அவுஸ்­தி­ரே­லிய எதிர்க்­கட்சித் தலைவி துருக்­கிய சமூக பள்­ளி­வா­சல்­க­ளுக்கு விஜயம்

0 553

சிட்­னியில் வாழும் துருக்­கிய சமூ­கத்­தி­ன­ருக்குச் சொந்­த­மான பள்­ளி­வா­சல்­க­ளுக்கு அவுஸ்­தி­ரே­லிய எதிர்க்­கட்­சி­யான தொழிற்­கட்­சியின் பிரதித் தலைவி கடந்த வெள்­ளிக்­கி­ழமை விஜயம் செய்தார்.

இன்று நான் ரெட்பேர்ன் மற்றும் எர்ஸ்க்­கின்­வில்லே ஆகிய இடங்­க­ளி­லுள்ள பள்­ளி­வா­சல்­க­ளுக்கு விஜயம் செய்தேன். தலை­வர்­க­ளையும் சமூக உறுப்­பி­னர்­க­ளையும் சந்­தித்தேன். முஸ்லிம் சமூ­கத்­திற்கு ஆத­ர­வாக அனைத்து மதங்­களைச் சார்ந்­த­வர்­களும் ஒன்­றி­ணைந்து நிற்­கின்­றனர் என தனது டுவிட்டர் பதிவில் குறிப்­பிட்­டுள்ள எதிர்க்­கட்சித் தலைவி தன்யா பிலிப்­பசேக் வெறுப்­பு­ணர்­வுக்கு எதி­ராக அதனை வெற்றி கொள்­வ­தற்கு அன்­பையும் ஒற்­று­மை­யையும் உறு­திப்­ப­டுத்­துவோம் எனவும் தெரி­வித்­துள்ளார்.

துருக்­கிய சமய விவ­கார நிறை­வேற்று சபையின் கீழ் பரா­ம­ரிக்­கப்­படும் சிட்­னி­யி­லுள்ள இரண்­டா­வது பழைய பெரிய பள்­ளி­வா­ச­லான ரெட்பேர்ன் பள்­ளி­வா­ச­லுக்கு தன்யா பிலிப்­பசேக் விஜயம் செய்­த­போது அவுஸ்­தி­ரே­லிய துருக்­கிய ஆத­ரவுக் கூட்­ட­மைப்பின் பணிப்­பா­ள­ரான ஹாகென் எவ­சேக்கும் இணைந்­து­கொண்டார். இதன்­போது எதிர்க்­கட்சித் தலைவி, ரெட்பேர்ன் இஸ்­லா­மிய சமூ­கத்தின் தலைவர் அஹ்மெட் சோலக்­கையும் அவர் சந்­தித்தார்.

தன்யா பிலிப்­பசேக் அவுஸ்­தி­ரே­லி­யாவின் கல்வி மற்றும் பயிற்சி நிழல் அமைச்­ச­ரா­கவும், அதே­போன்று பெண்­க­ளுக்­கான நிழல் அமைச்­ச­ரா­கவும் செயற்­ப­டு­கின்றார்.

நியூ­சி­லாந்தில் கடந்த வார பயங்­க­ர­வாதத் தாக்­கு­தலில் குறைந்தது 50 பேர் உயி­ரி­ழந்த நிலையில், பள்­ளி­வா­சல்­களின் பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை அதி­க­ரிக்க அர­சாங்கம் அதி­யுச்ச ஆத­ரவை வழங்க வேண்டும் என தன்யா பிலிப்­பசேக் தெரி­வித்தார்.

அடை­யாளம் காணப்­பட்ட பயங்­க­ர­வாதி அவுஸ்­தி­ரே­லி­யாவில் பிறந்­த­வ­ராவார். இவர் கிரைஸ்ட்­சேர்ச்சில் இரு பள்­ளி­வா­சல்­களில் மேற்­கொண்ட தாக்­கு­தலில் நான்கு சிறு­வர்கள் உட்­பட வெள்­ளிக்­கி­ழமை தொழு­கையில் ஈடு­பட்­டி­ருந்த குறைந்து ஐம்­பது பேர் கொல்­லப்­பட்­டனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.