பள்ளிவாசல்களின் பாதுகாப்பை அரசு பொறுப்பேற்க வேண்டும்

0 622

முஸ்லிம் சமய விவ­கார அமைச்­சும், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும் இணைந்து நாட­ளா­விய ரீதியில் நட­மாடும் சேவை­களை நடாத்தி வரு­கின்­றன.

கண்டி மாவட்­டத்தின் உடு­நு­வர தொகு­தியில் முதன் முதல் ஆரம்­பிக்­கப்­பட்ட இச்­சேவை இரண்­டாவ­தாக கடந்த வாரம் அக்­கு­ற­ணையில் நடாத்­தப்­பட்­டது. மூன்றாம் கட்ட நட­மாடும் சேவை எதிர்­வரும் 20 ஆம் திகதி அநு­ரா­த­பு­ரத்தில் இடம்­பெ­ற­வுள்­ளது. அதற்­கான ஏற்­­பா­டு­களை முஸ்லிம் சம­ய ­வி­வ­கார அமைச்சும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும் முன்­னெ­டுத்­துள்­ளன.

இந்­ந­ட­மாடும் சேவை மூல­ம் பள்­ளி­வா­சல்கள், குர்ஆன் மத்­ர­ஸா­க்கள், அரபுக் கல்­லூ­ரி­களின் பதி­வுகள் இடம்­பெற்று வரு­கின்­றன. அத்­தோடு மௌலவிமார்­க­ளுக்­கான அடையாள அட்­டைகள் வழங்­கப்­ப­டு­கி­ன்­றன. மேலும் நட­மாடும் சேவையின் போது குடும்­பங்­க­ளுக்கான குடி­நீர்­வ­­ச­திகள், இல­வச கண் பரி­சோ­தனை என்­பனவும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வருகின்­றமை பாராட்­டத்­தக்­க­ன­வாகும்.

முஸ்லிம் சமய விவ­கார அமைச்­சும், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும் நேரடியாக மக்­களின் கால­டிக்கே சென்று அவர்­க­ளுக்­கா­ன சேவை­களை வழங்கி வரு­வது ஏனைய அமைச்­­சு­க­ளுக்கும் ஒரு முன் மாதி­ரி­யாகும். சமூகம் இந்­ந­ட­மாடும் சேவையின் உச்ச பய­னைப் பெற்­றுக்கொள்ள வேண்டும்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் முஸ்லிம் சமய விவ­காரம் கலா­சார அமைச்சின் கீழேயே இருந்­தது. அப்­போ­தைய பிர­தமர் ஜய­ரத்­னவே கலா­சார அமைச்­சுக்கும் பொறுப்­பாக இருந்தார். அக்­கா­லத்தில் பள்­ளி­வாசல் புதி­தாக நிர்­மா­­ணிக்கப்­ப­டு­வ­தற்கு கடு­மை­யான சட்­டங்கள் இருந்­தன. புதி­­தாக பள்­ளி­வாசல் நிர்­மா­ணிக்­கப்­ப­டு­வ­தற்கும் பதிவு செய்­யப்­ப­டு­வ­தற்கும் அரு­கி­லி­ருக்கும் பௌத்த விகா­ரை­களின் அனு­மதி பெற்றுக்கொள்­ளப்­பட வேண்­டி­யி­ருந்­தது. நல்­லாட்சி அரசு பத­விக்கு வந்­ததும் இந்த கடு­மை­யான நிபந்­த­னைகள் இல்­லாமற் செய்­யப்­பட்­டன.

இதன் கார­ண­மாக 2015 ஆம் ஆண்டின் பின்பு சுமார் 400 பள்­ளி­வா­சல்கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. பள்­ளி­வா­சல்­களை பதிவு செய்­வ­தற்­கான இறுக்­க­மான சட்­டங்­களைத் தளர்த்­தி­யுள்­ள­தாக அமைச்சர் ஹலீம் தெரி­வித்­துள்ளார். இது வர­வேற்­­கத்­தக்­க­தே, என்­றாலும் அமைச்சர் ஹலீம் பள்­ளி­வா­சல்­களைப் பதிவு செய்­வ­துடன் மாத்­திரம் நின்­று­வி­டக்­கூ­டாது.

இன்று அநேக பள்­ளி­வா­சல்­களின் வக்பு சொத்­துகள் பள்­ளி­வாசல் நிர்­வா­கி­க­ளினால் முறை­கே­டாக தங்கள் சுய­ந­லன்­க­ளுக்கு பயன்­ப­­டுத்­தப்­ப­டு­கின்­றன. இதனால் பள்­ளி­வா­சல்­க­ளுக்குக் கிடைக்க வேண்­டிய வரு­மா­னம் தனி நபர்­க­ளையே சென்­ற­டை­­கி­றது. முதலில் இது தடைசெய்­யப்­பட வேண்டும். பள்­ளி­வாசல் சொத்­­­து­க­ளான வக்பு சொத்­து­களின் வரு­மானம் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு உரிய வகையில் சென்­ற­டைந்தால் பள்­ளி­வா­சல்கள் தங்­க­ளது நிர்­வா­க செல­வு­க­ளுக்­காக ஜமா­அத்­தார்­களின் தயவில் தங்­கி­யி­ருக்க வேண்­டி­ய­தில்லை.

இதே­வேளை பல தசாப்­தங்­க­ளுக்கு முன்பு பதிவு செய்­யப்­பட்ட பள்­ளி­வாசல்களுக்குக் கூட பெரும்­பான்மை சமூ­கத்தினரால் அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்டு வரு­கின்­றமை எமக்கு பெரும் சவா­லாக அமைந்­து­ள்­ள­து. இதற்கு உதா­ர­ண­மாக தம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வா­சலைக் குறிப்­பி­டலாம்.

பதிவு செய்­யப்­பட்ட பள்­ளி­வா­சல்­களின் பாது­காப்­பினை அர­சாங்கம் பொறுப்­பே­ற்க வேண்டும். அதற்­கான கட்­ட­மைப்­பொன்­றினை அர­சாங்­கமே நிறுவ வேண்டும். பதிவு செய்­யப்­பட்ட பள்­ளி­வா­சல்­க­ளுக்கு எந்­தத்­­த­ரப்­பி­ன­ராலும் சவா­ல்கள் ஏற்­ப­டாத வண்ணம் பாது­காப்­பது அர­சாங்­கத்தின் பொறுப்­பாக அமைய வேண்டும்.

ஹஜ் சட்ட மூலம், வக்பு சட்­டத்தில் திருத்­தங்கள், முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்கள் என சமூக நலன் கரு­திய நடவ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் சந்­தர்ப்­பத்தில் பதி­வு­செய்­யப்­பட்ட பள்­ளி­வா­சல்­களின் பாது­காப்பு விட­யத்­திலும் அமைச்சர் ஹலீம் கரி­சனை செலுத்தவேண்டும் என்றே சமூகம் எதிர்­பார்க்­கி­றது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.