தனியார் சட்ட திருத்த விவகாரம்: முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அக்கறையின்றி இருக்கிறார்கள்

வை.எம்.எம்.ஏ கவலை தெரிவிப்பு

0 485

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்­களைச் சிபா­ரிசு செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட குழுவின் தலைவர் முன்னாள் நீதி­ய­ரசர் சலீம் மர்சூப், நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ர­ள­விடம் கைய­ளித்த அறிக்­கையை ஆராய்ந்து இறு­தித்­தீர்­வுக்கு வரும்­படி அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் கோரிக்கை விடுத்தும் இது­வரை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அவ்­வி­வ­கா­ரத்தில் அக்­க­றை­யின்றி இருப்­ப­தாக தெரி­வித்­துள்ள வை.எம்.எம்.ஏ. அமைப்பு உட­ன­டி­யாக இது­பற்றி ஆராய்ந்து தீர்­வுக்கு வரும்­படி முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ர­ள­விடம் கைய­ளிக்­கப்­பட்ட அறிக்கை, குழு உறுப்­பி­னர்கள் அனை­வரும் ஓர் இணக்­கப்­பாட்டில் அல்­லாது முரண்­பட்ட வகையில் சிபா­ரி­சுகள் கைய­ளிக்­கப்­பட்­டி­ருப்­பதால் வை.எம்.எம்.ஏ. குழு உறுப்­பி­னர்­களைச் சந்­தித்து கலந்­து­ரை­யாடி இரு தரப்பும் ஏற்­றுக்­கொள்ளும் வகை­யி­லான சிபா­ரி­சுகள் அடங்­கிய அறிக்­கை­யொன்­றினை நீதி­ய­மைச்­சிடம் வை.எம்.எம்.ஏ. சமர்ப்­பித்­தி­ருப்ப தாகவும் வை.எம்.எம்.ஏ. யின் தேசிய பொதுச்­செ­ய­லாளர் சஹீட் எம். ரிஸ்மி ‘விடிவெ ள்ளி’ க்குத் தெரி­வித்தார்.

குழுவின் தலைவர் ஓய்­வு­பெற்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் மற்றும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா ஆகி­யோரை நேரில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யதன் பின்பே வை.எம்.எம்.ஏ. ஒரு நடு­நி­லை­யான அறிக்­கையைத் தயா­ரித்­த­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

10 வருட கால­மா­கியும் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்டத் திருத்­தங்கள் தொடர்ந்தும் இழு­பறி நிலையில் இருக்­கின்­றது. இது தொடர்பில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அக்­க­றை­யின்றி இருக்­கி­றார்கள். அதனால், அவர்­களை இது விட­யத்தில் விரைந்து செயற்­ப­டு­மாறு வை.எம்.எம்.ஏ கோரி­யுள்­ளது.

நீதி­ய­மைச்சர் இறு­தித்­தீர்­மானம் எடுக்கும் பொறுப்­பினை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கே வழங்­கி­யுள்ளார். அதனால் அவர்கள் தொடர்ந்தும் தாம­திக்கக் கூடாது என்றார்.

இதே­வேளை, முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்கு கால­தா­மதம் ஏற்­ப­டு­வ­தற்கு நான் கார­ண­மல்ல. முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களைச் சிபா­ரிசு செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட குழு அங்­கத்­த­வர்கள் தங்­க­ளுக்குள் முரண்­பட்­டுக்­கொண்டு இரு வேறான சிபா­ரி­சு­களை முன்­வைத்­தி­ருப்­பதே தாம­தத்­திற்குக் கார­ண­மாகும் என்று நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ரள பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றும்­போது குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் முஸ்லிம் சமய விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பான அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீ­மிடம் வின­வி­ய­போது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்ட திருத்த சிபாரிசுகள் குறித்து ஆராய்ந்து தீர்மானம் மேற்கொள்ளும் பொறுப்பினை அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஏற்றிருக்கிறார். விரைவில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி இது தொடர்பில் ஆராய்வோம் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.