யாரையும் வீழ்த்துவதற்காக அ.இ.ம. காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் தடம்பதிக்கவில்லலை

கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்

0 698

அம்­பாறை மாவட்­டத்தில்  யாரையும் வீழ்த்த வேண்டும் என்­ப­தற்­காக அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்சி தடம் பதிக்­க­வில்லை. இம்­மா­வட்­டத்தில் உள்ள நமது மக்கள் பெற வேண்­டிய எத்­த­னையோ விட­யங்­களைப் பெறாமல் நிர்க்­க­தி­யாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். அவர்­களின் உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­கா­கவும், சமூக விடு­த­லை­யினைப் பெற்றுக் கொடுப்­ப­தற்­கா­கவும் எமது கட்சி இம்­மா­வட்­டத்­திற்கு வந்­ததே தவிர யாருக்கும் தீங்கு விளை­விப்­ப­தற்­காக எமது கட்சி  இங்கு வர­வில்லை. நாம் சமூ­கத்தின் நல­னுக்­காக செயற்­ப­டு­வ­தால்தான்  இன்று எத்­த­னையோ இடங்­களில் எனக்­கெ­தி­ராக கொடும்­பா­விகள் எரிக்­கின்­றார்கள் என அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்­சியின் தலை­வரும், அமைச்­ச­ரு­மான ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.

அக்­க­ரைப்­பற்று பிர­தேச செய­லகப் பிரிவின் கீழுள்ள வரு­மானம் குறைந்த குடும்­பங்­களைச் சேர்ந்த சுமார் 375 குடும்­பத்­த­வர்­க­ளுக்கு வாழ்­வா­தார உத­விகள் வழங்கும் நிகழ்வும் அக்­க­ரைப்­பற்று ஜம்­இய்­யத்துல் உலமா சபை கட்­டட நிர்­மாண நிதி­யு­த­விக்­கான அனு­ம­திப்­பத்­திரம் கைய­ளிக்கும் நிகழ்வும் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை அக்­க­ரைப்­பற்றில் இடம்­பெற்­றது. இந்­நி­கழ்வில் பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இதன்­போது தொடர்ந்தும் அவர் உரை­யாற்­று­கையில், நமது சமூ­கத்தின் நல­னுக்­காக துணிந்து நின்று செயற்­ப­டு­வ­தையும், சமூ­கத்தின் நன்­மைக்காய் குரல் கொடுப்­ப­தையும் விரும்­பாத சில சக்­திகள் எமக்­கெ­தி­ராக அம்­பு­களை எய்­வதை நாம் காண்­கின்றோம். அதன் அடிப்­ப­டை­யில்தான் பல நக­ரங்­க­ளிலே எனக்­கெ­தி­ராக கொடும்­பா­வி­களைச் செய்து எரித்­தி­ருக்­கின்­றார்கள். எனக்­கெ­தி­ராக இவ்­வாறு அம்­புகள் எய்­யப்­ப­டு­வது ஏன் என்­பதை நமது சமூ­கத்­த­வர்கள் நன்கு சிந்­திக்க வேண்டும்.

எமது கட்சி ஆரம்­பிக்­கப்­பட்ட மிக நீண்ட காலத்­திற்குப் பின்­னரே நாம் அம்­பாறை மாவட்­டத்தில் எமது கட்­சியின் செயற்­பாட்­டினை மேற்­கொள்ள முனைந்தோம்.

இந்த மாவட்­டத்தில் உள்ள மக்­களின் எத்­த­னையோ விட­யங்கள் தீர்க்­கப்­ப­டாமல் இழுத்­த­டிப்புச் செய்­யப்­ப­டு­கின்­றது, இம்­மா­வட்ட மக்­களின் காணிப் பிரச்­சி­னைகள் நீண்­ட­கா­ல­மாக தீர்க்­கப்­ப­டாமல் இருக்­கின்­றது, இம்­மா­வட்ட மக்­களின் எத்­த­னையோ பல அடிப்­படைப் பிரச்­சி­னைகள் முழு­மைப்­ப­டுத்­தப்­ப­டாமல் முடங்கிக் கிடக்­கி­றது என்­ப­தற்­கா­கவே இம்­மா­வட்­டத்தில் எமது கட்­சியின் செயற்­பா­டு­களை முடுக்கி விட்டோம்.

நமது மக்­களின் உரி­மை­களைப் பேசாமல் வாய்­மூ­டி­க­ளாக இருந்து கொண்டும், நமது மக்­க­ளுக்கு வேண்­டி­யதை இது­வரை எந்தப் போராட்­டத்தின் மூல­மா­க­வேனும் பெற்றுக் கொள்­ளாமல் மௌனி­க­ளா­கவும் சிலர் இருந்­த­த­னா­லேயே நாம் இம்­மா­வட்ட மக்­க­ளுக்­காக குரல் கொடுப்­ப­தற்கு ஆயத்­த­மானோம்.

நாம் எந்­த­வித அபி­வி­ருத்­தி­களைப் பற்­றியும் பேச­மாட்டோம். நமது உரி­மை­களை மட்­டுமே பேசுவோம் என்று வாய்ப்­பேச்­சுக்­களில் வீரர்­க­ளாக இருந்­த­வர்கள் எமது வரு­கைக்குப் பின்னர் யாருக்கு அபி­வி­ருத்தி வேண்டும்.

யாருக்கு பாதை வேண்டும், யாருக்கு வாழ்­வா­தாரம் வேண்டும் என சிந்­தித்து செயற்­படத் தொடங்­கி­யி­ருக்­கின்­றார்கள்.

அதற்குக் காரணம் எமது அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்­சியின் வேக­மான செயற்­பா­டுகள் என்­பதை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

வில்­பத்துப் பிரச்­சினை போன்று அம்­பாறை மாவட்­டத்தில் பல நூற்­றுக்­க­ணக்­கான பிரச்­சி­னைகள் உள்­ளன. வட்­ட­மடு காணிப் பிரச்­சினை என்றும், பொத்­துவில் காணிப்­பி­ரச்­சி­னைகள் என்றும், நுரைச்­சோலை வீட்டுத் திட்டப் பிரச்­சினை என்றும் எத்­த­னையோ பிரச்­சி­னை­களை அடுக்கிக் கொண்டே செல்­லலாம்.

அவ்­வா­றான பிரச்­சி­னைகள் இது­வரை ஏன் தீர்க்­கப்­ப­டாமல் உள்­ளன என்­பதை நாம் இன்னும் சிந்­திக்­காமல் இருப்­பதன் மர்­மம்தான் என்ன?

அம்பாறை மாவட்­டத்தில் நமது முஸ்லிம் சமூ­கத்­தினர் பெரும்­பான்­மை­யாக வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்றோம் என்று மார் தட்டிக் கொண்­டி­ருக்­கின்­றோமே இம்­மா­வட்­டத்தில் ஒரு முஸ்லிம் அர­சாங்க அதி­பரை நாம் நிய­மிக்க முடி­யாமல் இருக்கும் கையா­லா­காத்­த­னத்­தினைப் பற்­றியும் நமது அர­சியல் வீரம் பேசும் வாய்ப் பேச்­சா­ளர்­களைப் பற்­றியும் நாம் சிந்­திக்க வேண்­டாமா?

கிழக்கு மாகா­ணத்தில் உள்ள மூவின சமூ­கங்­களும் செறிந்து வாழும் விகி­தா­சா­ரத்­திற்கு ஏற்ப நமது தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்­கள இனத்­தினைச் சேர்ந்த ஒவ்­வொரு மாவட்­டத்­திற்கும் ஒவ்­வொரு இன அர­சாங்க அதி­பர்­களை நிய­மிக்க இந்த அர­சியல் உரிமைப் பேச்­சா­ளர்­களால் முடி­யாமல் போனது ஏன் என்று நாம் சிந்­தித்துப் பார்க்க வேண்­டாமா?

பத்து சத­வீ­த­மாக நமது முஸ்­லிம்கள் இந்த நாட்டில் வாழ்­கின்­றார்கள். 25 மாவட்­டங்கள் எமது நாட்டில் உள்­ளன. விகி­தா­சார அடிப்­ப­டையில் பார்த்தால் எமது சமூகத்தில் இருக்கும் மூவர் மாவட்ட அரசாங்க அதிபர்களாக நியமிக்கப்பட வேண்டும்.

இந்தப் போராட்டத்தின் ஒரு முயற்சியாக நான் வவுனியா மாவட்டத்திற்கு முஸ்லிம் இனத்தினைச் சேர்ந்த ஒருவரை அரசாங்க அதிபராக நியமித்திருக்கின்றேன் என்றார்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப், பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில், இஸ்ஹாக் உட்பட பல முக்கியஸ்தர்கள்  கலந்து கொண்டனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.