புல்­மோட்­டையில் பொது­மக்­களின் காணி­களை அள­விட நட­வ­டிக்கை

0 615

திரு­கோ­ண­மலை மாவட்­டத்தின் புல்­மோட்டை பிர­தே­சத்தில் பொது­மக்­க­ளுக்கு சொந்­த­மான காணி­களை பௌத்த பிக்­குகள் தலை­மை­யி­லான குழு­வினர் நேற்­றைய தினம் நில அள­வீடு செய்­துள்­ள­தா­கவும், இது காணி­களை அப­க­ரிப்­ப­தற்­கான திட்­ட­மிட்ட முயற்சி எனவும் முன்னாள் மாகாண சபை உறுப்­பினர் ஆர்.எம். அன்வர் தெரி­வித்­துள்ளார்.

நேற்றுக் காலை 10.30 மணி­ய­ளவில் புல்­மோட்டை பகு­திக்குள் பிக்­குவின் தலை­மையில் நில அளவை அதி­கா­ரிகள் மற்றும் குச்­ச­வெளி பிர­தேச செய­லக காணி உத்­தி­யோ­கத்தர் உள்­ளிட்ட சிலர் குறித்த பகு­தி­களை இனம் கண்டு அறிக்கை சமர்­பிப்­ப­தற்­காக வருகை தந்­த­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளார்.
இக்­கா­ணி­களை சில மாதங்­க­ளுக்கு முன்­னரும் புனித பூமிக்­காக அள­விட முற்­பட்­ட­போது பொது பொது­மக்கள் எதிர்ப்புத் தெரி­வித்­த­தை­ய­டுத்து அம்­மு­யற்சி தடுத்து நிறுத்­தப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லை­யி­லேயே தற்­போது மீண்டும் பிக்­குகள் தலை­மையில் வரு­கை­தந்த அதி­கா­ரிகள் இக்­கா­ணி­களை அள­வி­டவும் அறிக்­கை­யி­டவும் முற்­பட்­டுள்­ளனர்.
புல்­மோட்டை பிர­தே­சத்­தி­லுள்ள பொது மக்­களின் காணி­களை உள்­ள­டக்­கி­யுள்ள சாந்­தி­புர விகாரை, கந்­த­சாமி மலை, தென்­னை­ம­ர­வாடி, நாக­லென விகாரை, அரி­சி­மலை, யான் ஓயா, அத்­த­னாசி, மிஹிந்து லேன், சப்த நாக பம்ப, மீ சத்­தர்ம பிதஹி ஆகிய 9 விகா­ரை­க­ளுக்­கான இடங்­களை அள­விட 2013 இல் உத்­த­ர­வி­டப்­பட்­ட­தா­கவும் எனினும் காணி­களை அள­வி­டாது நில அளவை திணைக்­களம் இழுத்­த­டிப்­ப­தா­கவும் புல்­மோட்டை பகு­தியைச் சேர்ந்த பௌத்த பிக்கு சில பெரும்­பான்மை இன பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் முறை­யிட்­டி­ருந்தார்.

இது தொடர்பில் பாரா­ளு­மன்ற விசேட குழுவின் கவ­னத்­திற்கு கொண்டு செல்­லப்­பட்­ட­தை­ய­டுத்து சபா­நா­யகர் இந் நட­வ­டிக்­கை­களை தொடர்ந்து மேற்­கொள்ள உத்­த­ர­விட்­ட­தா­கவும் இதற்­க­மை­யவே தற்­போது பிக்கு தலை­மையில் அதி­கா­ரிகள் வருகை தந்­துள்­ள­தா­கவும் ஆர்.எம். அன்வர் மேலும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இதற்­கி­டையில் இந்த விவ­காரம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்­கீமை தான் நேரில் சந்­தித்து முறை­யிட்­டுள்­ள­தா­கவும் அன்வர் மேலும் குறிப்­பிட்­டுள்ளார்.
”பௌத்த விகா­ரைக்­கான காணியை அள­வி­டு­வதில் எமக்கு ஆட்­சே­ப­னை­யில்லை. மாறாக பொது­மக்­களின் காணிகளை புனித பூமி என்ற போர்வையில் அளவிடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விடயத்தில் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சி பேதமின்றி செயற்பட வேண்டும்” என்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

-vidivelli

Leave A Reply

Your email address will not be published.