எல்லை நிர்ணய அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்குக

மஹிந்த தேசப்பிரிய பிரதமருக்கு கடிதம்

0 461

ஏ.ஆர்.ஏ. பரீல்

மாகா­ண­சபைத் தேர்­தலை நடத்­து­வ­தி­லுள்ள சிக்­கல்­களைத் தீர்ப்­ப­தற்­காக எல்லை நிர்­ணய மீளாய்வு அறிக்­கையை ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்­கு­மாறு எல்லை நிர்­ணய மீளாய்வுக் குழுவின் தலை­வ­ரான பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய கடிதம் மூலம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எல்லை நிர்­ணய மீளாய்வுக் குழு அறிக்­கையை ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளித்து ஜனா­தி­பதி அந்த அறிக்­கையை அர­சாங்க வர்த்­த­மா­னியில் பிர­சு­ரித்­ததன் பின்பு மாகா­ண­சபைத் தேர்­தலை நடத்­து­வ­தற்­குள்ள அனைத்துத் தடை­களும் நீக்­கப்­பட்­டு­வி­டு­மென தேர்­தல்கள் ஆணை­யாளர் பிர­த­ம­ருக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் மேலும் குறிப்­பிட்­டுள்ளார்.

எல்லை நிர்­ணய மீளாய்வு அறிக்­கையை ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிப்­பதன் மூலம் நாட்டின் ஜன­நா­யகம் பாது­காக்­கப்­ப­டு­மெ­னவும் மக்­களின் அடிப்­படை உரி­மையும் பாது­காக்­கப்­ப­டு­மெ­னவும் அந்தக் கடி­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

எல்லை நிர்­ணய மீளாய்­வுக்­கு­ழுவின் உறுப்­பினர் கலா­நிதி ஏ.எஸ்.எம். நௌபல் இது தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில்;
எல்லை நிர்­ணய மீளாய்வு அறிக்கை இன்னும் பூர­ணப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. குழு இது­வரை இரண்டு அமர்­வு­க­ளையே நடத்­தி­யுள்­ளது. முத­லா­வது அமர்வில் எல்லை நிர்­ணய மீளாய்வில் என்­னென்ன விட­யங்கள் கவ­னத்திற் கொள்­ளப்­பட வேண்­டு­மென ஆராய்ந்­தது. இரண்­டா­வது அமர்வில் கட்சித் தலை­வர்­களைச் சந்­தித்து ஆலோ­ச­னை­களைப் பெற்றுக் கொண்­டுள்­ளது.

எல்லை நிர்­ணய அறிக்கை 100 வீதம் பாரா­ளு­மன்­றத்­தினால் நிரா­க­ரிக்­கப்­பட்­ட­தாகும். எல்லை நிர்­ணய அறிக்­கையின் 133 ஆவது பக்­கத்தில் அவ் அறிக்­கையில் குறைகள் இருக்­கின்­றன என எல்லை நிர்­ணய ஆணைக்­கு­ழுவின் தலைவர் கே.தவ­லிங்கம் குறிப்­பிட்­டுள்ளார்.

அத்­தோடு எல்லை நிர்­ணய ஆணைக்­கு­ழுவின் அறிக்­கைக்கு எதி­ராக பல்­வேறு அமைப்­புகள் முறைப்­பா­டு­களை முன்­வைத்­துள்­ளன.
ஹரிஸ்­பத்­துவ தொகு­தியில் அக்­கு­றணை முஸ்லிம் பிர­தே­சத்துடன் சிங்­கள பாரம்­ப­ரிய கிரா­மங்கள் இணைக்­கப்­பட்­டுள்­ள­மைக்கு எதிர்ப்புத் தெரி­வித்து 43 பன்­ச­லைகள் இணைந்து முறைப்­பா­டு­களை முன்­வைத்­துள்­ளன. இந்­நி­லையில் சிறு­பான்மை சமூ­கத்­திற்கும் பாத­க­மாக அமைந்­துள்ள எல்லை நிர்­ணய அறிக்கை முறை­யாக மீளாய்வு செய்­யப்­ப­டாது வர்த்­த­மா­னியில் வெளி­யி­டு­வ­தென்­பது பாத­க­மா­கவே அமையும்.கே. தவ­லிங்கம் தலை­மை­யி­லான மாகா­ண­ச­பைகள் தேர்தல் தொகுதி எல்லை நிர்­ணய ஆணைக்­கு­ழுவின் அறிக்கை அங்­கீ­கா­ரத்­துக்­காக பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­ட­போது அது முழு­மை­யாகத் தோற்­க­டிக்­கப்­பட்­டது. விட­யத்­துக்குப் பொறுப்­பா­க­வி­ருந்த அமைச்சர் பைசர் முஸ்­த­பாவும் அதற்கு எதி­ரா­கவே வாக்­க­ளித்தார்.
இந்­நி­லை­யி­லேயே மாகா­ண­ச­பைகள் தேர்தல் சட்­டத்­துக்­க­மைய எல்லை நிர்­ணய மீளாய்வுக் குழு நியமிக்கப்பட்டு இரு மாத பதவிக்காலம் வழங்கப்பட்டது.

பிரதமர் இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.எனினும் மீளாய்வுக் குழு நியமிக்கப்பட்டு 7 மாதங்கள் கடந்துவிட்ட பின்பும் எல்லை நிர்ணய மீளாய்வுக் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் இதுவரை கையளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

-vidivelli

Leave A Reply

Your email address will not be published.