மையவாடி காணியிலிருந்து மதுபான நிலையத்தை அகற்றுக

கொழும்பில் ஆர்ப்பாட்டம் ; நடவடிக்கை எடுப்பதாக எம்.பி உறுதியளிப்பு

0 473

ஏ.ஆர்.ஏ.பரீல்

மாளி­கா­வத்தை மைய­வா­டிக்கு சொந்­த­மான காணியில் இயங்­கி­வரும் மது­பா­ன­சா­லையை அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்றி வேறு இடத்­துக்கு இட­மாற்­று­வ­தற்­கான சட்ட ரீதி­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தாகத் தெரி­வித்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.எம். மரிக்கார் அது தொடர்­பாக கொழும்பு பெரிய பள்­ளி­வா­ச­லி­ட­மி­ருந்து கடிதம் ஒன்­றி­னையும் கோரினார்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஜும்ஆ தொழு­கையின் பின்பு மாளி­கா­வத்தை மைய­வாடி காணியில் இயங்­கி­வரும் மது­பா­ன­சாலை, வாகன சேவை நிலையம், வர்த்­தக நிலை­யங்கள், நிறு­வ­னங்கள் என்­ப­வற்றை வெளி­யேற்­று­மாறு கோரி ஆர்ப்­பாட்­ட­மொன்று மைய­வா­டிக்கு முன்னால் நடை­பெற்­றது. முஸ்­லிம்­களின் உரி­மை­க­ளுக்­கான அமைப்பு இந்த ஆர்ப்­பாட்­டத்தை ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

ஆர்ப்­பாட்­டத்தில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.எம். மரிக்­காரும் கலந்து கொண்டு அங்கு கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

‘மாளி­கா­வத்தை மைய­வாடி காணியில் இயங்­கி­வரும் வர்த்­தக நிலை­யங்கள் மற்றும் நிறு­வ­னங்­க­ளுக்கு எதி­ராக தற்­போது நீதி­மன்றில் விசா­ர­ணையின் கீழ் உள்ள வழக்­கு­களைத் துரி­தப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தா­கவும் அவர் உறு­தி­ய­ளித்தார். ஆர்ப்­பாட்­டத்தில் சுமார் 150 பேர் கலந்து கொண்­டனர்.

மாளி­கா­வத்தை மைய­வாடிக் காணி கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலின் நிர்­வா­கத்தின் கீழேயே இருக்­கி­றது. அங்கு அமைந்­துள்ள வர்த்­தக நிலை­யங்கள், நிறு­வ­னங்கள் தொடர்ந்தும் மாத வாட­கை­யாக ஆயிரம், இரண்­டா­யிரம் ரூபாய்­க­ளையே வழங்கி வரு­வ­தா­கவும் ஒரு இலட்சம் ரூபாய் வாடகை வழங்க வேண்­டிய நிறு­வ­னங்கள் சில ஆயிரம் ரூபாய்­களே வழங்கி வருவதாகவும் முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் தலைவர் ஐ.என்.எம். மிப்லால் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீபும் கலந்து கொண்டார்.

-vidivelli

Leave A Reply

Your email address will not be published.