குரூ­ர­மான, மிலேச்­சத்­த­ன­மான தாக்­கு­தல்­களை ஸலாமா நிறு­வனம் வன்­மை­யாக கண்­டிக்­கின்­றது

0 488

கிறிஸ்த்து உயிர்த்த ஞாயிறு தினத்தை அனுஷ்­டித்துக் கொண்­டி­ருந்த கிறிஸ்­தவ மக்­க­ளையும் ஐந்து நட்­சத்­திர ஹோட்­டல்­க­ளையும் இலக்­காகக் கொண்டு நடாத்­தப்­பட்ட மனி­தா­பி­மா­ன­மற்ற கொடூர தாக்­கு­தல்கள் தொடர்­பாக எமது ஆழ்ந்த கவ­லையை தெரி­வித்துக் கொள்­வ­தோடு, குறித்த மிலேச்­சத்­த­ன­மான தாக்­கு­தல்­களை வன்­மை­யாக கண்­டிக்­கின்றோம் என ஸலாமா நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.

அதென் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எம்.எம். ஆஸாத் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
இத்­தாக்­கு­தல்­களில் நேர­டி­யாக சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளையும் இவ் ஈனச் செயல்­க­ளுக்குப் பின்னால் இருப்­ப­வர்கள் அனை­வ­ரையும் கைது செய்து நீதிக்கு முன் நிறுத்தி அதி­க­பட்ச தண்­ட­னை­களை வழங்க வேண்டும்.

இந்த துர­திஷ்­ட­மான நிகழ்வில் உயி­ரி­ழந்­த­வர்­களின் குடும்­பத்­தி­ன­ருக்கும், உடல் உள காயங்­க­ளுக்கும் தாக்­கங்­க­ளுக்கும் உட்­பட்ட அனை­வ­ருக்கும் எமது ஆழ்ந்த அனு­தா­பங்­களைத் தெரி­வித்துக் கொள்­வ­தோடு, அவர்­களின் விரை­வான சுகத்­திற்கும் பிரார்த்­தனை செய்­கின்றோம். அதேபோல் இந்த திட்­ட­மி­டப்­பட்ட கொடூரத் தாக்­கு­தல்­களின் பின்னால் இருக்கும் சக்­தி­களை சரி­யாக இனம்­கண்டு அவர்கள் தொடர்­பான உண்மைச் செய்­தி­களை மக்­க­ள­றியச் செய்ய வேண்டும்.

நமது இலங்­கையை மீண்டும் பின்­னோக்கித் தள்­ளு­கின்ற இவ்­வா­றான ஈனச் செயல்கள் இதன் பிறகு நடக்­காமல் பார்த்துக் கொள்­வது அரசின் பொறுப்­பாகும். அத்­துடன் பொது­மக்­களும் விழிப்­புடன் இருக்க வேண்­டிய தேவை­யுள்­ளது.

இந்த இக்­கட்­டான நிலையில் இருந்து இந்­நாட்டை மீட்­டெ­டுப்­ப­தற்­காக இலங்கை வாழ் அனைவரும் ஒன்றுபட்டு பரஸ்பர புரிந்துணர்வுடன் செயற்படுவது அவசியமென ஸலாமா அங்கத்தவர்களையும் நாட்டின் பொதுமக்களையும் வேண்டிக் கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.