புத்தளம் அறுவாக்காடு குப்பை திட்டத்தை எதிர்ப்பவர்களின் பின்னணியில் அரசியல்வாதிகள்

அடிபணியமாட்டேன் என்கிறார் சம்பிக்க

0 625

புத்­தளம் அறு­வாக்­காடு பகு­தியில் நிறு­வப்­படும் கொழும்பு திண்­மக்­க­ழிவு முகா­மைத்­துவ திட்­டத்­துக்கு தெரி­விக்­கப்­படும் எதிர்ப்பின் பின்­ன­ணியில் அர­சி­யலே இருக்­கி­றது. தங்கள் அர­சியல் சுய­நலம் கரு­திய அர­சி­யல்­வா­திகள் இதன் பின்­ன­ணியில் இருக்­கி­றார்கள். அர­சியல் ரீதி­யான எதிர்ப்­புப்­போ­ராட்­டங்­க­ளுக்கு நான் அடி­ப­ணியப் போவ­தில்லை. அறு­வாக்­காடு குப்பைத் திட்டம் தொடர்­பாக ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் எதிர்க்­கட்சித் தலைவர் ஆராய்ந்து இறு­தித்­தீர்­மா­னத்தை மேற்­கொள்­ள­வேண்டும் என மாந­கரம் மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்­துள்ளார்.

அறு­வாக்­காடு குப்பைத் திட்டம் தொடர்பில் சிங்­கள ஊட­க­மொன்­றுக்கு வழங்­கி­யுள்ள நேர்­கா­ண­லி­லேயே அவர் இவ்­வாறு கூறி­யுள்ளார். அவர் தொடர்ந்தும் தெரி­வித்­துள்­ள­தா­வது;

தற்­போது அறு­வாக்­காடு குப்பை முகா­மைத்­துவத் திட்டம் நிர்­மா­ணிக்­கப்­பட்டு விட்­டது. மார்ச் 16 ஆம் திக­தி­யி­லி­ருந்து எவ­ருக்கும் குப்­பை­களை இங்கு கையளிக்க முடியும். குப்பைப் பிரச்­சினை எனதோ புத்­த­ளத்து மக்­க­ளி­னதோ அமைச்சர் ரிசாத் பதி­யு­தீ­னி­னதோ பிரச்­சினை அல்ல. இதுவோர் தேசிய பிரச்­சி­னை­யாகும். சூழ­லுக்கு பாதிப்­பற்ற வகை­யி­லேயே இங்கு குப்பை முகா­மைத்­துவம் செய்­யப்­ப­ட­வுள்­ளது. அந்த வகை­யி­லேயே இந்தத் திட்டம் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது என்­பதை உறு­தி­யாகக் கூறு­கிறேன்.

கொழும்பு மாந­க­ர­சபை உட்­பட ஏனைய உள்­ளூ­ராட்சி நிறு­வ­னங்கள் தங்­க­ளது குப்­பை­க­ளுக்கு என்ன செய்­வது என்­பதை அவர்கள் தீர்­மா­னிக்க வேண்டும். ஏனை­ய­வர்­களின் குப்­பை­களைச் சுமப்­ப­தற்கு நாங்கள் தயா­ராக இல்லை. அவர்கள் குப்பை முகா­மைத்­துவம் செய்­யாது உறங்­கிக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். அத்­தோடு அறு­வாக்­காடு குப்பைத் திட்­டத்­துக்கு எதி­ரான ஆர்ப்­பாட்­டங்­க­ளுக்கு மறை­மு­க­மாக உத­விக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். கொழும்பில் நடை­பெற்ற எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­க­ளுக்கு மாளி­கா­வத்­தை­யி­லுள்ள மக்கள் அழைத்­து­வ­ரப்­பட்டு ஈடு­ப­டுத்­தப்­பட்­டார்கள்.

சூழ­லி­ய­லா­ளர்­களின் ஆய்­வுக்­குப்­பின்பே குப்பை முகா­மைத்­துவத் திட்­டத்­துக்கு நாம் அறு­வாக்­காட்டை தேர்ந்­தெ­டுத்தோம். நாட்­டி­லுள்ள உயர்­நி­லை­யி­லுள்ள 16 சூழ­லி­ய­லா­ளர்­களே இந்த இடத்தைத் தெரிவு செய்­தார்கள். நாம் இரு ஆய்­வு­களை நடத்­தினோம். 17 விழிப்­பு­ணர்வு நிகழ்­வு­களை நடத்­தினோம். குப்பை முகா­மைத்­துவத் திட்டம் புத்­த­ளத்தில் இருப்­ப­தாக கிளீன் புத்­தளம் அமைப்பு தெரி­வித்­தாலும் புத்­த­ளத்­தி­லுள்ள 13 பிர­தேச சபை­களின் கீழ் குப்பை முகா­மைத்­து­வத்­திட்டம் இல்லை.

கொழும்பு பகு­தி­யி­லி­ருந்து குப்­பை­களை எடுத்­துச்­செல்­வ­தற்கு எதிர்­வரும் டிசம்பர் மாதத்­தி­லி­ருந்து புகை­யி­ர­தமும் தயார் நிலையில் இருக்கும். இதை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதா இல்­லையா? என்­பதை ஜனா­தி­பதி, பிர­தமர் ஆராய்ந்து தீர்­மா­னிக்க வேண்டும். நான் எனது கட­மையைச் செய்து விட்டேன். அடிப்­ப­டை­வாத அரசியல் அச்சுறுத்தல்களுக்கு நான் அடிபணியப்போவதில்லை. எதிர்கால பரம்பரை மீது அக்கறையற்ற சுயநலவாத அரசியல்வாதிகள் தாம் விரும்பியவாறு செயற்படுவதற்கு இடமளிக்க முடியாது.

இன்று எவருக்கும் குப்பைகளை கையளிக்கக்கூடிய இடமொன்று நிர்மாணிக்கப் பட்டுள்ளமை குறித்து நாட்டு மக்கள் பெருமைப்படவேண்டும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.