முஸ்லிம்கைளை குற்றவாளியாக்கும் சர்வதேச சதித்திட்டமா ?

1 1,292

ஏ.எஸ்.எம்.ஜாவித்

கடந்த ஞாயிற்றுக் கிழமை தலை நகர் கொழும்பு, நீர் கொழும்பு மற்றும் மட்­டக்­க­ளப்பு ஆகிய இடங்­களில் ஒரே நாளில் மூன்று கத்­தோ­லிக்க ஆல­யங்கள் உள்­ளிட்ட 8 இடங்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட மிலேச்­சத்­த­ன­மான குண்டுத் தாக்­கு­தல்கள் காரண­மாக சுமார் 320 பேர் இது­வரை உயி­ரி­ழந்­துள்­ள­துடன் 500 க்கும் மேற்­பட்­ட­வர்கள் படுகாய­ம­டைந்­துள்­ளனர். இந்தப் பயங்­க­ர­மா­னதும், மிகவும் வெறுக்­கத்­தக்­க­து­மான செயற்­பா­டுகள் முழு முஸ்லிம் சமு­கத்­தி­னையும் தலைகுனிய வைத்­துள்­ள­துடன் முஸ்­லிம்­களின் இருப்­புக்­க­ளுக்கும் பாது­காப்­புக்­க­ளுக்கும் சந்­தே­கங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன.

இஸ்லாம் ஒற்­றுமை, சகோ­த­ரத்­துவம், மற்­றைய சம­யங்­களை மதித்தல், அவற்றை கண்­ணி­யப்­ப­டுத்தல் உள்­ளிட்ட நல்ல பண்­பு­களை போதிப்­ப­துடன் வன்­மு­றைகள், கொலைகள், சதித்­திட்­டங்கள், பயங்­க­ர­வாத செயற்­பா­டுகள் உள்­ளிட்ட மனி­த­னுக்கு கேடு விளை­விக்கும் தீய செயற்­பா­டுகள், நட­வ­டிக்­கை­களை முற்­றா­கவே வெறுக்­கின்­­றது.

மேற்­படி தீய செயற்­பா­டு­க­ளுக்கு இஸ்­லாத்தில் கடு­க­ள­வேனும் இட­மில்லை. அல்­குர்­ஆனும், அல்-­ஹ­தீஸும் இத­னைத்தான் போதிக்­கின்­றன. எந்த ஒரு கட்­டத்­திலும் வன்­மு­றையில் இறங்க வேண்டாம் என இஸ்லாம் கூறு­கின்­றது. இவ்­வா­றான போத­னை­க­ளுக்கு மத்­தியில் மதத்தின் பெய­ராலும், சம­யத்தின் பெய­ராலும் ஒரு இஸ்­லா­மியன் மற்றை­ய­வரை தாக்­கு­வா­ராயின் அவ­ருக்கு இஸ்­லாத்தில் இட­மில்லை. அவர் இஸ்­லா­மி­யனும் இல்லை.

ஒரு சிலரின் கேவ­ல­மான சதி­நா­ச­கார செயற்­பா­டு­களால் இன்று இலங்கை வாழ் முஸ்­லிம்­களை அச்­சத்­திற்கு மட்­டு­மல்­லாது முற்று முழு­தா­கவே தலை­கு­னிய வேண்­டிய நிலை­மை­க­ளுக்கு உள்­ளாக்­கி யுள்ளது.

இஸ்லாம் எந்­த­வொரு கட்­டத்­திலும் வன்­முறை மூலம் இஸ்­லாத்தைப் பரப்­பவோ அல்­லது அதனை வளர்த்­தெ­டுக்­கவோ போதிக்க வில்லை. இவ்­வா­றான நிலையில் மதத்தின் பெய­ராலும், சம­யத்தின் பெய­ராலும் இஸ்­லாத்தை வளர்ப்­பதை அல்லாஹ் ஏற்றுக் கொள்­ள­மாட்டான். அவ்­வாறு குறு­கிய மன­நிலை உடை­ய­வர்கள் செயற்­ப­டு­வார்­க­ளானால் அதனை ஏற்றுக் கொள்ள முடி­யாது என்­ப­த­னையே இஸ்லாம் எடுத்­தி­யம்­பு­கின்­றது.

இந்த நவீன யுகத்தில் பல நாடு­களில் இஸ்­லாத்­திற்கு எதி­ரான செயற்­பா­டு­களே இடம் பெறு­கின்­றன. எந்த விதத்­தி­லா­வது இஸ்­லாத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று பல நாடுகள் நேர­டி­யா­கவும், மறை­மு­க­மா­கவும் செயற்­பட்டு வரு­கின்­றன. இவற்றில் ஒவ்­வொரு அங்­கங்­களும் இன்று இஸ்­லா­மிய நாடு­களில் அந்­நிய நாடு­களின் மறை­மு­க­மா­னதும், நேர­டி­யா­ன­து­மான சங்­க­மங்­க­ளுடன் இடம் பெற்று வரு­கின்­றன.

பல முஸ்லிம் நாடுகள் பயங்­க­ர­வாதம் என்ற போர்­வையில் இன்று முற்­றா­கவே அழிக்­கப்­பட்டு வல்­ல­ர­சு­களின் பிடிக்குள் சிக்­குண்டு அவர்­களின் நிகழ்ச்சி நிரல்­க­ளுக்குள் இயங்­கு­வ­துடன் இஸ்­லா­மிய வரை­ய­றை­களை மீறியும் சில விட­யங்கள் இடம் பெற்று வரு­கின்­றன.

இவ்­வா­றா­ன­தொரு அடுத்த கட்ட நகர்வே தற்­போது இலங்­கையில் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது என முஸ்­லிம்கள் கவ­லைப்­ப­டு­கின்­றனர். இஸ்­லா­மிய எதிர்ப்­பு­வாத சக்­திகள் பல நாடு­களில் பல­வாறு காணப்­ப­டு­கின்­றன. அவை பணத்­தினால் தமது காரி­யங்­களை கச்­சி­த­மாக முடித்துக் கொள்ள அதற்­கான முக­வர்­களை விலை கொடுத்து வாங்கி அவர்­களை பாது­காத்து தமது கைங்­க­ரி­யங்­க­ளுக்கும், கப­டத்­த­னங்­க­ளுக்கும் ஈடு­ப­டுத்தி வரு­கின்­றன எனலாம்.
கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இலங்­கையில் தேவா­ல­யங்­க­ளிலும், ஏனைய முக்­கிய இடங்­க­ளிலும் மேற்­கொள்­ளப்­பட்ட மிலேச்­சத்­த­ன­மான குண்­டுத்­தாக்­கு­தலும் ஏதோ ஒரு சர்­வ­தேச பின்­ன­ணியின் அடிப்­ப­டையில் நன்கு திட்­ட­மிட்டு ஒரு வலை­ய­மைப்பின் அடிப்­ப­டையில் இடம் பெற்­றுள்­ளது என்­பதே அனே­க­மா­ன­வர்­களின் கருத்­தாக உள்­ளது. சாதா­ரண ஒரு­வ­ராலோ அல்­லது ஒரு உள்­நாட்டுக் குழு­வாலோ இவ்­வா­றான நன்கு திட்­ட­மிட்ட தாக்­குதல் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தென்­பது கேள்­விக்­கு­றி­யான விட­யமே.

தாக்­குதல் மேற்­கொண்­ட­வர்கள் எந்த இன­மா­கவோ அல்­லது சம­ய­மா­கவோ இருந்­தாலும் பரவா­யில்லை. அவர்கள் செய்த படு­பா­தகச் செயற்­பா­டு­களின் கடு­மை­யான மன்­னிக்க முடி­யாத குற்­ற­வா­ளி­களே. இவர்கள் உட­னடி­யாக கண்­ட­றி­யப்­பட்டு அவர்­களின் பின்­ன­ணியில் இருப்­ப­வர்கள் யார்? இவர்கள் எதற்­காக இதனை மேற்­கொண்­டனர்? இவர்­களின் எதிர்­பார்ப்­புக்கள் என்ன? உள்­ளிட்ட சகல விட­யங்­களும் கண்­ட­றி­யப்­பட்டு மக்­க­ளுக்கு தெளிவு படுத்­தப்­பட வேண்டும். சில இஸ்ரேல் நாடுகள் இலங்கை விட­யத்தில் காட்டும் அக்­கறை முஸ்லிம் சமூ­கத்­திற்கு ஆபத்­தா­ன­தொரு விட­ய­மா­கவே காணப்­ப­டு­கின்­றது.

ஏற்­கெ­னவே இந்த நாடுகள் பல நாடு­களில் முஸ்­லிம்கள் விட­யத்தில் அதி­தீ­விரப் போக்­கு­களைக் காட்டி இஸ்­லாத்­திற்கு எதி­ரா­கவே செயற்­பட்டு வரு­கின்­றன. பல இலட்சக் கணக்­கான அப்­பாவி முஸ்­லிம்­களின் பலி­க­ளுக்கு இந்த நாடுகள் உடந்­தை­யா­கவும், கார­ண­மா­கவும் இருந்து வரு­கின்­றன என்­ப­த­னையும் இங்கு சுட்­டிக்­காட்ட வேண்­டி­யுள்­ளது.

பிள்­ளை­யையும் கிள்ளி தொட்­டி­லையும் ஆட்டும் நட­வ­டிக்­கைகள் வெளி­நா­டு­களால் திரை மறைவில் இடம் பெறு­கின்­றது என்­பது மட்டும் உண்மை. இந்­தி­யாவில் ஒரு­சில அமைப்­புக்கள் இஸ்­லாத்­திற்கு எதி­ராக தமது செயற்­பா­டு­களை தொட­ரா­கவே மேற்­கொண்டு வரு­கின்­றன. அவர்­களின் கையாட்கள் இந்த விட­யத்தில் ஏன் உள்­வாங்­கப்­பட்­டி­ருக்க மாட்­டார்கள் என முஸ்லிம் சமூகம் அர­சிடம் கேட்­கின்­றது.

பயங்­க­ர­வாதச் செயற்­பா­டுகள் யார் செய்­தாலும் குற்றம் குற்­றமே. அப்­பாவி மக்கள் மீது அநி­யா­ய­மான முறையில் மேற்­கொள்­ளப்­படும் எந்தத் தாக்­கு­தல்­க­ளையோ அல்­லது வன்­மு­றை­க­ளையோ ஏற்றுக் கொள்ள முடி­யாது. ஆனால் தாக்­கு­தலில் ஈடு­பட்­ட­வர்கள் அவர்­களின் பின்­ன­ணியில் இருப்­ப­வர்கள் விட­யத்தில் அதீத கவனஞ் செலுத்த வேண்­டி­யுள்­ளது.

இன்று இலங்கைச் சம்­ப­வத்தின் பின்­னணி இலங்கை வாழ் முஸ்­லிம்கள் மீது போடப்­பட்­டுள்­ளது. ஒரு­சிலர் முஸ்லிம் சமூ­கத்­திற்கு இழுக்கை ஏற்­ப­டுத்த மேற்­கொண்ட நாக­ரி­மற்ற செயற்­பாடு முஸ்லிம் சமூ­கத்தின் நன்­ம­திப்­புக்கும், இன ஒற்­று­மைக்கும் பங்­கத்தை ஏற்­ப­டுத்தி இஸ்­லாத்­திற்கு பாரிய இழுக்கை ஏற்­ப­டுத்தி விட்­டது என்­பது முஸ்லிம் சமூ­கத்­தினால் ஜீர­ணிக்க முடி­யாத ஒன்­றாக ஆகி­விட்­டது.

ஒரு­சில துரோ­கிகள் மேற்­கொண்ட மேற்­படி செயற்­பாட்­டிற்­காக ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமு­கத்­தி­னையும் இந்த விட­யத்தில் குற்றம் சாட்­டு­வது ஏற்றுக்கொள்ள முடியாத விட­ய­மாகும். ஒரு­சில இன­வாத அர­சியல்வாதி­களின் கருத்­துக்­களை முன்­வைத்து சமூக ஊட­கங்கள் உள்­ளிட்ட ஒரு­சில ஊட­கங்கள் வெளி­யிடும் செய்­திகள் முஸ்லிம் சமூ­கத்­தினை கவலை கொள்ளச் செய்­துள்­ளது.

நடை­பெற்ற சம்­ப­வங்கள் தொடர்­பாக அர­சாங்­கமும், பாது­காப்புத் துறை­யி­னரும் நட­வ­டிக்­கை­க­ளையும், விசா­ர­ணை­க­ளையும் மேற்­கொண்டு வரும் நிலையில் அவர்கள் தெரி­விக்­காத கருத்­துக்­களை வெளி­யி­டு­வது என்­பது தேவை­யற்ற பிரச்­சி­னை­க­ளுக்கும், வன்­மு­றை­க­ளுக்கும் வழி­வ­குக்­கலாம் என்­ப­தனை உணர்ந்து முந்திக் கொண்டு செய்­தி­களை வெளி­யி­டாது இருப்­பது நாட்டின் அமை­திக்கும், ஒற்­று­மைக்கும் ஏற்ற விட­ய­மாகும்.

சமயத் தலை­வர்கள் சகல மக்­க­ளையும் சட்­டத்தை மதித்து அமைதி காத்து அர­சாங்­கத்­திற்கும், பாது­காப்புத் தரப்­பி­ன­ருக்கும் உத­வு­மாறு வேண்­டுகோள் விடுத்­துள்­ளனர். நடை­பெற்ற சம்­ப­வங்கள் அர­சியல், சமய பின்­ன­ணி­களைக் கொண்­ட­தாக இருக்­கலாம். அல்­லது சர்­வ­தேச நாடு­களின் சதித்­திட்­டங்­க­ளாக இருக்­கலாம் இவ்­வாறு பல கோணங்­களில் மேற்­படி சம்­ப­வங்கள் தொடர்­பாக பேசப்­ப­டு­கின்­றன.

குறிப்பாக இவ்வாறான செயற்பாடுகளால் கத்தோலிக்க முஸ்லிம், பௌத்த – முஸ்லிம், தமிழ் – முஸ்லிம் பிரிவினைகளை ஏற்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளாக இருக்கலாம். அல்லது நாட்டின் அரசாங்கத்தை குழப்பவும் அரசியல் ரீதியாக மேற்கொண்ட விடயங்களாகவும் இருக்கலாம். குறிப்பாக தற்போது இலங்கையில் அரசியல் ரீதியான போட்டிகளும், சண்டைகளும் இடம் பெறுவதால் அவற்றின் ஒரு அங்கமாகவும் இந்த விடயங்கள் ஒரு சமூகத்தினை அடிப்படையாக வைத்து மேற் கொள்ளப்பட்டிருக்கலாம்.
எது எவ்வாறாக இருந்தாலும் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பாரதூரமானவை என்பதுடன் மானிட வர்க்கத்தினால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். பல அப்பாவி உயிர்களை பலியெடுத்த கயவர்களை கைது செய்து உடனடியாக தண்டனை வழங்கப்பட வேண்டும்.

எனவே பல்லின சமூகம் வாழும் இந்த நாட்டில் இவ்வாறான தீய குற்றவாளிகளை இனங்கண்டு கொள்வதற்கு அனைவரும் முன்வந்து அரசாங்கத்திற்கும், பாதுகாப்புத் தரப்பினருக்கும் உதவுவதே தற்போதைய தேவையாகும்.

vidivelli

1 Comment
  1. MOHAMED SABITH says

    its true

Leave A Reply

Your email address will not be published.