இந்­தி­யாவில் முஸ்லிம் குடும்­பத்தின் மீது கும்­ப­லொன்று கடும் தாக்­குதல்

0 587

வட இந்­தி­யா­வி­லுள்ள வீடொன்­றினுள் புகுந்த கும்­ப­லொன்று பாகிஸ்­தா­னுக்குச் செல்­லுங்கள் என கூறி­ய­வாறு அங்­கி­ருந்த முஸ்லிம் குடும்­பத்தின் மீது ஹொக்கி விளை­யாட்­டுக்­கான தடி­க­ளாலும் இரும்புக் கம்­பி­க­ளாலும் தாக்­குதல் நடத்­தி­ய­தாக கடந்த சனிக்­கி­ழமை உள்ளூர் ஊட­கங்­களும் அதி­கா­ரி­களும் தெரி­வித்­துள்­ளனர்.

கடந்த வியா­ழக்­கி­ழமை இரவு பொன்­ஸியின் கீழுள்ள கிரா­மத்தில் கிரிக்கெட் விளை­யா­டு­வது தொடர்பில் வாக்­கு­வாதம்  ஏற்­பட்­டது. அதன்­போது 11 அங்­கத்­த­வர்கள் கொண்ட குடும்­ப­மொன்று காய­ம­டைந்­தது என ஹிந்­துஸ்தான் டைம்ஸ் தெரி­வித்­துள்­ளது. 25 தொடக்கம் 30 பேர் கொண்ட கும்பல் மேற்­கொண்ட தாக்­கு­தலில் இரண்டு வயதுக் குழந்தை உட்­பட இக் குடும்­பத்தைச் சேர்ந்த பல பெண்கள், சிறு­வர்கள் காய­ம­டைந்­தனர் என என்.டி.ரீ.யின் உள்ளூர் ஒளி­ப­ரப்பு தெரி­வித்­தது.

வடக்கு மாநி­ல­மான ஹரி­யா­னாவில் குரு­கிராம் பகு­தியில் பெரும்­பா­லான மக்கள் இந்துப் பண்­டி­கை­யான ஹோலிப் பண்­டி­கையைக் கொண்­டாடிக் கொண்­டி­ருந்த வேளையில் இத் தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர். உள்ளூர் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து கைது­களை மேற்­கொண்­டனர்.

ஆரம்­பத்தில் வாய்த்­தர்க்கம் ஏற்­பட்­டது. பின்னர் கைக­லப்­பாக மாறி­யது.

இதன் பின்னர் மேலும் ஆட்கள் திரட்­டப்­பட்டு தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது என குரு­கிராம் பொலிஸ் நிலைய பேச்­சா­ள­ரான சுபாஸ் போக்கன் தெரி­வித்தார். அவர்கள் முஸ்லிம் குடும்­பத்­தினர் வசித்த வீட்­டினுள் புகுந்து தாக்­குதல் மேற்­கொண்­டுள்­ளனர்.

வழக்கு பதிவு செய்­யப்­பட்டு விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. தம்மை பாகிஸ்­தா­னுக்குச் செல்­லு­மாறு கூறியே தம்­மீது தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக பாதிக்­கப்­பட்டோர் தெரி­விக்­கின்­றனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.