ஈஸ்ட்டர் தாக்குதலும் முஸ்லிம் சமூகத்தின் பொறுப்புக் கூறலும்

0 974

நஜீப் பின் கபூர்

இன்று உலகில் வாழ்­கின்ற பெரும்­பான்­மை­யான மக்கள் பின்­பற்­று­கின்ற சம­யங்கள் கிறிஸ்­த­வமும் இஸ்­லாமும். இவை இரண்­டிற்­கு­மி­டையில் மிகவும் நெருக்­க­மான அண்ணன் தம்பி உற­வுகள் போல் வணக்க வழி­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன.

வர­லாற்றுக் கதை­க­ளி­லுள்ள நிகழ்­வு­களை நாம் பார்க்­கின்ற போது மத்­திய கிழக்கில் கிறிஸ்­­த­வர்­க­ளுக்கும் அரே­பி­ய­ருக்­கு­மி­டையே கலாச்­சார ரீதி­யி­லான வேறு­பா­டுகள் தெரி­வ­தில்லை. மேலும் கிறிஸ்­த­வமும் இஸ்­லாமும் ஒரு பிர­தே­சத்தில் அல்­லது மண்­ணிலே பிறப்­பெ­டுத்­தவை.

கிறிஸ்­த­வர்கள் யேசு நாதர் என்று சொல்­கின்ற அதே மனி­தனை முஸ்­லிம்கள் ஈசா நபி என்று அழைக்­கின்­றார்கள். அவ­ரது தாயை கிறிஸ்­த­வர்கள் மரியா என்றும் இஸ்­லா­மி­யர்கள் மர்யம் என்றும் அழை­கின்­றார்கள். இந்த விவ­கா­ரங்கள் அனை­வரும் தெரிந்து வைத்­தி­ருப்­ப­வையே.

உற­வுகள் நகமும் சதை­யும்போல் இருந்­தாலும் அவ்­வு­ற­வு­க­ளுக்­கி­டையே கருத்து மோதல்கள் முரண்­பா­டுகள் என்று வரு­கின்ற போது மோதல்கள் வரு­வது இயல்­பா­னதே. என்­றாலும் கடந்த ஞாயிறு யேசு உயிர்த்த நாள் என்ற கிறிஸ்­த­வர்­களின் சமய போத­னையில் நமது நாட்டில் நடந்த தாக்­கு­த­லுக்கு எந்த கார­ணங்கள் நியா­யங்கள் இருக்­கின்­றது என்று பார்த்தால் அணு­வ­ள­வேனும் அதற்கு எந்த ஒரு நியா­யத்­தையும் சுட்டிக் காட்ட முடி­யாது.

இலங்கை வர­லாற்றில் மட்­டு­மல்ல உலக வர­லாற்­றிலும் அப்­பாவி மக்கள் மீது ஒரு சமய நிகழ்வில் இப்­ப­டிப்­பட்ட தாக்­குதல் ஒரே நேரத்தில் நடந்­தி­ருப்­பதும் அதில் இந்த அளவு அதி­க­மான உயிர்கள் பலி­யா­னதும் இது முதல் தட­வை­யாக இருக்கக் கூடும் என்று எண்­ணத்­தோன்­று­கின்­றது.

நாம் அறிந்­த­வ­ரையில் இந்த நாட்டில் வாழ்­கின்ற முஸ்லிம் சமூ­கத்­தி­ன­ருக்கும் கிறிஸ்­த­வர்­க­ளுக்­கு­மி­டையே எந்த ஒரு சிறிய முரண்­பா­டு­களும் இருந்­த­தாகத் தெரி­ய­வில்லை. இந்த நாட்டில் வாழ்­கின்ற கிறிஸ்­த­வ சம­யத்­தினர் பொது­வாக ஏனைய சமூ­கத்­தி­ன­ருடன் மிகவும் நேச­மான உற­வு­க­ளையே பேணி வரு­வ­துடன் அவர்­க­ளுடன் அன்னி­யோ­னி­ய­மா­கவே நடந்து வந்­தி­ருக்­கின்­றார்கள்.
எமது அறி­வுக்கும் ஆய்­வு­க­ளுக்கும் எட்­டிய வகையில் இது சர்­வ­தேச நிகழ்ச்சி நிர­லுக்கு அமை­வாக நடந்த ஒரு தாக்­குதல் என்று புரிந்துகொள்ள முடி­கின்­றது.
நட்­சத்­திர ஹோட்­டல்­க­ளையும் இணைத்து இத்­தாக்­கு­தலை நடாத்தி இருப்­பதால் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை சீர­ழிக்­கின்ற நோக்­கமும் இதில் அடங்கி இருக்­கின்­றது என்­பது தெளி­வாகத் தெரி­கின்­றது.

மூளைச்­ச­லவை செய்­யப்­பட்­ட­வர்கள் இந்தத் தாக்­கு­தலை நடாத்தி இருந்­தாலும் இதன் பின்­ன­ணயில் மிகவும் பயங்­கா­ர­மான ஒரு நிகழ்ச்சி நிரல் செயல்­பாடு இருக்­கின்­றது என்­ப­தனை நாடும் பாது­காப்புத் தரப்­பி­னரும் புரிந்து கொள்ள வேண்டும்.

போர் காலத்தில் கூட புலிகள் உல்­லாசப் பிர­யா­ணி­களை இலக்கு வைத்து எந்தத் தாக்­கு­தல்­க­ளையும் நடத்­தி­ய­தில்லை. அவர்கள் சர்­வ­தேச ஆத­ரவை எதிர்­பார்த்­ததால் அப்­ப­டி­யான தாக்­கு­தல்­களை தவிர்த்து வந்­தார்கள்.
சொல்­லப்­ப­டு­வது போல் இந்த நாட்டு முஸ்­லிம்­கள்தான் இதனை நடாத்தி இருக்­கின்­றார்கள் என்றால் அவர்­க­ளுக்கு இப்­படி ஒரு தாக்­கு­தலை நடாத்­து­வ­தற்குத் தேவை­யான தொழி­நுட்ப அறிவு நிச்­சயம் வெளி­யி­லி­ருந்து கிடைத்­தி­ருக்க வேண்டும். அல்­லது அதற்­கான பயிற்­சி­களை அவர்கள் வெளி­யி­லி­ருந்தே பெற்­றி­ருக்க வேண்டும்.

உள்­நாட்டில் கிறிஸ்­த­வர்­க­ளுக்கு எதி­ராக இப்­படி ஒரு தாக்­கு­தலை நடத்த என்ன தேவை ஏற்­பட்­டது? அதன் பின்­னணி என்ன என்று கேள்வி எழுப்­பினால் அதற்குத் தெளி­வான எந்த ஒரு பதி­லையும் கண்­டு­கொள்ள முடி­யாது! எனவே இது முற்­றிலும் சர்­வ­தேச நிழ்ச்சி நிர­லுக்கு அமை­வாக நன்கு திட்­ட­மிட்டு நடாத்­தப்­பட்ட ஒரு கொடூரத் தாக்­குதல் என்­பது எமது பார்வை.

இதனை இன்னும் தெளி­வான வார்த்­தை­களில் சொல்­வ­தாக இருந்தால் உலகில் பல இடங்­களில் கிறிஸ்­த­வர்­க­ளுக்கு எதி­ரான இப்­ப­டி­யான தாக்­கு­தல்கள் பல நாடு­களில் இதற்கு முன்னர் இஸ்­லாத்தின் பெயரால் நடந்­தி­ருப்­பதைப் பார்க்க முடி­கின்­றது. இவ்­வா­றான தாக்­கு­தல்­களின் பின்­ன­ணியில் ஐஎஸ்­ஐஎஸ் என்ற அமைப்பு அல்­லது பிராந்­திய ரீதியில் அந்தக் கொள்­கை­களைப் பின்­பற்­று­கின்ற அமைப்­புக்கள் தமக்­கென வைத்துக் கொண்­டி­ருக்­கின்ற பெயர்­களில் நடாத்தி வந்­தி­ருக்­கின்­றன.

இப்­படிச் சொல்­வ­தற்­காக அதி­லி­ருந்து இந்த நாட்டில் வாழ்­கின்ற முஸ்லிம் சமூகம் இந்த படு­கொலைத் தாக்­கு­த­லுக்குப் பொறுப்புக் கூறு­வ­தி­லி­ருந்து தப்­பித்துக் கொள்ள அதனை ஒரு நியா­ய­மாக எடுத்துக் கொள்­ளவும் முடி­யாது என்­பதும் எமது கருத்து.

மத சித்­தாந்த ரீதியில் மூளைச்­ச­லவை செய்­யப்­பட்ட ஒரு கூட்­டத்­தி­னரே இப்­ப­டி­யான தாக்­கு­தல்­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றார்கள். அவர்­க­ளுக்கு நாம் ஏன் இப்­படி ஒரு தாக்­குதல் நடாத்­துக்­கின்றேம் என்­பதே தெரி­யாது. எங்கோ ஓரி­டத்­தி­லி­ருந்து எவரோ இவர்­களை இயக்­கு­கின்­றார்கள். தாம் ஒரு புனிதப் பணி புரி­வ­தாக எண்ணிக் கொண்டே இப்­ப­டிப்­பட்ட படு­கொ­லை­களை இவர்கள் புரிந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். என­வேதான் இவர்­களை நாம் மூளைச்­ச­லவை செய்­யப்­பட்­ட­வர்கள் என்று அடை­யா­ளப்­ப­டுத்­துகின் ­றோம்.
சிரியா, ஈராக் போன்ற நாடு­களில் சில காலத்­துக்கு முன்னர் இந்த இயக்கம் செல்­வாக்­குடன் இருந்த நேரத்தில் அங்கு அந்த அரசு உரு­வாக்கி இருக்­கின்ற மண்ணில் வாழ்­வது பெரும் பாக்­கியம் என்று நமது நாட்டில் ஒரு சட்­டத்­த­ர­ணியின் மகன் பச்சைக் குழந்­தைகள் தாய் தந்­தை­யுடன் தங்கள் குடும்­பங்­க­ளையும் அங்கு அழைத்துச் சென்­றதும், அவர் அங்கு நடந்த போரில் குண்­ட­டி­பட்­டதால் அவர்­பற்­றிய கதை முதன் முத­லாக ஊட­கங்­களில் சொல்­லப்­பட்­டது. அதற்குப் பின்­னர்தான் இலங்­கை­யிலும் ஒரு சிலர் இந்த ஐஎஸ் அமைப்பில் இருந்­தது வெளிச்­சத்­துக்கு வந்­தது.

பிராந்­திய அர­சியல் கார­ணங்­க­ளுக்­காக அமெ­ரிக்கா இந்த இயக்­கங்­க­ளுக்கு ஆத­ர­வையும் ஒத்­து­ழைப்­பையும் அவ்­வப்­போது வழங்கி தொட்­டி­லையும் ஆட்டி பிள்­ளை­யையும் கிள்ளி வந்­தி­ருந்­தது. இவர்­களின் பிர­தான இலக்­காக ஈரானும் ஷியாக்­களும் என்­றி­ருந்­தது. உலக ரீதியில் முஸ்லிம் (பாகிஸ்தான், ஆப்­கா­னிஸ்தான், இந்தோனேசியா மத்­திய கிழக்கு ஆபி­ரிக்க) நாடு­களில் பள்­ளி­வா­யில்­களில் வெடிக்­கின்ற குண்டுத் தாக்கு­தல்­களில் பல­நூறு பேர் தினந்­தோறும் கொல்­லப்­ப­டு­வ­தற்கு பின்­ன­ணியில் இவர்­க­ளு­டைய செயல்­பா­டு­களே காணப்­ப­டுக்­கின்­றன.

சில காலத்­துக்கு முன்னர் இந்­தோ­னே­சி­யாவில் பாலித் தீவில் இதே போன்ற ஒரு தாக்­கு­தலை அவர்கள் நடாத்தி இருந்­தார்கள் அதில் அன்று 200 பேர்­வரை கொல்­லப்­பட்­டி­ருந்­தனர்.

இன்று அவர்கள் அமைத்­தி­ருந்த அரசு அந்தப் (சிரியா) பிராந்­தி­யத்தில் தோற்­க­டிக்­கப்­பட்­ட­தால்-­வி­ரட்­டப்­பட்­டதால் இவர்கள் அங்­கி­ருந்து தப்பி உலகம் பூரா­விலும் சிதறி தமது செயல்­பா­டு­களில் தற்­போது ஈடு­பட்டு வரு­கின்­றார்கள். என்­பது எமது கருத்து.

நாம் இன்னும் பல­மாக இருக்­கத்தான் செய்­கின்றோம் என்­ப­தனைக் காட்ட உலகில் ஏதோ ஒரு இடத்தில் இப்­படித் தாக்­கு­தல்­களை நடத்தி அவர்கள் பலத்­தையும் இருப்­பையும் காட்­சிப்­ப­டுத்த முனை­கின்­றார்கள்.

மிக அண்­மையில் பௌத்த இந்து சிலைகள் உடைத்­தது தொடர்­பிலும் பின்னர் புத்­தளம் வனாத்­த­வில்­லுவில் பயிற்சி முகாம்­களை வைத்­தி­ருந்­தார்கள் என்றும் சிலர் கைது செய்­யப்­பட்ட பின்­ன­ணியில் முஸ்­லிம்­க­ளிலும் ஏதோ சிலர் வித்­தி­யா­ச­மாக செய­ற்ப­டு­கின்­றார்கள் என்­பது அர­சுக்கு உறு­தி­யாகத் தெரி­ய­வந்­தது. என்­றாலும் இந்தக் குழு இவ்­வ­ளவு தூரம் பயங்­க­ர­மா­னது என்று அரசு ஒரு­போதும் கரு­த­வில்லை.

இந்தத் தாக்­குதல் தொடர்­பாக முன்­கூட்டி வந்த செய்­தி­களை அவர்கள் சிறு பிள்ளை செய்­கின்ற வேளாண்மை என்ற நிலையில் வேடிக்கை பார்த்­தி­ருக்­கின்­றார்கள் என்று தெரி­கின்­றது. இப்­போது இது பற்றி ஊட­கங்கள் கேள்வி எழுப்­பு­கின்ற போது பொறுப்­பா­ன­வர்கள் பதில் கொடுக்க முடி­யாமல் தடு­மா­று­கின்­றார்கள். அர­சி­யல்­வா­திகள் ஜனா­தி­ப­தி­யையும் பிர­த­ம­ரையும் மாறி­மாறி விமர்­சித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

சர்­வ­தேச உள­வுத்­து­றை­யினர் கடந்த 4ஆம் திகதி இது தொடர்­பான தக­வல்­களைக் கொடுத்த போது உரிய இடங்­க­ளுக்கு ஏப்ரல் 9ஆம் திகதி இந்த தகவல் எத்­தி­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது என்ற தக­வலை ஊட­கங்­க­ளுக்குச் சொல்லி இருந்தார் அமைச்சர் ராஜித.

நாம் இந்தக் கட்­டுரை ஊடாக இந்தத் தாக்­குதல் பற்­றியோ அதில் நடந்த உயிர் இழப்­புகள் பற்­றியோ இழப்­புகள் பற்­றியோ ஆரா­யப்­போ­வ­தில்லை. இன்று இதன் பின்­ன­ணியில் முஸ்லிம் சமூகம் இருக்­கின்­றது என்று முழு நாடும் பேசு­கின்­றது. அதற்கு முஸ்லிம் சமூ­கத்­தி­லி­ருந்து இது­வரை தெளி­வான பதில்கள் கொடுக்­கப்­பட வில்லை அல்­லது கொடுக்கத் தெரி­யாமல் இருக்­கின்­றார்கள் என்­றுதான் தெரி­கின்­றது.

படு­கொ­லை­யா­ளிகள் யார்? அவர்கள் ஏன் இதனைச் செய்கின்றார்கள்.? அவர்­களின் பின்னால் இருப்­பது யார்? அவர்­க­ளது இலக்கு எது என்ற கேள்­வி­க­ளுக்கு இதன் பின்­பா­வது முஸ்லிம் சமூகம் பதில் கொடுக்க வேண்டும். அல்­லது ஆராய வேண்டி இருக்­கின்­றது.

நமது நாட்­டி­லுள்ள முஸ்லிம் சமூ­கத்­தினர் கடந்த சில தசாப்­தங்­களில் இருந்து சமய ரீதியில் குழுக்­க­ளாகப் பிரிந்து தமக்குள் சண்­டை­யிட்டுக் கொள்­வதும் பள்­ளி­வா­சல்­களில் மோதிக் கொள்­வதும் அது வைத்­தி­ய­சாலை, பொலிஸ் என்றும் உயிர்ப் பலி சென்­றி­ருந்­ததை நாம் அண்­மை­யி­லி­ருந்து பார்த்து வரு­கின்­றறோம்.

இதனை ஒரு தீவி­ர­வாத குழு அல்­லது அடிப்­படை வாதக் குழு செய்­தி­ருக்­கின்­றது என்று பிற ­ச­மூ­கத்­தினர் சொன்­னாலும், முஸ்லிம் சமூகம் அப்­படிச் சொல்லித் தப்­பித்துக் கொள்ள முடி­யாது. இலங்கை முஸ்­லிம்­களில் இருந்து அப்­படி ஒரு குழு தோற்றம் பெறு­வ­தற்­கான பின்­னணி என்ன என்­ப­தனைக் கண்­ட­றிய வேண்­டிய தேவை முஸ்லிம் சமூ­கத்­திற்கு இருக்­கின்­றது.
இத்­தாக்­கு­தலைத் தொடர்ந்து ஒரு பானைச் சோற்­றுக்கு ஒரு சோறு பதம் என்­பது போல அல்­லது ஒரு மூட்டைப் பூச்சி கடித்தால் அனைத்து மூட்டைப் பூச்­சி­களும் வேட்­டை­யா­டப்­ப­டு­வது போல்தான் ஒரு நிலை இன்று இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

இஸ்லாம் ஒரு காட்­டு­மி­ராண்டித் தன­மான மதம் என்ற பிரச்­சா­ரத்­திற்கு இத்­தாக்­குதல் மேலும் வலு சேர்த்­தி­ருக்­கின்­றது.
உள்­நாட்டில் முஸ்லிம் சமூ­கத்­தி­னர் போகும் வரும் இடங்­களில் எல்லாம் கடு­மை­யான விமர்­ச­னத்­திற்கு ஆளா­வார்கள். நாட்­டி­லுள்ள இஸ்­லா­மியக் கல்வி நிலை­யங்கள் மத்­ர­சாக்கள் எல்லாம் கடு­மை­யான சந்­தேகப் பார்­வைக்கு ஆளாகும்.

முஸ்­லிம்­களின் குறிப்­பாக முஸ்லிம் பெண்­களின் கலாச்­சார உடைகள் எல்லாம் சந்­தேகப் பார்­வைக்கும் அச்­சத்­துக்கும் இலக்­காகும். முஸ்லிம் சமூ­கத்­தினர் தொழில் செய்­யு­மி­டங்­களில் எல்லாம் சந்­தேகப் பார்வைக்கு ஆளாவர்கள்.

சந்தேகத்தின் பேரில் பலநூறு பேர்கள் கைது செய்யப்பட இடமிருக்கின்றது. இவர்கள் நடத்திய தாக்குதலில் பல முஸ்லிம்களும் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். ஒட்டு மொத்தத்தில் முஸ்லிம்களுக்கு அருகில் வருவதற்குக் கூட அந்நிய சமூகத்தினருக்கு ஒரு அச்ச உணர்வு ஏற்படும்.
எனவே இத்தாக்குதல்தாரிகள் இன்று ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினரையும் முடமாக்கிப் போட்டிருக்கின்றார்கள் என்பதனை சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். எனவே இது இஸ்லாத்தின் பேரால் நடத்தப்படுக்கின்ற தாக்குதலா இஸ்லாமிய விரோதிகளின் தேவைகளை நிறைவு செய்கின்ற நோக்கில் நடாத்தப்படுக்கின்ற தாக்குதலா என்று நமது சமூகம் சிந்திக்க வேண்டும்.

இது தொடர்பாக இன்னும் விசாரணைகள் உறுதியான முடிவுகளைச் சொல்லாவிட்டாலும் இன்று முஸ்லிம் சமூகம் கடும் விமர்சனத்திற்கும் அவமானத்திற்கும் ஆளாகி இருக்கின்றது.

இந்தப் படு­கொ­லை­க­ளுக்குப் பின்­னரும் கிறிஸ்­த­வ மதப்­போ­த­கர்கள் கடைப்­பித்த அணு­கு­முறை மிகவும் பாராட்­டத்­தக்­க­தா­கவும் அகிம்சைத் தன்மை கொண்­ட­தா­கவும் இருந்­ததை அவதானிக்க முடிந்தது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.