கருமலையூற்று பள்ளிவாசலை இராணுவத்திடமிருந்து மீட்க திட்டம்

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடவடிக்கை

0 675

ஏ.ஆர்.ஏ.பரீல்

இரா­ணு­வத்தின் கட்­டுப்­பாட்­டுக்குள் இருக்கும் உடைக்­கப்­பட்­டுள்ள கரு­ம­லை­யூற்று பள்­ளி­வா­ச­லையும், பள்­ளி­வாசல் காணி­யையும் இரா­ணு­வத்­தி­ட­மி­ருந்து மீட்­டெ­டுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் ஈடு­பட்­டுள்­ளது.

கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் மற்றும் பள்­ளி­வா­ச­லுக்குச் சொந்­த­மான 139 பேர்ச்சஸ் காணி தொடர்­பான விப­ரங்­க­ளையும் ஆவ­ணங்­க­ளையும் திரட்­டு­வ­தற்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் அதி­கா­ரி­யொ­ருவர் கரு­ம­லை­யூற்­றுக்கு விஜயம் செய்து பள்­ளி­வாசல் நிர்­வா­கி­களைச் சந்­தித்து உரிய தக­வல்­க­ளையும், ஆவ­ணங்­க­ளையும் பெற்­றுக்­கொண்டார். கரு­ம­லை­யூற்று பள்­ளி­வா­ச­லையும் காணி­யையும் விடு­விப்­ப­தற்­கு­ரிய அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகள் தொடர்பில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் எம்.ஆர்.எம்.மலிக்­கிடம் வின­வி­ய­போது அவர் பின்­வ­ரு­மாறு பதி­ல­ளித்தார். 2014 ஆம் ஆண்டு கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் இரா­ணு­வத்­தி­னரால் உடைக்­கப்­பட்­டதன் பின்பு பள்­ளி­வாசல் நிர்­வாகம் திணைக்­க­ளத்­துக்கு அறி­வித்­தி­ருந்­தது. இரா­ணு­வத்­துடன் பேச்­சு­வார்த்தை நடாத்தி வரு­வ­தா­கவும் அறி­வித்­தி­ருந்­தது. அதன் பிறகு எந்த நட­வ­டிக்­கையும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை.

திணைக்­களம் தற்­போது பள்­ளி­வாசல் மற்றும் பள்­ளி­வாசல் காணி தொடர்­பான விப­ரங்­களைத் திரட்­டி­யுள்­ளது. அந்தக் காணி சட்­ட­பூர்­வ­மான காணியா? இல்­லையேல் அரச காணியா? என்­பது பற்றி ஆரா­ய­வேண்­டி­யுள்­ளது. திரட்­டப்­பட்ட விப­ரங்கள் வக்பு சபைக்கு கைய­ளிக்­கப்­பட்டு ஆராய்ந்து தீர்­மானம் மேற்­கொள்­ளப்­படும். பள்­ளி­வா­ச­லையும், பள்­ளி­வாசல் காணி­யையும் மீட்­டெ­டுப்­ப­தற்­கான ஆரம்ப நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.
கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் நிர்­வாக சபையின் செய­லாளர் எம்.ஐ.ஜவா­ஹிரைத் தொடர்பு கொண்டு இவ்­வி­வ­காரம் தொடர்பில் வின­வி­ய­போது அவர் பின்­வ­ரு­மாறு விளக்­க­ம­ளித்தார். ‘பள்­ளி­வா­ச­லுக்கும், பள்­ளி­வாசல் காணி 139 பேர்ச்­ச­ஸுக்கும் ஆங்­கி­லேயர் ஆட்­சிக்­கா­லத்தில் விக்­டோ­ரியா எனும் உறுதி வழங்­கப்­பட்­டுள்­ளது. தொல்­பொருள் திணைக்­க­ளமும் பள்­ளி­வாசல் இருப்­பதை உறு­தி­செய்­துள்­ளது.

1923 ஆம் ஆண்டு 139 பேர்ச்சஸ் காணியும், பள்­ளி­வா­சலும் கசெட் பண்­ணப்­பட்­டுள்­ளது. மேலும் சியாரம் ஒன்றும் அதற்கு 20 பேர்ச்சஸ் காணியும் கசெட் பண்­ணப்­பட்­டுள்­ளது. இந்த ஆவ­ணங்கள் எம்­மிடம் உள்­ளன. இரா­ணு­வத்­தி­ட­மி­ருந்து பள்­ளி­வாசல் காணி­யையும் பள்­ளி­வா­ச­லையும் மீட்டுக் கொள்­வ­தற்கு பிர­தேச அர­சி­யல்­வா­திகள் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஆகி­யோரை நாடியும் இது­வரை எந்தப் பயனும் ஏற்­ப­ட­வில்லை. அத்­தோடு பாது­காப்பு அமைச்சின் தற்­போ­தைய செய­லா­ள­ரு­டனும் பேச்­சு­வார்த்தை நடாத்தியுள்ளோம். 400 வருடகாலம் பழைமை வாய்ந்த பள்ளிவாசலை இராணுவத்தினர் தகர்த்து விட்டார்கள். அவ்விடத்தில் மீண்டும் பள்ளிவாசலை நிர்மாணித்துக் கொள்வதற்கும், பள்ளிவாசல் காணியை மீட்டுக் கொள்வதற்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் முஸ்லிம் சமய விவகார அமைச்சும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்’ என்றார்.

-vidivelli

Leave A Reply

Your email address will not be published.