களை உரு­வாக்­கி­யுள்­ளது. புத்தர் சிலை­களை உடைக்க ஆரம்­பித்­தார்கள். இந்து கோவில்­க­ளுக்கும் பிரச்­சி­னைகள் ஏற்­பட்­டன.

அவர்கள் அடிப்­ப­டை­வா­திகள் என தெளி­வாகக் கூற­மு­டியும். அவர்கள் எந்த சம­யத்­தையும் சேர்ந்த பிரி­வி­னரும் அல்லர். அதனால் இந்த அடிப்­ப­டை­வா­தத்தை இல்­லாமற் செய்­வ­தற்கு நாங்கள் நட­வ­டிக்­கைகள் எடுப்போம்.
பெரும்­பா­லானோர் தற்­போது கைது செய்­யப்­பட்­டுள்­ளார்கள். இயல்பு நிலைக்குத் திரும்பும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. இது தொடர்பில் முப்படையினரும் பொலிஸும் மக்களுக்கு அறிவிப்பார்கள். நாம் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு ஒத்துழைப்போம்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.